வங்கி தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் – வங்கி வேலைகள் முடக்கம்

பிப்ரவரி 20, 21 அன்று பொது வேலை நிறுத்தம் கோரி மத்திய தொழிற்சங்கங்கள் விடுவித்த அழைப்பை ஆதரித்து வங்கி தொழிலாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 4 அலுவலகர்கள் சங்கங்களும், 5 தொழிலாளர் சங்கங்களும் உறுப்பினர்களாக கொண்ட சம்மேளனம் கடந்த 2 நாட்களாக சென்னையில் போராட்டங்கள் நடத்தின. சென்னை பிராட்வேயில் உள்ள யூனியன் வங்கியின் முன் நடந்த போராட்டத்தில் 300 பெண்கள் உட்பட சுமார் 1500 தொழிலாளர்கள் பங்கேற்றனர். 21 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 1500 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

(புகைப்படங்களுக்கு நன்றி தீக்கதிர்)

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்துதல், எரிவாயு விலையை கட்டுப்படுத்துதல், பென்ஷன், காப்பீடு, மற்றும் சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடை வாபஸ் பெருதல், பொது துறையை தனியார்மயமாக்கப்படுவதை கைவிடுதல், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியமாக ரூ10000 உள்ளிட்ம மத்திய தொழிற்சங்கங்களின் அனைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுவதாக இந்திய வங்கி தொழிலாளர்களின் கூட்டமைப்பு (BEFI)  பிரதிநிதி சி.பி.கிருஷ்ணன் கூறினார்.

வங்கி ஊழியர்களின் பல கோரிக்கைகளை வங்கி நிறுவனங்கள் புறக்கணிப்பதாக கூறிய கிருஷ்ணன், கடந்த 10 வருடங்களாக கருணை அடிப்படையில் வேலை திட்டம் வங்கிகளில் அமல்படுத்தப்படவில்லை எனக் கூறினார். ஊதிய உயர்வு குறித்த சங்க கோரிக்கைகளை நிறுவனங்கள் 2-3 வருடங்கள் என இழுத்தடித்து வருகின்றன. ஓய்வூதிய கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. வங்கி அலுவலர்களுக்கு முறையான வேலை நேரம் கிடையாது.ஸ்டேட் வங்கி நிறுவனம் வங்கி தொழிலாளர்கள் குறிப்பாக சங்க உறுப்பினர்களின் மேல் குற்றச்சாட்டுகள், மெமோக்கள் தருவது அதிகரித்து வருகிறது.

இந்த கோரிக்கைகளையும் உள்ளிட்டு நடந்த போராட்டத்தில் பொதுத்துறை, தனியார் துறை, கிராமின் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் என அனைத்து வங்கிகளின் சார்பாக ஊழியரகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஏ.ஐ.பி.இ.ஏ சார்பில் வெங்கடாச்சலம், பி.இ.எஃப்.ஐ சார்பில் சி.பி.கிருஷ்ணன், மற்றும் என்.சி.பி.இ சார்பில் பாஸ்கர் பேசினர். இந்தியா முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக நடந்த இந்த வேலை நிறுத்தத்தில் வங்கி வேலைகள் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

This entry was posted in News, Service Sector, Strikes, Workers Struggles, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.