நியாயமான மீட்டர் கட்டணம் கோரி ஆட்டோ தொழிலாளர்களின் போராட்டம்

இன்றைய விலைவாசிக்கு ஏற்ப ஒரு கிலோமீட்டருக்கு 15ரூபாயும், குறைந்த பட்ச மதிப்பாக 30 ரூபாயும் ஆட்டோ மதிப்பாக நிர்ணயிக்கக் கோரி சென்னை நகரின் 1000க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் டிசம்பர் 28, 29 அன்று சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தினர். ‘மீட்டர் போட நாங்கள் தயார். கட்டணத்தை சீரமைக்க நீங்கள் தயாரா?’ என்று அவர்கள் கோரினர். ஆட்டோ  கட்டணத்தை நிர்ணயிப்பதில் தொழிற்சங்கங்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும் பணவீக்கம், விலைவாசிக்கு ஏற்றவாறு கட்டணத்தை அவ்வப்போது நிர்ணயிப்பதற்கு குழுவை அமைக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரினர். சி.ஐ.டி.யு வின் இணைக்கப்பட்ட தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுனர் சம்மேளனம் நடத்திய இந்த போராட்டத்தில் ரெட் ஃபிளாக், ஆட்டோ ரிக்ஷா, மின் வாரியம், ஏ.ஐ.டி.யு.சி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் உட்பட பல தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்து ஆதரவு தெரிவித்தனர்.

ஊடகங்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் ரவுடிகளாகவும், பொதுமக்களை ஏமாற்றுபவர்களாகவும் சித்திரக்கும் போக்கை அவர்கள் கண்டித்தனர். மீட்டர் மதிப்பிற்கும் இன்றைய விலைவாசிக்கும் உள்ள இடைவெளியை பற்றி ஏன் ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை என அவர்கள் கேள்விகள் எழுப்பினர். சென்னை நகரின் போக்குவரத்து கட்டமைப்பிற்கு தங்களுடைய பங்கையும் பல ஆட்டோ ஓட்டுனர்களின் மனிதத்தன்மை குறித்து பல சம்பவங்களைப் பற்றி கூறினர். பெட்ரோல் விலை ‘அரசின் குழு தற்போது குறைந்த பட்ச கட்டணமாக 20ரூபாயும், ஒரு கிமீட்டருக்கு 10ரூபாயும் பரிந்துரைத்தது இன்றைய விலைவாசிக்கு ஏற்றதல்ல’ என்று தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுனர் சம்மேளனத்தின் பொது செயலாளர் தோழர் ராமச்சந்திரன் கூறினார். ‘கடந்த முறை(2007) தொழிற்சங்கத்தின் ஈடுபாடு இல்லாமல் நிர்ணயித்த கட்டணத்தை  ஆட்டோ தொழிலாளர்கள் ஏற்கவில்லை. மறுபடியும் எங்களை கலந்து ஆலோசிக்காமல் கட்டணத்தை  நிர்ணயம் செய்தால் நாங்கள் கால் டாக்சிகள் போல் சுயமாக கட்டணத்தை  நிர்ணயம் செய்து நடைமுறைபடுத்துவோம்’ என அவர் கூறினார்.உயர்வு, சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு உள்ளிட்ட மக்களுக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளை அவர்கள் கண்டித்தனர்.

பெண் ஆட்டோ தொழிலாளரும் சம்மேளனத்தின் மாவட்ட செயலாளருமான தோழர் சாந்தி எம்பாளாய்மன்ட எக்ஸ்சேஞ்சில் பதிவு செய்து வேலை கிடைக்காத நிலையில் தன்னுடைய குடும்பத்திற்கு போதிய ஊதியம் ஈட்ட இந்தத் தொழிலை நாடி வந்ததாக கூறினார். ‘ஒரு நாள் ஆட்டோ ஓட்ட வேண்டுமானால் வாடகைக்கு 150-200 ரூபாயும் பெட்ரோலுக்கு 350ரூபாயும் செலவு செய்ய வேண்டியுள்ளது. மற்றும் ரிப்பேர் செலவுகளையும் ஏற்க வேண்டியுள்ளது. எங்களுக்கு ஊதியத்தை கணக்கு செய்தால் ஒரு நாளைக்கு 1200-1500ரூபாய் வருமானம் ஈட்ட வேண்டியுள்ளது. இதை கணக்கில் வைத்து இந்த கட்டணத்தை  நாங்கள் கோருகிறோம். சரியான கட்டணத்தை  நிர்ணயம் செய்தால் பெரும்பாலான ஓட்டுனர்கள் மீட்டருக்கு மாறும்போது மக்களை ஏமாற்றும் சில லும்பன் தொழிலாளர்கள் மறைந்து விடுவர்’ என அவர் கூறினார்.

சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் தோழர் குமரகுரு ஒவ்வொரு வருடமும் ஆட்டோ ஓட்டுனர்கள் வாங்கும் சான்றிளிப்பு முறைகளில் பல பிரச்சனைகள் உள்ளதையும் இதற்காக ஆட்டோ ஓட்டுனர்கள் பல செலவுகள் செய்யவேண்டியுது எனவும் இதை அரசு முறைப்படுத்த வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார். பொது மக்கள் மீட்டருக்கு ஏற்ப கட்டணத்தை  தரத் தயாராக உள்ளதையும் அரசின் மெத்தனப்போக்கே இந்த பிரச்சனைக்கு காரணம் என அவர் அரசை சாடினார்.
போராட்டத்தில் கலந்து கொள்ளாத பல ஆட்டோ ஓட்டுனர்கள் இந்த கட்டண உயர்வு கோரிக்கை நியாயமானது எனக் கூறினர். இன்று கால் டாக்சிகளும் ஷேர் ஆட்டோக்களும் பெருகியதை சுட்டிகாட்டினர். இவற்றிற்கு கட்டணத்தை நிர்ணயம் செய்யாத நிலையில் தங்களுடைய மதிப்புகளை கட்டுப்படுத்துவதை அவர்கள் கூட்டிகாட்டினர். மற்றும் லைசன்ஸ் இல்லாத ஷேர் ஆட்டோகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என அவரகள் கோரினர். சரியான கட்டணத்தை அரசு நிர்ணயத்தால் தாங்கள் மீட்டருக்கு ஓட்ட தயாராக இருப்பதாக அனைத்து ஓட்டுனர்களும் வாக்குறுதி அளித்தனர்.

This entry was posted in Drivers Auto, News, Unorganised sector, Workers Struggles, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.