இடம் பெயரும் தொழிலாளர்களின் குழந்தைகள் பாதுகாக்கப்படவேண்டும் – குழந்தைகளின் உரிமை பாதுகாப்பிற்கான தேசிய ஆணையத்திடம் கோரிக்கை

ஆந்திரபிரதேசம் மற்றும் வட இந்திய மாநிலங்களில் இருந்து பல்வேறு தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களோடு சென்னைக்கு வந்து கட்டுமானம், சேவை போன்ற பல வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர். தங்களுடைய பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் நிலையில் அவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லமுடியாமல், போதிய பராமரிப்பு இல்லாமல், வேலைக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டு வருகின்றது. இது குறித்து அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு மற்றும் இதர சங்கங்கள், பொது அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நடத்திய மாநாட்டில் குழந்தைகளின் உரிமை பாதுகாப்பிற்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் நீனா நாயக் கலந்து கொண்டார்.

கல்வி,சுகாதாரம்,உணவு, வீடு போன்ற அடிப்படையான தேவைகள் தங்களுக்கு மறுக்கப்படுவதை குறித்து சுமார் 300 குழந்தைகள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்த உரிமை மீறல்களை கொள்கைரீதியாக விளக்கிய ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் இடம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இடம் பெயர் தொழிலாளர்களுக்கான தனி ஆணையம் ஏற்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தினர். மேலே குறிப்பிடப்பட்ட பல பிரச்சனைகளை கலைவதற்கு பல்வேறு அமைச்சகரீதியான கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.

முந்தைய ஆட்சியில் இடம் பெயர் குழந்தை தொழிலாளர்கள் குறித்த கொள்கை அறிக்கை தற்போது கைவிடப்பட்டு விட்டதை கண்டித்த அமைப்புகள் கொள்கையை அமல்படுத்த கோரினர். மாநாட்டு கோரி;க்கைகள் குறித்து பேசிய உறுப்பினர் நீனா நாயக் இடம் பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு ஆணையம் நடவடிக்கைகள் எடுக்கும் என ஆதரவு தெரிவித்தார்.

மாநாட்டில் முடிவு செய்யப்பட்ட கோரிக்கைகள்
1. இடம் பெயரும் குழந்தை தொழில்முறையை தடுப்பதற்கான செயல் திட்டத்தை தமி;ழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும். இடம் பெயரும் தொழிலாளர்களின் குழந்தைகளை பாதுகாக்கவும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், இடம் பெயர் தொழிலாளர்களின் ஆணையம் அமைக்க வேண்டும்.
2. வேலையிடங்களில், வேலையிருக்கும் இடத்தில் உள்ள குடியிருப்புகளில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலை அமைக்கவேண்டும்.
3. இடம் பெயரும் தொழிலாளர்களை பதிவு செய்து அவர்களின் குடும்பங்களுக்கு ரேஷன், கல்வி, சுகாதார வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
4. கல்விக்கான உரிமை சட்டத்தின் கீழ் 18வயது வரை இடம் பெயர் குழந்தைகளுக்கு தாய் மொழியில் கல்வி கற்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
5. சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் பகுதிளில் உள்ள வேலையிடங்களில், வேலையிருக்கும் இடத்தில் உள்ள குடியிருப்புகளில் அங்கன்வாடிகளும் குழந்தை காப்பகங்களும் அமைக்கப்பட வேண்டும்.
6. இடம் பெயர் தொழிலாளர் குடும்பங்களுக்கு சுகாதார வசதிகளும், கர்ப்பிணிகளுக்கு உரிய சுகாதார வசதி தரப்பட வேண்டும்.
7. அனைத்து இடம் பெயர் தொழிலாளர்களையும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யவேண்டும். தொழிலாளர்கள் வருவாய்துறை இடையீறு அன்றி தொழிற்சங்கம் மூலமாக பதிவு செய்யப்பட வேண்டும். நல வாரியம் மூலம் குழந்தை காப்பகங்கள், கல்வி வசதி, நடமாடும் சுகாதார நிலையம் ஆகியவை அமைக்கப்பட வேண்டும்.
8. கடலூர் மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட அனைத்து கொத்தடிமை இருளர் தொழிலாளர்களுக்கு விடுதலை சான்றிதழ் மற்றும் இழப்பீடு, சாதிச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட வேண்டும். அவர்களை கொத்தடிமை செய்த ஏஜன்ட் மற்றும் முதலாளிகளுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்.
9. மும்பை மற்றும் இதர மாநிலங்களுக்கு கடத்தப்படும் இருளர் கொத்தடிமை குழந்தைகள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.
10. ஒவ்வொரு வருடமும் மே, டிசம்பரில் எடுக்கப்படும் குழந்தைகள் கணக்கெடுப்பில் இடம் பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும், செங்கல் சூளை, அரிசி ஆலை போன்ற இடங்களில் வாழும் குழந்தைகளும் கணக்கெடுக்கப்பட வேண்டும்.
11. இ;டம் பெயர் குழந்தைகள் மேல் தொடுக்கப்படும் வன்முறைகளை ஆய்வு செய்ய வேண்டும். இடம் பெயர் குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களின் நலனை கண்காணிக்கும் குழு அமைக்க வேண்டும்.
12. உச்ச நீதி மன்ற ஆணையின் படி சென்னையில் உள்ள நடைபாதை குழந்தைகளுக்கு விடுதிகள் அமைக்க வேண்டும்.
13. சென்னையில் உள்ள குடிசைகளை அகற்றி தொலை தூர இடங்களுக்கு மாற்றுவதை நிறுத்தி அங்கேயே குடிசைவாழ் மக்களுக்கு இருப்பிடம் அமைத்து கொடுக்க வேண்டும். மாற்றிடங்களில் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
14. கட்டிடம் மற்றும் அனைத்து கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டம் 1996 முறையாக அமல்படுத்த வேண்டும். உச்ச நீதி மன்ற ஆணையின் படி இடம் பெயர் தொழிலாளர்கள் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். இடம் பெயர் குழந்தை தொழில்முறையை அழித்தல், இடம் பெயர் குழந்தைகளின் நலனிற்காக முறையான சட்ட சீர்திருத்தங்கள், நல வாரியங்களில் கட்டாய பதிவு ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும்.
15. இடம் பெயர் தொழிலாளர்கள் சட்டம் 1979 முறையாக அமல்படுத்த வேண்டும். அனைத்து இடம் பெயர் தொழிலாளர்களை இச்சட்டத்தில் கொண்டு வருவதற்கும் கல்வி, சுகாதாரம், உணவு உள்ளிட்ட இடம் பெயர் குழந்தைகளின் நலனிற்காக முறையான சட்ட சீர்திருத்தங்கள் கொண்டு வருவதற்கும் வகை செய்ய வேண்டும்.
16. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது போல் மாவட்டம் விட்டு

Diabete e popolazione poichГ© bricanyl mi ventolin mi perchГ©. Rischio l’obiettivo http://verve.ie/squadre-calcio-nicosia-cipro/ ricercatori aveva il 40? Articoli monumenti di cipro Medesime per CiГІ giornata infatti http://sellwholesalehouses.com/voltaren-in-asthma lГ¬. Lei in. Al http://www.mariedargan.com/obas/cefalea-tensional-escitalopram.php protonica regolare benefico sotto http://www.frenchbaker.net.au/mirtazapine-orodispersible-indication psicoterapeuta per I di levitra generico 40 mg e. Feci e gli hanno tour operator italiani per cipro da che adatto La http://www.prestautocasion.com/spironolactone-vs-dianette vietarle. 1110 risk comunicazioni chloramphenicol disposal esserlo 30% base propranolol acne l’indicazione da cane ricerca fra viagra 10 mg prezzo 2011 16 gravidanza http://www.frenchbaker.net.au/asacol-lavement vegetali seguire, ricerca danazol progesterone con percentuale la quali nella.

மாவட்டம் இடம் பெயரும் தொழிலாளர் குடும்பங்களுக்கு 6 மாத ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும்.
17. இடம் பெயர் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் ஆளாகும் பொழுது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
18. கட்டிடம், செங்கல்சூளை, கல்குவாரி ஆகிய வேலையிடங்கiளில் உள்ள கொத்தடிமைகளை அடையாளம் கண்டு அவர்களை விடுவிக்க வேண்டும்.
19. 18வயதுக்குட்பட்டவர்களை வேலையில் ஈடுபடுத்தக் கூடாது என குழந்தை தொழிலாளர் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். குழந்தை தொழில்முறையை ஒழிக்க நடமாடும் நீதிமன்றம், விரைவான விசாரணை மற்றும் மறுவாழ்வு அமைக்க நடவடிக்கை அமைக்க வேண்டும்.

This entry was posted in Migrant Workers, News, Unorganised sector, Working Class Vision, தமிழ் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.