சான்மீனா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் – 45 நாட்களாக தொடரும் வேலை நிறுத்தம்

2008ல் சான்மீனா தொழிற்சாலை தொடங்கியதில் இருந்து தொழிலாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக போராட்டம் செய்து வருகின்றனர். அப்போது இங்கு வந்து பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்கனவே இதர தொழிற்சாலைகளில் பணிபுரிந்து அனுபவம் இருந்தது. இவ்வாறு 10க்கும் மேற்பட்ட வருடங்கள் அனுபவம் பெற்ற தொழிலாளர்களின் ஊதியம் ரூ12000 முதல் ரூ16000 வரை தான். இதை தவிர நிர்வாகம் தொழிலாளர் விரோதப் போக்குகளை கடைபிடித்து வருகிறது.

 

• பெரும்பான்மை தொழிலாளர்களின் சங்கமான ஏஐசிசிடியு சங்கத்தை ஏற்க நிர்வாகம் மறுத்து வருகிறது. தொழிற்சங்கத்தில் ஈடுபடும் தொழிலாளர் தலைவர்கள் 30 பேரை கட்டாய ஓய்வில் வைத்துள்ளது.
• நிரந்தரத் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் அளித்து (ஏசுளு) அவர்களுக்கு பதிலாக குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை வைப்பதற்கு முயற்சித்து வருகிறது. 1500க்கும் மேலை நிரந்தரத் தொழிலாளர்கள் பணிபுரிந்த நிறுவனத்தில் தற்போது 350 பேரே உள்ளனர்.
• நிர்வாக அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் தொழிலாளர்களை இழிவாக பேசுவது அதிகரித்துள்ளது.
• ஏப்ரல் மாதத்தில் தொழிலாளர்கள் 4 நாள் போராட்டம் நடத்தியதற்கு 21 நாள் ஊதியத்தை பிடித்துள்ளது.
• கழிப்பறை முன் கட்டாய பதிவு இயந்திரத்தை வைத்த கழிப்பறை செல்வதை நிர்வாகம் கண்காணித்து வருகிறது.
• குறைவான ஊதியம் என்ற பிரச்சனையை நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் கொண்டு சென்றபோது, ஒன்று ழுவு செய்யுங்கள் அல்லது ஏசுளு வாங்கிக்கொள்ளுங்கள் என்று நிர்வாகம் சொல்லியிருக்கிறது.

இதை எதிர்த்து சுமார் 280 நிரந்தரத் தொழிலாளர்கள் நவம்பர் 21 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறுவிதமான சஸ்பென்ஷன் தண்டனைக்கு ஆளானவர்கள். கூலி உயர்வு, ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம், இடை நீக்கங்களையும் கட்டாய ஓய்வையும் திரும்பப் பெறுவது கடந்த முறை நடைபெற்ற 4 நாள் வேலைநிறுத்தத்திற்காகப் பிடித்தம் செய்யப்பட்ட 21 நாள் சம்பளத்தைத் திரும்பத் தர வேண்டும் ஆகியவைதான் தொழிலாளர்களின் கோரிக்கைகள். தொழிலாளர்கள்– நிர்வாகம்– தொழிலாளர் துறை என்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் பற்பல நடந்தும், வெகு நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத கோரிக்கைகளுக்காகத்தான் வேலைநிறுத்தம் துவங்கியது.கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு நூதனப் போராட்டங்களை தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்ததில் இருந்து தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பல்வேறு பிரச்சாரங்களை நடத்தி, பொதுமக்களிடம் இருந்தும் தொழிலாளர்களிடம் இருந்தும் வேலைநிறுத்த நிதி அன்பளிப்பையும் ஆதரவையும் கோரினர்.

This slideshow requires JavaScript.

நவம்பர் 21 முதல் கட்டாய ஓய்வில் இருந்த அனைத்து தொழிலாளர்களை தவிர மற்ற அனைத்து தொழிலாளர்களும் தொழிற்சாலைக்குள்ளேயே வேலை நிறுத்தத்தை நடத்தினர். தாசில்தார், காவல்துறை என அனைவர் மிரட்டியும் தொழிலாளர்கள் நகரவில்லை. நிர்வாகம் நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கிய பின்னரே தொழிலாளர்கள் வெளியே வந்தனர்.

டிசம்பர் 4 அன்று தொழிலாளர் கண்காணிப்பாளர் அலுவலகத்தை(DISH) முற்றுகையிட்டனர். தங்களுக்கு பதிலாக ஒப்பந்தத் தொழிலாளர்களை நிர்வாகம் ஈடுபடுத்துவதாக அவர்கள் புகார் அளித்த மறுநாள் தொழிற்சாலையில் ஆய்வு நடந்தது.

டிசம்பர் 6 அன்று தொழிலாளர்கள் தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொழிலாளர் துறையா? முதலாளிகள் துறையா? எனும் கேள்வி கொண்ட ஒரு சுவரொட்டியை தொழிலாளர் துறை அலுவலகத்தின் முன்னர் தொழிலாளர்கள் ஒட்டியது முக்கிய நிகழ்வாகும்.

This slideshow requires JavaScript.

இப்போராட்டங்களில் பலவித வண்ண போஸ்டர்களை கையால் வரைந்து தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளையும் அரசியல் உணர்வுகளையும் வெளிப்படுத்தினர்.

This slideshow requires JavaScript.

டிசம்பர் 18 அன்று தலைமைச் செயலகத்தையும், 19 அன்று அமெரிக்க தூதரகத்தையும்(சான்மீனா அமெரிக்க நிறுவனமாகும்) தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். இருநாளும் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

This slideshow requires JavaScript.

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டதனால் சென்னை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டிசம்பர் 27 அன்று அன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர். 10 வருடங்கள் வேலை செய்த தொழிலாளர்களுக்கு 15000தான் ஊதியமா என்று துணை முதல்வர் கேட்டதாக தொழிலாளர்கள் கூறினர். தொழிலாளர்கள் கோரிக்கைகளை தொழிலாளர் துறை மூலம் சமரசம் செய்யவேண்டும் என்றும் துணை முதல்வர் கூறியுள்ளார்.

Sanmina Worker speaks at the protest meeting

ஜனவரி 2 அன்று தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூரில் பகுதி தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஹுண்டாய், பிரிக்கால், சிஎன்எஃப், எம்ஆர்எஃப், ஏசியன் பெயின்ட்ஸ், டெனகோ, கோமாட்ஸ் ஆகிய தொழிற்சாலைகளில் இருந்து தொழிலாளர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Workers from various factories in Chennai raise slogans against Sanmina and State Government

அரசு அனுமதி வாங்கி போராட்டம் செய்யும் கலாச்சாரத்தின் நடுவில் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு கைது செய்யவும் தயாராகி சான்மீனா தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். தொழிலாளர்களின் போராட்டத்தை கண்டு வெகுண்டுள்ள நிர்வாகம் 90 தொழிலாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது. அதில் 30 பேரை மீண்டும் வேலைக்கு எடுக்க மாட்டோம் என்று கூறியுள்ளது. அரசு இயந்திரமோ உள்ளே ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கும் நிர்வாகத்தை இது தொழிலாளர் விரோதப் போக்கு எனக் கண்டித்து நிர்வாகத்தின் மேல் நடவடிக்கை எடுக்காமல் பேச்சுவார்த்தை கூட்டத்தை மட்டும் கூட்டி வருகின்றது. தொழிலாளர்கள் சொன்னபடி, தொழிலாளர்கள் துறை முதலாளிகளுக்காகவே செயல்படுகிறது. நியாயமான கோரிக்கைகளை வெல்வதற்கு சான்மீனா தொழிலாளர்கள் உறுதியுடன் போராடி வருகின்றனர்.

This entry was posted in Electronics Industry, Factory Workers, News, Strikes, தமிழ் and tagged , , . Bookmark the permalink.