10 ஆண்டு சுனாமி நினைவஞ்சலி

26.12.14 வெள்ளிக்கிழமை அன்று 10ம் ஆண்டு சுனாமி தினத்தன்று நினைவஞ்சலி மனித சங்கிலி – உறுதியேற்பு நிகழ்ச்சி காலை 10.30 மணிக்கு முள்ளிக்குப்பம் சீனிவாசபுரம்
முள்ளிமாநகர் பட்டினப்பாக்கம், திருவான்மியூர் குப்பம், காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிpயில் கடலோர மக்களுடன் மீனவர் பஞ்சாயத்துக்கள், கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கம், ஊஊசுனு, இந்திய மீனவ மகளிர் தொழிற்சங்கம், தமிழ்நாடு உடல்உழைப்புத் தொழிலாளர் சங்கம்,Tsunami Anniversary Memorial பெண்ணுரிமை இயக்கம், கட்டடத் தொழிலாளர் பஞ்சாயத்து சங்கம், அமைப்பசாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நினைவஞ்சலி – உறுதியேற்பு நிகழ்ச்சியில் கீழ்கண்ட கோரிக்கைகள் பாதிக்கபட்ட மீனவர் – தொழிலாளர்களின் சார்பில் கோரப்பட்டன.
1. சுனாமி மறுவாழ்வு திட்டம் கடலோர அனைத்து மீன் – பிற அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக தேசிய பெண்கள் ஆணைய பரிந்துரைகளின்படி அமல்படுத்தப்பட வேண்டும். கடலோர பகுதிகளில் பாதுகாப்பான நிரந்தர குடியிருப்புகள் அடிமனைப்பட்டாவுடன் மக்களின் பங்கேற்புடன் வாழும் இடங்களில் அமல்படுத்த வேண்டும்.
2. அ. குடிசைப்பகுதிகளை அகற்றி நகரைவிட்டு துரத்தும் நவீன தீண்டாமையை கைவிட வேண்டும். வீடற்ற மீனவ பிற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வீட்டு  வசதி, குடிசைப்பகுதிகளுக்கு
அடிமனைப்பட்டா, மின்சாரம், சாக்கடை, கழிப்பிடம், குடிநீர், சாலை, குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் சொந்தமாக்குதல் அமல்படுத்த வேண்டும்.
ஆ. குடிசைப்பகுதிகளுக்கு பட்டா வழங்க ஏதுவாக ராஜீவ் குடியிருப்பு திட்ட மசோதா (2011) சட்டமாக்கப்பட வேண்டும்.
3. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பழைய வார்பை புதுப்பிக்கவும் மீன் – வலை படகு கட்டுதல், தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் கழிப்பிடம் ஓய்வறை அமைக்கப்பட
வேண்டும்.
4. தென் சென்னையில் மீன் தொழிலை பாதிக்கும் பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
5. கடலோர மக்களுக்கு நில உரிமை, குடியிருப்பு உரிமை, கடல் வளங்கள் மீதான உரிமைகளை உறுதி செய்ய மத்திய சட்டம் இயற்ற வேண்டும்.
6. தமிழக மீனவர்கள் பிரச்சனையை தீர்ப்பதற்கு கச்சத்தீவு மீட்க ப்பட்டு இந்திய – இலங்கை  இடையில் கடற்பரப்பு பொதுவாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு
வழங்கப்படவேண்டும்.
7. கடலோரத்தில் இறால் பண்ணைகள். அணுமின் நிலையங்கள், அனல்மின் நிலையங்கள் மற்றும்  மாசுபடுத்தும் தொழில்கள் அமைப்பதை தடை செய்ய வேண்டும்.
8. மீனவர் நலவாரியத்தை  அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த மீனவ தொழிலாளர்களையும் மீனவர்  நலவாரியத்தில் பதிவு செய்து விபத்து, இயற்கை மரணம், திருமணம், கல்வி உதவி  போன்றவற்றிற்கு விரைந்து பணப்பயன்கள் வழங்கிட வேண்டும்.
9. மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு போக்குவரத்து, கடன் உதவி செய்து தரப்பட வேண்டும்.

This entry was posted in Fish Workers, News, Unorganised sector, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.