On women, work and sweatshops

கார்மெண்ட்ஸ் அண்ட் பேஷன் ஒர்க்கர்ஸ் யூனியன் தாம்பரம் கிளை திறப்பு விழா மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுகூட்டம் 26.01.2013 சனிக்கிழமை காலை 72/3 , 4வது குறுக்கு தெரு, ரங்கநாதபுரம் ,,தாம்பரம் , சென்னை – 45 இல் நடைபெற்றது.
       கார்மெண்ட்ஸ் அண்ட் பேஷன் ஒர்க்கர்ஸ் யூனியன் அரசு பதிவு மற்றும் அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கம் . சாதி , மதம், கட்சிகளுக்கு , அப்பாற்பட்டு 2009லிருந்து கார்மெண்ட்ஸ் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களையும், ஆண்களையும் ஒருங்கிணைத்து ,அவர்களின் உரிமைகளுக்காகவும் ,சமூக பாதுகாப்பிற்காகவும் போராடி வருகிறது.வேலை செய்யும் இடத்திலும்,வசிக்கும் இடத்திலும் ஏற்படுகின்ற பிரச்னைகள் பற்றி விவாதித்து , சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வும் அடைய செய்து தொழிலாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் போராடுவது இச்சங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
       சென்னை,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ஆகிய மாவட்டத்தில் லட்சக்கணக்கான பெண்கள் கார்மெண்ட்ஸ் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். முக்கியமான MEPZ, மகேந்திரா சிட்டி போன்ற தொழிற்சாலைகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக கிராமப்புற பெண்கள் குறிப்பாக செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டம் கம்பெனி பஸ்ஸில் அதிக நேரம் பயணம் செய்து வேலைக்கு செல்கின்றனர்.
        பொதுவாக பெண்கள் எந்த துறையில் வேலை பார்த்தாலும் அங்கு குறைவான கூலியும் , பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும் நிலவுகிறது. இன்றளவும் பெண்கள் வறுமையிலும் , பயத்திலும் வாழ வேண்டியுள்ளது . ஏனென்றால் ,வேலை செய்யும் இடத்தில சட்டரீதியான விதிமுறைகள் இருந்தாலும் ,பெண்களுக்கு சட்டத்தை பற்றிய விழிப்புணர்வு இல்லாததாலும் அரசாங்கத்தின் தொழிலாளர் துறை இவற்றை சரியாக வழிமுறை படுத்தாததாலும் இது போன்ற நிலை நீடிக்கிறது.
      
 தமிழ்நாடு அரசாங்கம் 8 ஆண்டுகளாக குறைந்தபட்ச ஊதியத்தை விலைவாசி உயர்வுக்கேற்ப உயர்த்தவில்லை ; மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் கார்மெண்ட்ஸ் துறைக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு கூலி ரூ.136/-(basic + DA )குறைவான ஊதியம் கிடைப்பதால் OT யையும் , அட்டன்டென்ஸ் போனஸையும் நம்பி இருக்க வேண்டியுள்ளது. பல வருடங்களாக முதலாளிகளால் தடை செய்யப்பட்ட அரசாங்கத்தின் 2004ம் ஆண்டின் குறைந்தபட்ச ஊதிய உத்தரவை இச்சங்கம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து தடை உத்தரவை ஜூன் 2012இல் ரத்து செய்துள்ளது. 

ESI வசதி  அனைத்து தொழிற்சாலைகளிலும் இருக்க வேண்டும்.அதனால் தொழிலாளர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்திற்கும் இலவச மருத்துவ வசதி மற்றும்  பல்வேறு சலுகைகளும் கிடைக்கும்.இச்சங்கம் ESI  நிறுவனத்திற்கு இது விஷயமாக பல மனுக்கள் கொடுத்ததால் மகேந்திரா சிட்டி தொழிலாளர்களுக்காக செங்கல்பட்டில் ESI மருத்துவ வசதி வர இருக்கிறது.
     
  மேலும் அந்த விழாவில் கீழ்கண்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன ;

1. கார்மெண்ட்ஸ் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் வேண்டும், அரசாங்கம் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ .10,000 வழங்க வேண்டும்.
2. எல்லா தொழிலாளர்களுக்கும் உடனடியாக ESI வசதி வழங்க வேண்டும்.செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் பகுதியில் உடனடியாக ESI  டிஸ்பென்சரி அமைக்க வேண்டும்.
3. விசாகா விதிமுறையின் படி அனைத்து தொழிற்சாலைகளிலும் பாலியல் வன்முறை புகார் குழு தொடங்க வேண்டும், அதன் செயல்பாட்டை தொழிலாளர்துறை கண்காணிக்க வேண்டும்.  
This entry was posted in Garment Industry, News, Women Workers, Workers Struggles and tagged , , , , , , , , , . Bookmark the permalink.