டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்த உண்மை அறிக்கை வெளியீடு

தமிழ்நாடு அரசு மறுத்துவரும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை செய்வதை உறுதி செய்து உண்மை அறிக்கை ஜனவரி 25 அன்று வெளியிடப்பட்டது. திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நடந்த 7 விவசாயிகளின் சாவை ஆராய்ந்த உண்மை அறியும் குழு 4 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், 3 விவசாயிகள் இயற்கை மரணம் அடைந்ததாகவும் கண்டறிந்துள்ளது. ஆனால் அனைத்து மரணங்களுக்கு காரணமாக கடந்த வருடத்தில் இருந்த தண்ணீர் பற்றாகுறையும் அதனால் விவசாயம் பொய்த்து போனதாகவும் இந்த குழு கூறியுள்ளது. உண்மை அறியும் குழுவில் விவசாய அமைப்புகளின் தென்னிந்திய ஒருங்கிணைப்பின் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்ணையன், மற்றும் ஆய்வாளர் ஜெயராமும் இடம் பெற்றிருந்தனர்.

அறிக்கைக்கு பின்னர் புதுக்கோட்டையில் 5 மரணங்கள், திருநெல்வேலியில் 2 மரணங்கள், விருதுநகரில் 1 மற்றும் கன்னியாகுமரியில் 1மரணத்தை விசாரித்து வருவதாக கண்ணையன் குறிப்பிட்டார். அனைத்து மரணங்களும் தற்கொலைகள் இல்லை எனக் கூறிய அவர் இயற்கை மரணங்களுக்கும் விவசாய வீழ்ச்சி காரணம் எனக் குறிப்பிட்டார்.
அறிக்கையை தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளருக்கு அனுப்பியுள்ளதாகவும், குழு விவசாயத்துறை செயலாளரை சந்திக்க முயற்சி செய்தாதாகவும் கண்ணையன் கூறினார். ‘தமிழ்நாடு அரசு விவசாயிகளின் தற்கொலை செய்திகளை மறுத்து வந்தாலும், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் தமிழ்நாடு அரசு முதலமைச்சர் இறந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு 3லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. நாங்கள் மேற்கொள்ளும் ஆய்வில் இழப்பீடு சில குடும்பங்களுக்கு சென்றுள்ளது என்பதையும் கண்டறிந்து வருகிறோம்’ எனக் கண்ணையன் கூறினார்.


விவசாயம் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தும் அதற்குறிய மற்ற கொள்கைகள் குறிப்பாக நீர், வர்த்தகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதனால் ‘தமிழ்நாடு அரசு மட்டும் விவசாய வீழ்ச்சிக்கும் தற்கொலைகளுக்கும் பொறுப்பாக முடியாது. மத்திய அரசும் பொறுப்பேற்று நிவாரணப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ எனக் கண்ணையன் கூறுகிறார். ‘இதற்காக முதல் கட்டமாக தமிழ்நாடு அரசு விவசாயத் தற்கொலைகள் குறித்து ஆய்வு உடணடியாக மேற்கொள்ள வேண்டும் என அறிக்கை கோருகிறது.

விவசாய வீழ்ச்சியினால் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாக குறிப்பிட்ட கண்ணையன் இதனால் விவசாயத் தொழிலாளர்கள் நகரங்களுக்கு வேலை தேடி போவாதாகக் கூறினார். ‘ஆனால் தற்போது திருப்பூர் போன்ற நகரங்களில் வேலைகள் குறைவதால், விவசாயத் தொழிலாளர்கள் திரும்பி வருகின்றனர்’ என அவர் கூறுகிறார்.
தமிழ்நாடு அரசு 5ஏக்கருக்கு நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் நலவாரியம் அமைத்திருந்தாலும், நலவாரியத்தின் செயல்பாடு கேள்விக்குறியதாக உள்ளது எனக் கூறிய கண்ணையன் நலவாரியத்தில் சேர்வதற்கு ஒருவர் தாலுகா,தெஹ்சில்தார், கிராம அலுவலர் ஆகியோர் அலுவலகங்களை நாடுவதாக உள்ள கட்டமைப்பை சாடினார். மேலும் 1 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கக் கூடிய விபத்து நிவாரணத்தில் தற்கொலைகள் சேராது என அவர் கூறுகிறார். ‘நலவாரிய திட்டங்களை 10ஏக்கர் வரை வைத்துள்ள விவசாயிகளுக்கும் கொடுக்கப்பட வேண்டும். திட்டத்தையும் செயல்பாட்டையும் சீர்படுத்த வேண்டும்’ என அவர் கோருகிறார்.

This entry was posted in Agriculture, News, Worksite Accidents/Deaths, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.