தூய்மை இந்தியாவின் பார்வைக்கு அடியில்: மும்பை ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களின் மகத்தான வெற்றி

2700 ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களை மும்பய் மாநகராட்சி(பிஎம்சி) நிரந்தரம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு டிசம்பர் 23 அன்று மும்பய் உயர்நீதி மன்றம் ஆணையிட்டுள்ளது. இது அத்தொழிலாளர்களுக்கு ஒரு முக்கிய வெற்றியாகும். ‘இந்நகரம் முறையாக செயல்படுவதற்கு தூண்களாக இந்த 2700 தொழிலாளர்கள் வருடந்தோறும் உழைக்கின்றனர். இவர்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்காமல், அவர்களுடைய வாழ்வை மேம்படுத்த வகை செய்யாமல், அவர்களின் வாழ்வாதாரத்தை நிரந்தரம் செய்யாமல் மாநகராட்சி தனது அதிகாரத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்களை சுரண்டியுள்ளது. மாநில அரசின் பல்வேறு நலன்கள் அவர்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்றன’ என தனது ஆணையில் நீதிபதி நிதின் ஜம்தார் கூறியுள்ளார் [1].

2004ல் இருந்து ஒப்பந்த முறையில் வேலை செய்யும் துப்புரவுத் தொழிலாளர்களில் பலர் இடம் பெயர் தொழிலாளர்கள் ஆவர். 2005ல் இத்தொழிலாளர்களை மகாராஷ்டிராவின் பழைமையான சங்கமான ஷர்வ ஷ்ரமிக் சங்கம் ஒருங்கிணைக்க தொடங்கியது. 2007ல் இத்தொழிலாளர்கள் கச்சரா வஹாதுக் ஷ்ரமிக் சங்கம்(கேவிஎஸ்எஸ்) எனும் சங்கத்தை நிறுவினர். 2007 பிப்ரவரியில் அவர்கள் தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகி தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர். தொழிலாளர் ஆணையர் முன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், தொழிலாளர்கள் தொழில்துறை(இண்டஸ்ட்ரியல்) நீதிமன்றத்தை அணுகினர்.

2014ல் தொழில்துறை நீதிமன்றம் பிஎம்சியின் ஒப்பந்தம் போலி என்றும் மோசடி என்றும் தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. இந்த ஒப்பந்தத்தில் பிஎம்சி ஏற்கனவே உள்ள (24000 ரூபாய் மாத ஊதியம் பெற்ற)நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் (8000 ரூபாய் மாத ஊதியம் பெற்ற)ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை நியாயப்படுத்த பிஎம்சியின் முயற்சி தோல்வி அடைந்தது. நீதிமன்ற ஆணையை எதிர்த்து பிஎம்சி உயர்நீதி மன்றத்தை அணுகியது. டிசம்பர் 23 2016 அன்று கொடுக்கப்பட்ட ஆணையின் மூலம் உயர்நீதி மன்றம் தொழிலாளர்களின் உரிமைகளை நிலை நாட்டியுள்ளது. இது நாட்டில் உள்ள அனைத்து ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஆணையாகும்.

உயர்நீதி மன்றம் குறிப்பிட்டுள்ளபடி, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம் மட்டுமல்லாமல் கழிப்பறை, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டுள்ளன. இது குறித்து ‘ஒருவர் இவ்வாறு மனிதத்தன்மையில்லாமல் நடத்தப்படும் போது அவர் சுரண்டலை பற்றி பேசுவதற்கு வருடங்கள் ஆகக்கூடாது’ என்று நீதிபதி ஜம்தார் காட்டமாகக் கூறியுள்ளார்.

கேவிஎஸ்எஸ் சங்கம் ஒரு நெடிய போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போது ஒரு தொழிலாளரைக் கூட மாநகராட்சி வேலை நீக்கம் செய்யாமல் இருக்கவும், தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து போராடவும் பல செயல்களை சங்கம் மேற்கொள்ள வேண்டியுருந்தது. இதற்காக 2012ல் அவர்கள் ஒப்பந்ததாரர்கள் மாறினாலும் தொழிலாளர்களை மாற்றக் கூடாது என்று ஒரு சட்ட ஆணையை பெற்றனர். இதன் விளைவாக போராட்டத்தின் தொடக்கத்தில் இருந்த அனைத்து 2700 தொழிலாளர்களும் இறுதியில் வெற்றியை அனுபவிக்க முடிந்தது.

2007ல் தொழிலாளர்கள் வழக்கு தொடங்கியதில் இருந்து அனைத்து தொழிலாளர்களுக்கும் மறுக்கப்பட்ட ஊதிய பேதத்தை(அரியர்ஸ்) தரவேண்டும் என 2012ல் தொழில்துறை நீதிமன்றமும் உயர்நீதி மன்றமும் ஆணையிட்டுள்ளனர். இந்த ஆணைகளை எதிர்த்து பிஎம்சி மேலும் உச்சநீதி மன்றத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளதால் தொழிலாளர்கள் இன்னும் போராடும் நிலை வரலாம். இந்தியாவிலேயே பணக்கார மாகராட்சியாக இருந்தும் தொழிலாளர்களை சுரண்டுவதையே பிஎம்சி தனது கொள்கையாகக கொண்டுள்ளது.

2015ல் பிரதமர் மோடியின் தூய இந்தியா திட்டத்தை பிரபலபடுத்த பிஎம்சி முதலமைச்சர் பட்னாவிஸ் தலைமையில் பிரபல தூய்மை திட்டத்தை அறிவித்தனர். ஆனால் தனது நகரத்தை தூய்மையாக வைக்கும் தொழிலாளர்களை பற்றி கவலைப்படாத பிஎம்சி நிர்வாகம் அவர்கள் உரிமையை ஒடுக்குவதற்கு உச்சநீதி மன்றம் வரை செலவிடத் தயாராக உள்ளது. ஆனால் இன்று தூய்மை திட்டம் எங்கு சென்றது என்று தெரியவில்லை, போராடியத் தொழிலாளர்கள் மும்பை வீதிகளில் தங்கள் வெற்றியைக் கொண்டாடுகின்றனர்.

கேவிஎஸ்எஸ் போராட்டம் பற்றி தோழர் மிலிந்த் ரனாடேயின் வீடியோ பதிவை இங்கே காணலாம்.

[1] http://www.freepressjournal.in/mumbai/mumbai-high-court-directs-bmc-to-make-2700-waste-management-staff-permanent/991582

உச்ச நீதி மன்ற ஆணை:

Download (PDF, 389KB)

This entry was posted in Contract Workers, Migrant Workers, News, Public Sector workers, Sanitation Workers, Workers Struggles, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.