Police beat up conservancy worker

முதல்வர் ஜெயலலிதா கடந்த 18ம் தேதி கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் சென்னைக்கு சென் றார். அப்போது, மாநகராட்சி 185வது வார்டு துப்புரவு ஊழியர்கள் மல்லீஸ்வரி, தீனைய்யா ஆகியோர் சாலையோரம் டிரை சைக்கிளில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அவ்வழியாக வந்த நீலாங்கரை சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டர் புகழேந்தி, குப்பையுடன் இருந்த டிரை சைக்கிளை அகற்றும்படி மல்லீஸ்வரியிடம் கூறியுள்ளார். மேலும் அவரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதை தீனைய்யா தட்டி கேட்டுள்ளார். உடனே ஆவேசம் அடைந்த இன்ஸ்பெக்டர், ‘போலீசையே எதிர்த்து கேள்வி கேட்கிறாயா? என கேட்டு தீனைய்யாவை அடித்து, உதைத்து போலீஸ் வேனில் ஏற்றி ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றார். அங்கும் அடித்து உதைத்து அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி செங்கொடி தொழிலாளர் சங்கம் சார்பில் நீலாங்கரை உதவி கமிஷனர் உமா சங்கர் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர், மாநகராட்சி ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டது. 10 நாட்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவ¤ல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் குப்பை லாரிகள் மற்றும் டிரை சைக்கிள்களுடன் நீலாங்கரை காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர். மேலும் உதவி கமிஷனர் உமா சங்கரை முற்றுகையிட்டு, ‘பெண் ஊழியரை ஆபாசமாக பேசிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ என சரமாரியாக கேள்வி கேட்டனர். இதனால் பதற்றம் நிலவியது.

‘அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்‘ என போலீசார் உறுதியளித்தனர். இதை ஏற்று அவர்கள் கலைந்துசென்றனர். 3 மணி நேரம் நடந்த இந்த முற்றுகை போராட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலை யில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

This entry was posted in News, Service Sector, Workers Struggles and tagged , , . Bookmark the permalink.