தற்பால் ஈர்ப்பாளர்கள் சுரங்கத் தொழிலாளர்களை ஆதரிக்கின்றோம் – Pride சினிமா விமரிசனம்

உங்களைவிட பெரிய, வலிய எதிரியிடம் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் பொழுது, உங்களுக்கே தெரியாமல் உங்களுக்கு ஒரு நண்பர் இருக்கிறார் என்று அறிய வரும்பொழுது கிடைப்பதே உலகின் உன்னதமான உணர்வு நிலை ஆகும். எல்லாரும் ஒன்றாக இணைவதன் மூலம், இங்கு நாம் என்ன செய்துள்ளோம் என்பதை உங்களால் உணர முடிகிறதா? நாம் வரலாற்றை உருவாக்கியுள்ளோம். – டாய், சுரங்கத்தொழிலாளி

சுரங்கத்தொழிலாளியான டாய், இதற்கு முன்னர் தான் எந்த ஒரு தற்பால் ஈர்ப்புள்ள மனிதரையும் சந்தித்ததில்லை என்று லண்டன் தற்பால் ஈர்ப்பு போராளியான மார்க்கிடம் கூறுகிறார். அதற்கு மார்க் “பரவாயில்லை டாய், நான் கூட இதற்கு முன்னர் எந்த ஒரு சுரங்கத்தொழிலாளியையும் சந்தித்ததில்லை” என்று பதிலளிக்கிறார். நகர்ப்புற தற்பாலீற்ப்பு போராளி குழுவும் கிராமப்புற சுரங்கத் தொழிலில் ஈடுபடும் மற்றொரும் குழுவும் தங்கள் மீது ஒடுக்குமுறையை ஏவும் பாரம்பரிய அரசியல் பொருளாதாரத்திற்கு எதிராக தங்களை இணைத்துக் கொள்ள முடியுமா? அடிப்படை பந்தங்கள் தற்போது நிலவும் மனப்பான்மையை உடைத்தெறியுமா? அப்படி உடைபடும் தடைக்கற்கள், ஒரு நாட்டின் வரலாறை பெரும் அளவில் மாற்றியமைக்க முடியுமா?

Source: http://www.pinknews.co.uk/2014/09/18/i-feared-the-story-of-pride-could-have-been-lost-forever/

மாற்றியமைக்க முடியும் என்கிறது ப்ரிட்டானியத் திரைப்படமான Pride. மாபெரும் சுரங்கப் போராட்டத்தின் போது, லண்டனைச் சேர்ந்த பாலின போராளிகளுக்கும் வேல்ஸ்(Wales) சுரங்கத் தொழிலாளிகளுக்கும் இடையே மலரும் ஒற்றுமையைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது, அதனூடே, வரலாற்றின் முக்கியப் பாடம் ஒன்றையும் கற்றுக் கொடுத்துள்ளது. உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இது 2014-இல் படமாக்கப்பட்டது. 1984இல் தாட்சரின் ஆட்சிகாலத்தின் பொழுது, ஆங்கில உழைக்கும் வர்க்கத்தின் மீது பெரும் ஒடுக்குமுறை ஏவப்பட்டது. வடக்கு இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தில் நிறைய சுரங்கங்கள் மூடப்பட்டன. இதனால் சுமார் 20,000 தொழிலாளர்கள் வேலையிழந்தனர். அரசின் செயல்களை முடக்கவேண்டி, தேசிய சுரங்கத் தொழிலாளிகள் சங்கம் பெரும் வேலை நிறுத்தத்தை அறிவித்தது.

ஒற்றுமையின் காலவரிசை

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது வன்முறையை ஏவும் தாட்சரின் காணொளியை, தற்பாலீர்ப்பு போராளியான மார்க் ஆஷ்டன் காண்பதிலிருந்து திரைப்படம் தொடங்குகிறது. சுரங்கத் தொழிலாளிகளையும் தங்களையும் ஒடுக்குபவர்கள் ஒருவரே என்பதால், சக போராளிகளிடமிருந்து சுரங்கத் தொழிலாளிகளுக்காக நிதி வசூல் செய்கிறார். அது தான் சரியானது என்று அவர் நம்புகிறார்.

மார்க் : நம்மைப் போலவே சுரங்கத்தொழிலாளிகளும் கேலிக்குள்ளாகின்றனர். அவர்களுக்குத் தேவையானது எல்லாம் பணம் தான்.

ரே : எப்பொழுதுமே அவர்கள் நமக்காக வந்துள்ளார்கள், இல்லையா?

மார்க் : அது முக்கியமில்லை. இப்படி செய்வது தான் சரியானது.

அரசு இயந்திரத்தின் தற்பாலீர்ப்பு எதிர்ப்பு மனப்பான்மையைப் பிரதிபலிக்கும் சங்கங்கள் இத்தகைய போராளிகளுடன் நடைபாதையைப் பகிர்ந்து கொள்ள தயாராக இல்லை. வேல்ஸில் உள்ள ஓன்ல்வின் எனும் சுரங்க கிராமத்தை அடைய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இப்போராளிகள் தள்ளப்படுகின்றனர். அதன் மூலம் ஒரு இறுக்கமான சூழல் அவர்களுக்கிடையே உருவாகிறது. டாய், க்வென், சியன், ஹெஃபினா, க்லிஃப் முதலிய தொழிலாளர்கள் அவர்களைத் தங்கள் வீடுகளில் தங்க வைத்துக் கொள்கின்றனர். ஆனால் பெரும்பான்மையினர், எவ்விதத்திலும் அவர்களுக்கு உதவ முன் வரவில்லை. போதுமான உதவிகள் இல்லாதபோது, ஐந்தில் ஒரு ஆங்கிலேயன் தற்பாலீர்ப்புடையவன் என்றும், சுரங்கத் தொழிலாளிகளில் ஒருவன் அத்தகையவன் என்றும மார்க் தொழிலாளர்களிடம் கூறுகிறார்.

சுரங்கக் குழுமத்தினுள், பெண்களுக்கே முடிவெடுக்கும் சக்தி உண்டு. தொழிலாளர் கட்சியின் எம்.பியாக பின்னாளில் மாறும் சுரங்கத் தொழிலாளியின் மனைவியான சியன் மற்றும் ஹெஃபினா இருவரும் தற்பாலீர்ப்பு சமூகத்தின் தீவிர ஆதரவாளர்கள் ஆவர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்கு நிதி திரட்டும் கமிட்டியில் இருக்கும் இவர்களுக்கு, பாலின சமத்துவத்திற்காகப் போராடும் இப்போராளிகளின் நிதி உதவியும் ஆதரவும் எவ்வளவு முக்கியமானது என்பது புரியும். நிதி திரட்டும் பொருட்டு நடத்தப்படும் இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு பெண்கள் அழைக்கப்படுகின்றனர், இதன் மூலம் அவர்களுக்கிடையே நட்பு தீவிரமடைகிறது.

இன்னொரு புறம், சுரங்கத் தொழிலாளியின் விதவையான மரியன் இந்த இரு குழுக்களுக்குமிடையேயான ஒற்றுமையே எதிர்க்கிறார். இப்போராளிகளுக்கு வேறு ஏதேனும் ஒரு திட்டம் இருக்கும் என்று அஞ்சும் அவர், அவர்களுடன் பழகத் தயாராக இல்லை. பிற பால் ஈர்ப்புடையவர்கள் சமூகத்தினுடனான உறவின் காரணமாக தொழிலாளர் சங்கமும் பிற சுங்க சங்கங்களும் ஓன்ல்வென் சமூகத்தை ஒதுக்குகின்றனர். இது அவர்களுக்கிடையே பிளவை ஏற்படுத்துகிறது. நிதி திரட்டுவதற்கு அவர்கள் அளிக்கும் அளப்பரிய ஆதரவாலும், சுங்கத் தொழிலாளர்களின் பிற பிரச்சனைகளை தங்கள் சமூகத்திற்குள் எடுத்துச் சென்றதாலும், இரு சமூகத்திற்கும் இடையே நிலவிய முரண்பாடுகள் சிறிதளவில் குறைகின்றன.

இத்தகைய சமூகங்கள் சந்திக்கும் இன்னல்களையும் இப்படம் படம்பிடித்துள்ளது. அவ்வூரிலுள்ள பலரின் உயிரை மாய்த்த அச்சுரங்கங்களில் வேலையிழைக்கும் போது, அப்பணியைக் காப்பற்றிக்கொள்ளும் பொருட்டு போராடுவது எவ்வளவு முரண்பாடுடையதாயினும் அதுவே அவர்கள் வாழ்க்கை. மாற்று பாலினத்தாருள் லெஸ்பியன்கள் புறக்கணிக்கப்படுவதற்கு எதிராக போராடுவதோடு நின்றுவிடாமல், அவர்களைச் சூழ்ந்துள்ள உடல்நலச் சிக்கல்களையும் சமாளிக்க வேண்டியுள்ளது. மார்க்கும் இதற்கு விதிவிலக்கல்ல. போராட்டம் தொடங்கிய 18 மாதங்களுள் அவர் எய்ட்ஸால் இறந்துவிடுவதாக இத்திரைப்படம் காட்டுகிறது. தற்பாலீர்ப்பால் அவருக்கு எய்ட்ஸ் வரவில்லை. மாறாக, பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாகவே அவர் எய்ட்ஸால் பாதிப்படைகிறார்.

தோல்வியடைந்த போராட்டம், வென்றெடுக்கப்பட்ட உள்ளங்கள்

சுமார் ஒரு வருடம் நீடித்ததால், சுரங்கத் தொழிலாளிகளின் போராட்டம் கசப்படைந்தது. தாட்சர் வேலை நிறுத்தத்தை அனுமானித்திருந்தார். எனவே கரியை சேமித்து வைத்து, அரசு இயந்திரத்தைக் கொண்டு தொழிலாளிகளின் போராட்டத்தை ஒடுக்கினார். ஒருவருடத்திற்குப் பின், சங்கத்தின் நிதி தீர்ந்து போனதால், வேலை நிறுத்தத்தைக் கைவிட்டுவிட்டு, தொழிலாளர்கள் திரும்பிச் சென்றனர். ஆனால் இப்போராட்டம் வெற்றியே கண்டது. தற்பால் ஈர்ப்பாளர்களின் பிரச்சனைகளை நோக்கி தொழிலாளர்களைத் திரும்ப வைத்ததே போராட்டத்தின் வெற்றி. அதன் பின் 1985இல் நடந்த பிரைட்(Pride) பேரணியில் பல சுரங்கத் தொழிலாளர்களும் பங்குகொண்டு தங்களது ஆதரவை பதிவு செய்தனர்.

இங்கிலாந்தின் பெரும்கட்சிகளில் ஒன்றான, சுரங்கத்தொழிலாளர்களின் தேசிய சங்கம் (தொழிலாளர் கட்சி), வரலாற்றில் முதன்முறையாக, தற்பால் ஈர்ப்பாளர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியது.

மாற்றுச் சமூகத்திற்கான கூட்டணிகளைக் கட்டமைத்தல்

80களில் இங்கிலாந்தில் மையம் கொண்டிருந்த தாட்சரிஸம் தற்போது இந்தியாவில் தன் வேலையை காட்டுகிறது. கடந்த மூன்று வருடங்களாக தொழிலாளர் வர்க்கம் மீது நவதாராளவாதம் ஒடுக்குமுறையை நிகழ்த்தி வருகிறது. அதிகாரத்தில் இருக்கும் பிரதம மந்திரி மோடியோ, குஜராத் மாதிரியை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த எத்தனித்துள்ளார். மோடி ஆட்சியின் கீழ், தொழிலாளர் உரிமைகள் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் வேலையிழப்புகளும் நிலையற்ற பணி நிலைமைகளும் அதிகரித்துள்ளன. 2002 இல் குஜராத்தில் தொடங்கப்பட்ட முஸ்லிம்கள் மீதான வன்முறை, பசு பாதுகாப்பு என்ற பெயரில் இன்று தொடர்கிறது. இந்து கலாச்சார மேலாதிக்கத்தை நிறுவ முயலும் RSSஇன் திட்டத்திற்குள் வர மறுக்கும் தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்கள். மேலும், மாற்று பாலினத்தாரும், 377 சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக்கப்படுகிறார்கள். தாங்கள் யாரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மானிப்பதாலேயே பெண்கள் துன்புறுத்தலுக்காளாகிறார்கள்.நாம் என்ன செய்ய வேண்டும், யாரை காதலிக்க வேண்டும், நமது சொந்தங்கள் யார், நாம் யாரை வணங்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பவரளாக அவர்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். நாம் எத்தகைய ஒடுக்குதலுக்காளாகிறோம் என்பதையே இவை குறிக்கிறது.

தனி நபர்கள் மற்றும் குழுக்களாக, சங்கங்கள், தொழிலாளர்கள், தற்பாலீர்ப்புடையவர்கள், தலித்துகள், முஸ்லிம்கள், பெண்கள், மக்கள் இயக்கங்கள், அனைவரும் தத்தம் வாழ்க்கையில் அன்றாடம் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சில போராட்டங்களில் வெல்கிறோம், சிலவற்றில் தோற்கிறோம், சில போராட்டங்கள் வெல்லப்பட்டாலும், புதிய தாக்குதல்கள் நம்மீது திணிக்கப்படுகின்றன.

ஆனால் நம்மை நாமே ஒரு கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும்: நம்மை ஒடுக்குபவர்களை வெல்வது மட்டுமா இங்கே நமது குறிக்கோள் ? நமது குழுக்கள், சங்கங்கள், இயக்கங்கள், பொது மக்கள் குழுக்கள் என எவையாக இருப்பினும், அவை அரசிடம்((இவை பெரும்பாலும் நமக்கு எதிராக செயல்படும் நிலையிலும்)) கோரிக்கைகளை விடுக்கும் பணியில் நிர்வாகமையமாகிவிட்டன.

இதில் Pride நிகழ்வு நமக்கு ஒரே செய்தியை அளிக்கிறது. வெற்றியோ தோல்வியோ, நமது பாதையில் நமக்குக் கிடைக்கும் நண்பர்களை நாம் இறுதி வரை காக்கவேண்டும். நம்மை ஒடுக்குபவர்கள் ஒருவரே என்பதற்காக மட்டுமல்லாமல், நாம் வாழ விழையும் சமூகம் சமத்துவம், சகோரத்துவம், சுதந்திரம் நிறைந்ததாக இருக்க வேண்டும் எனில், நாம் ஒருவருக்கு ஒருவர் துணையாக நிற்போம்.

This entry was posted in Art & Life, Featured and tagged , , . Bookmark the permalink.