தொழிலாளர்களை சுரண்டும் பங்களாதேஷ் தொழிற்சாலைகளில் வால் மார்ட்டின் பங்கு: தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான வால்மார்ட்டின் குற்றங்கள்

The following is a translation of the article ‘Wal-Mart’s Crimes in the exploitation of Bangladeshi’s Workers: Class War Crimes‘ by Natasha Lennard, assistant news editor of Salon and appeared in revolutionaryfrontlines.wordpress.com.

கடந்த மாதத்தில் 112 தொழிலார்களை கொன்ற ஆடைகள் தைக்கும்(கார்மன்ட்) தொழிற்சாலையில் உள்ள பாதுகாப்பு முறைகளை மேம்படுத்துவதற்கு வேண்டிய தொகையை செலவு செய்வதற்கு வால்மார்ட் மறுத்துவிட்டது. தொழிற்சாலையின் பாதுகாப்பை அமைப்பதற்கு மிகவும் செலவாகும் எனவும் அதனால் தேவையில்லை எனவும் வால்மார்ட் முடிவு செய்தது.

(இந்த கட்டுரை சலூன் ஆங்கில பத்திரிக்கையின் உதவி ஆசிரியர் நடாஷா லெனார்ட் அவர்களால் எழுதப்பட்டு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது).

கடந்த வருடம் 2011 ஏப்ரல் மாதத்தில் பன்னாட்டு சில்லரை வணிக நிறுவனங்கள் வால் மார்ட், காப், டார்கட், ஜெ.சி.பென்னி பங்களாதேஷின் தலைநகரம் டாக்காவில் கார்மன்ட் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு குறித்து சந்தித்தனர். இந்த சந்திப்பின் குறிப்பை புளும்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் தொழிற்சாலைகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் திட்டத்தை வால்மார்ட் முறியடித்ததை கோடிட்டுள்ளது.

கடந்த மாதம் வால்மார்ட்டிற்கு விநியோகிக்கும் ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 112 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். தீ விபத்திலிருந்து தப்புவதற்கு தொழிற்சாலையில் எந்த வழியும் ஏற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2005லிருந்து பங்களாதேஷ் கார்மன்ட் தொழிற்சாலைகளில் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்துள்ளனர். இருப்பினும் பாதுகாப்பிற்கான செலவுகளுக்கு பொறுப்பு எடுப்பதற்கு வால்மார்ட்டும் காப் நிறுவனமும் மறுத்துவிட்டதாக இந்த குறிப்புகள் எடுத்துரைக்கின்றன. ‘குறிப்பாக தொழிற்சாலைகளின் மின்சார சாதனங்கள் மற்றும் தீ விபத்தை தடுக்கும் பாதுகாப்புகளை 4500 தொழிற்சாலைகளில் அமல்படுத்துவது என்பது மிகவும் செலவீனமாகவும் இதை பிராண்ட் நிறுவனங்களால் ஈடுகட்ட முடியாது எனவும்’ இந்நிறுவனங்களின் குறிப்புகள் கூறுகின்றன.

தொழிலாளர்களின் உரிமைகளுக்கான கூட்டமைப்பின்(Workers Rights Consortium) இயக்குனர் ஸ்காட் நோவா ‘தொழிற்சாலைகளில் பாதுகாப்புகளை பலப்படுத்தாத எந்த ஒரு நிறுவனமும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டுள்ளதாக கூறமுடியாது’ எனக் கருதுகிறார். ‘(பங்களாதேஷில் உள்ள) இந்த தொழிற்சாலைகள் மிகவும் பாதுகாப்பற்றவை. பாதுகாப்பை பலப்படுத்த மிகவும் செலவு செய்யவேண்டும். அதற்கு செலவு செய்ய நாங்கள் தயாராக இல்லை. ஆனால் இந்த தொழிற்சாலைகளை நாங்கள் உபயோகித்து வருவோம்’ என்பதே வால் மார்ட்டின் நிலைப்பாடு என நோவா கூறுகிறார்.

 

This entry was posted in Factory Workers, Garment Industry, News, Retail Sector, Worksite Accidents/Deaths, தமிழ் and tagged , , , , , , . Bookmark the permalink.