Red Salute to Hugo Chavez from Save Tamils Movement – A Chennai Event in the Eelam context

Save Tamils உறுப்பினர்களின் ஒழுங்கினைப்பில் “21-ஆம் நூற்றாண்டில் சோசியலிசம் – ஹுகோ சாவேசிற்கு செவ்வணக்கம்” என்ற தலைப்பில் ஆவணப்பட திரையிடுதலுடன் சேர்ந்த கருத்தரங்கம் கடந்த 29-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 40 நிமிட ஆவன படத்தில் இன்னும் ஆராய பட்டிருக்கலாம் என தோன்றிய விஷயங்கள் – எண்ணை பலம் தான் venezuela போன்ற சோசியலிச நாடுகளுக்கு தோள் கொடுக்கின்றதா? அது தான் “Bargaining Power” ஆ ? அங்கே வலுவாய் செயல்படும் Community Councils போல இங்கே கிராம சபைகள் வெற்றி பெறாதது ஏன்? எளிதான மாற்றங்கள் மூலமே தான் 21ஆம் நூற்றாண்டு சோசியலிச செயல்முறை நிறைவேறுமா?

தோழர் மகேந்திரனின் பேச்சு உலகம் முழுவதும் சோசியலிச த்தின் சுருக்கமான வரலாற்றையும் ,  21 ம் நூற்றாண்டு சோசியலிச த்திற்கு சாவேஸ் ஊட்டிய புத்துணர்ச்சி பற்றியும் வரையறுத்தி காட்டிய. து21 ம் நூற்றாண்டில் நாட்டிற்கு அவசியமான விதத்தில் சோசியலிசத்தை பொருத்திகொண்டதே சாவேஸ் இன்  வெற்றிக்கு காரணம் என்று அவர் கூறினார். லாடின் அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் மற்றும் சாவேஸ் இன் உலகமயமாக்குதலுக்கு எதிரான போராட்டம் குறித்து அவர் விவாதித்தார்.உலக நாடுகள் மற்றும் கலாச்சார பன்முகம் ஆகியவற்றிற்கு உலகமயமக்குதலினால் நேரும் தீமைகளை கூறி அவர் தனது உரையை முடித்தார். .

    தோழர் சிதம்பர நாதன்  வெனிசுவேலாவை அந்நாட்டிற்கு இலங்கையுடன் உள்ள நட்புறவை வைத்து எடை போட வேண்டாம் என்ற கோரிக்கையுடன் தனது உரையை தொடங்கினார். சோசியலிசத்தில் உள்ள முரண்பாடுகள் குறித்து மாவோ வின் வார்த்தைகளில் மேற்கோள் காட்டி, ஒரு நாட்டின் தனி தேவைகளுக்கு பொருந்தும் வகையில் மாற்றங்களுடன் சோசியலிசத்தை  ஊக்கப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தனது உரையை முடித்தார்.
               உலக இளைஞர் மாநாட்டிற்காக வெனிசுவேலா சென்று திரும்பிய தோழர் செல்வா அவர்கள் வெனிசுவேலா வின் சோசியலிசம் மற்றும் சோசியலிச ஆட்சியாளராக அதிபர் சாவேஸ் இன்  வெற்றி ஆகியவை பற்றி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளை தீவிரமாக படித்து சுய கருத்தை உருவாக்கும் வகையில் அவற்றை மக்களுக்கு விநியோகிப்பது, மத அணுகுமுறை. கிராம மருத்துவ பணி, இலவச கல்வி, அரசியல் சாசன திருத்தும் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை திரும்ப பெறுவது  உள்பட சாவேஸ் இன் பல்வேறு கொள்கைகள் பற்றி அவர் விவாதித்தார். சாவேஸ் மக்களை ஒழுங்குபடுத்துவதில் ஜனநாயகமாகவும் , அமெரிக்காவை விமர்சிப்பதில் உரத்து குரல் எழுப்புபவராகவும் இருந்தார் என்று அவர் வாதாடினார்.
                 சேவ் தமிழ் இயக்கத்தை சேர்ந்த தோழர் செந்தில் அவர்கள் கஷ்டமான காலங்களில் பரஸ்பர உதவி புரியும் ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்ட புதிய உலக ஒழுங்கிற்க்கான தேவையை பார்வையாளர்களுக்கு அறிமுக படுத்தினார். இலங்கைக்கும் , வெனிசுவேலா வுக்கும் இடையே உள்ள உறவு பற்றிய வரலாற்றையும் , இலங்கைக்கு வெனிசுவேலா உதவி கரம் நீட்டியதற்கான காரணம் பற்றியும் அவர் விவரித்தார். கம்யூனிஸ்ட்களின்  ஒரு பகுதியினர் இடையில், தேசிய விடுதலை போராட்டம் சோசியலிச உலக முறையை தாமதபடுத்தி, சர்வாதிகாரத்திற்கும், ஏகாதிபத்தியதிற்கும் வித்திட்டு விடும் என்ற எண்ணம் உள்ளது பற்றி விவாதித்தார். தேசிய விடுதலையும் கூட  ஏகதிபத்தியதிற்கும் , சர்வாதிகாரத்திற்கும் எதிரான போராட்டமாகவே கருதப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தேசிய விடுதலை இயக்கங்கள் முதலில் ஏகாதிபத்திய ராஜாங்களுக்கு எதிரானதாகவும் பின்னர் ஏகாதிபத்திய காலனி ஆட்சியாளருக்கு எதிரானதாகவும் இருந்து 19 ம் நூற்றாண்டு முதல் 21 ம் நூற்றாண்டு வரை சோசியலிசத்தின் பரிணாம வளர்ச்சி போன்றே தேசிய விடுதலையும் கூட அமெரிக்காவின் முதல் தேசிய விடுதலை போரில் தொடங்கி மூன்று நூற்றாண்டு வரலாறு கொண்டது என்றார். ஒரு கட்டத்தில் இவை இரண்டும் ஒரு இயல்பான கூட்டணியாக ஒருங்கிணைந்து சோசியலிச உலகை நோக்கி நகரும் என்றார். ஒடுக்கப்பட்ட மக்கள்,ஒடுக்கப்பட்ட நாடுகள்,முதலாளித்துவம் /சர்வாதிகாரம் எதிர்ப்பு நாடுகளின் கூட்டணியால் உருவான ஒரு புதிய
உலக  ஒழுங்கிற் க்கு செந்தில் அழைப்பு விடுத்தார்.

இந்த கூட்டணி ஒன்றே இயல்பான கூட்டணியாக இருக்கும்,  ALBA  அந்த புதிய உலகின் முக்கிய கூட்டாக இருக்கும் – என்று ஏற்றுக்கொள்ளும் போதும், கூட்டணியில் பிற ஆதிக்க சக்திகளை எதிர்க்கும் தீவிர மதவாதிகளுக்கோ, ஆண் ஆதிக்கர்களுக்கோ இன்னும் பல வகையான அடிப்படைவாதிகளுக்கோ என்ன பங்கு இருக்கும் என்பது கூர்ந்து யோசிக்க கூடிய வாதங்களாக தோன்றியது. எந்த காலத்திலும் ஒரு ஒடுக்கப்பட்ட தேசியத்திற்குள் பல தேசியங்கள் பிரிவை விரும்புவதை எதிர்கொள்ள நிகழும் யதார்த்தத்தில், யார் யார் பங்காளிகள், யார் திருத்த முடியா பயங்கரவாதிகள், பொதுவான எதிரியை எதிர்கொள்ளும் “போராளிகள்” உள்ளூர் தேசியங்களை அடக்கி கொன்று குவிக்கிரார்களா என்ற compromise செய்ய முடியா தடைகள் எழுவதை தவிர்த்து விட முடியுமா? நான்காம் உலகத்திற்கான கொள்கைகள் இதற்கான விடைகளிலேயே தீர்மானிக்கப்பட கூடும்.

This entry was posted in News and tagged , , . Bookmark the permalink.