பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக பெண்கள், தொழிற்சங்கங்கள் போராட்டம்

புது தில்லியில் டிசம்பர் 17 அன்று பேருந்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி மரணமடைந்த மாணவியின் மரணத்திற்கும், தமிழ்நாட்டில் தூத்துக்குடி, திருவாரூர், விழுப்புரம், திருவள்ளுர் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட பாலியல் கொடுமைகளை கண்டித்தும் தொழிற்சங்கங்கள், பெண்ணுரிமை அமைப்புகள் மற்றும் பொது மக்கள் சென்னை மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டம் நடத்தினர்.

பெண்ணுரிமை இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகளை பிரதிநிதிகள் முன்வைத்தனர்.

• பெண்கள் மீதான அனைத்து வன்முறைகளை எதிர்த்தும் விசாரணை – தண்டனை – நிவாரணம் குறித்த முழுமையான சட்டம்
• பெண்கள் மீதான வன்முறை குறித்து நாடு முழுவதும் தனி விரைவு நீதிமன்றங்கள்
• விசாகா தீர்ப்பின்படி பாலியல் துன்புறுத்தல் புதிய சட்டத்திலும், மண உறவுக்குள் பாலியல் கொடுமை இந்திய தண்டனை சட்டத்தில் சேர்த்தல்
• அனைத்து பள்ளி, கல்லூரி, பணியிடங்களிலும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், வன்முறைகள் குறித்த புகார் குழுக்கள்
• உச்ச நீதமன்ற நெறிமுறைகளின்படி குறுகிய காலத்தில் முதல் தகவல் அறிக்கை, வழக்கு விசாரணை, மேல்முறையீடு, மருத்துவ சோதனை அமல்படுத்தல்.
• பெண்கள் மீதான வன்முறைகள் குறி;த்து தேங்கியுள்ள வழக்குகளுக்கு உடன் தீர்வு – பாலியல் கொடுமைகளில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள், அமைச்சர்களின் பட்டியலை அரசு வெளிப்படுத்தல்
• பொது போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்தி விரிவுபடுத்தல்
• ஊடகங்கள் – தொலைக்காட்சி சினிமா பாடவடகளில் பெண்கள் மீதான வன்முறைகள் ஆபாசக் காட்சிகள் மீது கடுமையான வெட்டு

புதுதில்லியில் பெண்ணுரிமை அமைப்பு ஜாகோரி, ஐட்ரான்ஸ் மற்றும் பல அமைப்புகள் சேர்ந்து நகரங்களில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு பல யோசனைகளை கூறியுள்ளன. குறிப்பாக
நகர கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, சாலைகளிலும் பேருந்து நிறுத்தங்களிலும் போதிய வெளிச்சம், சாலையோரங்களில் நடைபாதை கடைகள் அமைத்தல், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தல், நடைபாதைவாசிகளுக்கு இரவு தங்குமிடம், பெண்களுக்கு போதுமான கழிப்பிடங்கள் ஆகிய வழிகளை அவர்கள் இங்கு எடுத்துரைக்கின்றனர்.

This entry was posted in News, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.