The disappearing livelihood of Fish Workers – Workers Narratives

Saravanan is environmental activist and resident of Urur Kuppam, a fishing hamlet in Besant Nagar, Chennai. He has been documenting the impact on fishing livelihoods due to sewage pollution in the Adyar River caused by illegal discharge by Chennai Metro Water, Corporation of Chennai and hotels along the canal. According to the fishing community, the number of fishers have dwindled to 30 due to the loss of fishes in this stretch. The following are narratives of some of the workers he has documented.

மு. செல்வராஜ்(வயது 55)

தலைமுறை தலைமுறையாக தொழில் செய்றோம். நான் 35 வருசமா தொழில் பன்றேன். அப்ப ஆத்ல புல்லா எடத்துக்கும் போவேன். அந்த நாள்ள மடவ, எறா, ஆத்து நண்டு, கெழங்கான் மீனு, போடி சாலா, கெழுத்தி, கிசான், மோராகெண்டை இதெல்லாம் புடிச்சியிருக்கேன்.

இப்போ மடவை மீனு மட்டும் தான் மாட்டுது வேற எந்த மீனும் மாட்ட மாட்டுது. இப்போ மீனோட பொறப்பே கிடையாது. நாத்த தண்னி வரதனால மீனேல்லாம் ஓடி போது. மீனே கிடைக்கல போன வருசமாச்சி கொஞ்சம் கேடச்சுது இந்த ஒரு வருசம் புறாவே கிடைக்கல.

நான் புடிக்கிற மீனை என் மனைவி விப்பாங்க. எங்கிட்ட கட்டு மரம், கெண்டவலை, கச்சா, கொண்ட வல, கெழங்கான் வல எல்லாம் இருக்கு. அப்ப வல கூட்னா ஒரு ரெண்டு வருசம் வரும். இப்ப அருப்பு ரொம்ப இருக்கு, எதுவுமே சுத்தம்  இல்ல, முள்ளு, குப்ப எல்லாம் இருக்கு. வலயே கட்டுறதுக்கு இல்ல வல விட்டா கூட முள்ளு மாட்டி கிழிஞ்சி போது. நாத்த தண்ணியால சிக்கிறம் மக்கி பொது.  அப்ப தொழில் பன்னும் போது ஒன்னுமே ஆகாது. இப்போ தொழிலுக்கு போகவே பிடிக்கல தொழில் பன்னா கூட ஒடம்பெல்லாம் எரியுது.

ரா.காட்டாண்டி (வயது 31)

தலைமுறை தலைமுறையாக இந்த ஆத்தில் தொழில் செய்கிறோம். நான் 20  வருசமாக இந்த ஆத்தில் தொழில் செய்கிறேன். அப்ப இந்த ஆறு ஒரு அளவுக்கு சுத்தமாகயிருந்தது.அப்ப அடையார் பிரிஜி வரைக்கும் போயி தொழில் செய்தேன். அந்த நேரத்துல மடவை, எறா, ஆத்து நண்டு, கெழங்கான், கட்லா எல்லாம் பிடிச்சேன்.

இப்ப காவ தண்ணி ஆத்துல அதிகமா கலக்குறதுனால ஆத்துல தொழில் செய்ய முடியல. ஆத்துல கக்கூஸ் தண்ணி, மலர் ஆஷ்பிட்டல் தண்ணி, புத்து நோய் ஆஸ்பிட்டல் தண்ணி, இங்கயிருக்க பில்டிங் தண்ணி எல்லாம் ஆத்துல விடறதனால மீன்கள் அதிகமா கிடைக்கிறதுயில்லை எல்லாம் செத்து போதுங்க. இப்ப குறிப்பா மடவை மீன் மட்டுதான் பிடிக்கிறேன், அதுவும் முகத்துவாரத்தில் மட்டும் தான் பிடிக்கிறேன்.இந்த மூனு மாதத்தில் கெழங்கா மீன் கிடைக்கும்.

இப்போ ஆத்துல தொழில் செய்ய முடியல ஆத்துல நாத்த தண்ணியும், சேறும், முள்ளு,குப்ப, கண்ணாடி துண்டுடெல்லாம் இருக்கு. கடல் தண்ணியும் ஆத்து தண்ணியும் சேருமிடத்தில் மட்டும்தான் தொழில் செய்கிறேன். பஸ்டெல்லாம் ஆத்துல தொழில் செய்தா எதுவுமே ஆவாது இப்போ எல்லாம் ஆத்து தண்­ணில
கொஞ்சம் நேரம் இருந்தாக்க ஒடம்பெல்லாம் சொரிய தோனும் எரியும்.
வருமானமே இல்ல போன வருசத்த விட இந்த வருசம் சுத்தமா வருமானமே இல்லை. போன வருசம் 6 மாதத்துல30,000 ரூபாய் கிடைச்சுது இப்ப 3 மாசம் ஆச்சி 4000 ரூபாய் கூட சரியாசம்பாதிக்கல. நான் பிடிக்கிற மீனை என் மனைவி அருள்செல்வி சீனிவாசபுரம் மார்கெட்டில் விப்பாங்க.

எங்கிட்ட கெண்ட வலை மட்டும் தான் இருக்கு. அப்ப வலை கூட்னா ஒரு வருசம் இரண்டு வருசம் வரும் இப்ப ஆறு மாசம் வருதே பெரிய விஷயமாக இருக்கு. ஆத்துல சாக்கடை தண்ணி விடுறதனால ஆறு புல்லா குப்பைய ஆச்சி , சேறு முள்ளு அதிகமாயிருக்கு வலை விட்டாகூட குப்பையிலேயும் முள்லேயும் மாட்டி கிழிஞ்சி போது. தண்ணி சரியில்லதனால சிக்கிரம் மக்கி போது.

சென்னையா(வயது 35)

தலைமுறை தலைமுறையாக தொழில் செய்கிறோம். நான் ஒரு 28 வருசமா தொழில் செய்றேன். அப்ப இந்த ஆத்துல அடயார் பிரிட்ஜ் வரக்கும் போயி வல கட்டுவேன். இப்ப அங்கெல்லாம் போக முடியல.

புல்லா கச்சடா தண்ணிங்க, புத்து நோய் ஆஸ்புட்டல் தண்ணிங்க, காவா தண்ணிங்க எல்லாம் விட்டதனால ஆறு புல்லா கெட்டுப்போச்சு.

அப்ப மடவ, சிப்பிலி, ஆத்து நண்டு, கிசான், மோறான் கெண்ட, எறா இது போல நெரிய கெடைக்கும். இப்ப அதிகமா மீனோட பொறப்பே இல்ல எல்லாம் செத்து போதுங்க. இப்ப முகத்துவாரத்துல மட்டும் தான் தொழில் பண்றேன். மடவ மீன் மட்டும் தான் கெடைக்குது.

இந்த வருசம் வருமானமே இல்ல காலையிலிருந்து இப்ப வரைக்கும் வல விடுறேன் சாப்பாடுக்கு கூட கெடைக்கில. மீனோட பொறப்பு இருந்தாதானே வருமானம் இருக்கும் இல்லனா எப்படியிருக்கும்? நான் புடிக்கிற மீனை என் மனைவி பார்வதி விப்பாங்க.

எங்கிட்ட கெண்ட வல, கொண்ட வல இருக்கு. அப்ப வல கூட்னா ஒரு வருசமாச்சி வரும். இப்ப வல கூட்னா ஐந்து ஆறு மாசம் கூட வரதில்ல. ஆத்ல புல்லா சேறு, முள்ளு, கெமிக்கல் தண்ணி அதிகமா இருக்குறதுனால வல சீக்கிரம் மக்கி போது. அப்ப தொழில் செய்யும் போது எந்த பிரச்சனையும் இருக்காது. இப்ப ஒடம்புல அரிப்பு அதிகமா எடுக்குது.

கோவிந்து(வயது  42)
ஆத்துல தலைமுறை தலைமுறையாக தொழில் செய்கிறோம். நான் ஒரு 20, 25 வருசமா தொழில் செய்கிறேன். ஆத்துல அப்ப எல்லாம் அடையார் பிரிஜி எல்லாம் தாண்டி போய் தொழில் செய்வோம். இப்ப எல்லாம் உப்பு தண்ணி எந்த அளவுக்கு போதோ அந்த அந்த அளவுக்கு தான் மீன் பிடிக்கிறேன். இப்ப 200 மீட்டருக்கு மேல மீன் பிடிக்க முடியாது.

அதுக்கு மேல ஆஸ்பித்திரி தண்ணி, கக்கூஸ் தண்ணி எல்லாம் விட்டதனால ஆறு கெட்டுப்போச்சி, மீனோட பொறப்பு வளப்பே இல்ல. வருசம் வசீருசம் எறா பிடிப்போம் இந்த வருசம் அதுகூட கிடையாது. போன வருசம் கொஞ்சம் வருமானம் கிடைத்தது இந்த வருசம் வருமானமே இல்லை.

மழ காலத்துல ஏரி தண்ணி தொரந்து விடுவாங்ககா அப்ப கட்ல மீன் பிடிப்போம் இந்த வருசம் அது கூட இல்ல. அப்ப எல்லாம் மடவை, கெழுத்தி, கெழங்கா, ஏறா, ஆத்து நண்டு, மொறான் கெண்டை, பச்சை குட்டி, பொடி பாறை இதெல்லாம் கிடைக்கும். இப்ப மடவை,  கெழங்கா மீன் மட்டும் தான் கிடைக்குது.

அப்ப வல கூட்னா 2 வருசம் வரும். ஆத்து தண்ணி நல்லாயிருந்துது. ஆத்து தண்ணி கேட்டுபோனதனால இப்போ ஆறு மாசம் ஏழு மாசம் தான் வருது. எங்கிட்ட கட்டு மரம், கொண்ட வலை, கெழங்கா வலை இருக்கு.  நான் பிடிக்கிற மீனை என் மனைவி கலை செல்வி மந்தவெளி மார்கெட்டில் சேல்ஸ் பன்னுவாங்க.

அப்ப ஆத்துல தொழில் பன்னும் போது எந்த பிரச்சனையும் இருக்காது. ஆன இப்ப ஆத்துல தொழில் செய்யும் போது சுலு சுலுனு புடுங்கும்.

ச. மகேந்திரன் (வயது  46)

தலைமுறை தலைமுறையாக தொழில் பன்றோம். நான் 35 வருசமா தொழில் பண்றேன். இந்த ஆத்ல அடையார் பிரிட்ஜ் வரக்கும் போயி தொழில் பண்ணியிக்கேன். இப்ப முகத்துவாரத்துலயிருந்து உடைந்த பிரிட்ஜ் வரைக்கும் போயி தொழில் பண்றேன், காரணம் பாத்திங்கனா அழுக்கு தண்ணி விடறதனால தான்.

அப்ப மடவ, ஆத்து நண்டு, எறா, பச்ச குட்டி, அலாத்தி, கெழங்கான்,
கெழுத்தியெல்லாம் புடிச்சியிருக்கேன். இப்ப மடவ தான் அதிகமா கிடக்குது மத்த எந்த மீனும் அதிகமாகிடைக்கிறது இல்ல. ஆறு கேட்டுப்போனதனால தான் ஆத்து தொழிலே முடங்கி போச்சி, வருமானமே இல்ல. நான் பிடிக்கிற மீனை என் மனைவி (சாந்தி) தான் விப்பாங்க.

எங்கிட்ட கொண்ட வல மட்டும் தான் இருக்கு. அப்ப தண்ணி நல்லாயிருந்ததனால வல நாலு வருசம் கூட வந்தது. இப்ப நாத்த தண்ணினாலையும், தண்ணில மெடிசன் கலந்து இருப்பதனாலையும் வல சிக்கிரம் மக்கி போது. அப்ப தொழில் பன்னா எதுவுமே ஆகாது. இப்போ ஜொரம் எல்லாம் வருது.

This entry was posted in Art & Life, Fish Workers, Unorganised sector. Bookmark the permalink.