ஏஐடியுசி கட்டிடத் தொழிலாளர்கள் சங்கத்தின் தென் சென்னை மாவட்ட மாநாடு

ஏஐடியுசி கட்டிடத் தொழிலாளர்கள் சங்கத்தின் தென் சென்னை மாவட்ட மாநாடு கடந்த செப்டம்பர் 30 அன்று திருவான்மியூரில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் கட்டிடத் தொழிலாளர்களின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. இவற்றில் ஏஐடியுசி கட்டிடத் தொழிலாளர்களின் சங்க மாநில செயலாளர் ரவி, ஏஐடியுசி தேசிய செயலாளர் வகிதா, பத்திரிக்கையாளர் ஜவஹர், ஏஐடியுசி தென் சென்னை மாவட்ட கவுரவத் தலைவர் ஏழுமலை, செங்கொடி ஆட்டோ சங்கத்தின் தமிழ்செல்வன், வங்கி அலுவலக சங்கத்தின் வீரக்குமார், ஏஐடியுசியின் புஷ்பராணி மற்றும்; பார்த்தசாரதி ஆகியோர் உரையாடினர்.

இன்றைய அரசியல்
கடந்த பாராளுமன்ற தேர்தலில் முதலாளித்துவ காங்கிரஸ் அரசை தோற்கடித்து தற்போது ஆளும் பாஜக அரசின் தொழிலாளர் பார்வை குறித்து தோழர்கள் உரையாடினர். ‘மத்திய அரசின் இந்துத்துவா அரசியல் இந்தியாவில் மதவாத அரசியலை வளர்த்துவிடுகின்றது. அதே சமயம் கம்யூனிச அரசியலின் தாக்கம் நாட்டில் குறைந்து வருகின்றது. மத்திய மதவாத அரசும் முதலாளி வர்க்கத்திற்காகவே செயல்படுகின்றது. தொழிலாளர்கள் நலன்கள் மற்றும் சட்டங்கள் முதலாளி வர்க்கத்திற்காக அழிக்கப்படுகின்றன. ராஜஸ்தான் மாநில பிஜேபி அரசு ஏற்கனவே தொழிலாளர் சட்டங்களை தளர்த்தியுள்ளது’ என தோழர் சீனிவாசன் கூறினார். ‘விவசாய வீழ்ச்சியினால் தொழிலாளர்கள் வேலை தேடி நகர்புறம் செல்லும் நிலையில் இன்றைய ஒப்பந்த தொழிலாளர் முறை அனைத்து தொழிலாளர்களின் நலன்களை அழித்து வருகின்றது’ என தோழர் வஹீதா குறிப்பிட்டார். ‘தொழிலாளர் மற்றும் தாழ்ந்த நடுத்தர மக்கள் சேமித்து வரும் பணத்தை வைத்து வங்கிகள் நடத்தும் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் அவர்களுக்கு கடன்களை மறுத்து  அவற்றை முதலாளிகளுக்கு தாரை வார்க்கின்றன. அவ்வாறு கொடுத்து திரும்ப வாங்க முடியாத கடன்கள் ஆயிரக்கணக்கான கோடிகளாகும்’ என அவர் குறிப்பிட்டார்.
 
நலவாரியங்களின் முடக்கம்
கட்டிடத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் குறித்து சரியான கணக்கெடுப்பு இல்லை எனினும் சுமார் 4 கோடி மக்கள் இதில் ஈடுபடுகின்றனர் என மதிப்பிடப்படுகிறது. இந்தியாவின் 40 கோடி தொழிலாளர்களில் 10சதமாவர். அமைப்புசாரா தொழிலாளர்கள் எனப்படும் இவர்களுக்கு முறையான தொழிலாளர் நலன்களை அரசு தரவேண்டும் எனத் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் தொடர்ந்து போராடிய பின் கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்களின் நல வரிச் சட்டம் (Building And Other Construction Workers Welfare Cess Act) 1996ல் கொண்டுவரப்பட்டது. இதன் நிலைமையை குறித்து அனைத்து பிரதிநிதிகளும் எடுத்துரைத்தனர்.

மூத்த பத்திரிக்கையாளரான தோழர் ஜவஹர் ‘1996ல் தேசிய அளவில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டும் 10 மாநிலங்களே இதை அமல்படுத்தியுள்ளன. அதில் ஒன்றான தமிழ்நாட்டில் சட்டத்தில் கூறப்பட்டுள்ள 1சதத்திற்கு பதிலாக .3சதமே வசூலிக்கப்படுகிறது. தேசிய அளவில் வசூலித்த வரிப்பணமே இன்று 11000கோடி ரூபாய் உள்ளது ஆனால் தொழிpலாளர்களுக்கு இதுவரை 1000 கோடி தான் செலவிடப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 22லட்சத் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். 606 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு 277 கோடி செலவிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் தமிழ்நாடு அரசு மேலும் 127 கோடி ரூபாய் தொழிலாளர் நலனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியது. கட்டிடத் தொழிலாளர்களுக்கு வேலையிட விபத்து மரணம் 1லட்சத்திலிருந்து 5 லட்சமாகவும், வடமாநிலத் தொழிலாளர்கள் தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவி;த்துள்ளன. இவை வரவேற்கப்படவேண்டியவை என்றாலும் தொழிலாளர் நல வாரியங்கள் தொழிலாளர்களுக்கு சலுகைகளை மறுப்பதான பணியில் ஈடுபடுவதாகவே அனைத்து சங்கப்பிரதிநிதிகளும் கருத்து தெரிவித்தனர். தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் நலன்கள் அவர்களது உரிமைகளாக கருதப்படுவதில்லை. அதை இலவசங்களாகவும் சலுகைகளாகவும் சித்தரிக்கப்படுவதை தோழர் வஹீதா கண்டித்தார். ‘5 வருடங்களுக்கு ஒரு முறை தொழிலாளர் தங்களுடைய நலவாரிய பதிவை புதுப்பிக்கவேண்டும் என்பது நடைமுறைக்கு உரியதல்ல. ஒரு அரசு ஊழியர் வேலையில் சேர்ந்தவுடன் அவருக்கு அனைத்து நலன்களும் தரப்படுகிற பொழுது, ஏன் அமைப்புசாரா தொழிலாளர்கள் மட்டும் புதுப்பிற்க வேண்டும்’ என சென்னை கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

தொழிலாளர் நலன்களை பெறுவதற்கு தொழிலாளர்களை அடிக்கடி நேரில் வரச் சொல்லி கட்டாயப்படுத்துவது தொழிலாளர்கள் தங்கள் வேலை ஊதியத்தை இழக்க வேண்டியுள்ளது என தோழர் புஷ்பராணி கூறினார்.

தொழிலாளர் ஓய்வு ஊதியம் இன்று 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டாலும், ‘இன்றைய நிலவரப்படி இது தொழிலாளர்களின் வாழ்விற்கு போதுமானது அல்ல எனவும் தற்போது ஓய்வு ஊதியம் 3000ரூபாயாக கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு அடிப்படையான பிரச்சனை ஓய்வு ஊதியம் பணவீக்கத்தின் அடிப்படையில் மாறறுவதற்கான வழிவகுக்கப்படவில்லை. அரசு ஊழியர்களின் ஓய்வு ஊதியம் பணவீக்கத்தின் அடிப்படையில் மாறும் போது ஏன் கட்டிடத் தொழிலாளர்களுக்கு ம்ட்டும் அரசு நிர்ணயிக்கும் தொகை கொடுக்கப்படுகின்றது’என தோழர் சீனிவாசன் கோரிக்கை எழுப்பினார். விபத்து மரணம் 5 லட்சமாக மாற்றப்பட்டாலும் இயற்கை மரணத்திற்கு இன்னும் 10000ரூபாய் தரப்படுகிறது. இதை 3 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

பாதுகாப்பற்ற வேலை நிலைமை
கட்டிடத் தொழில் கடும் உழைப்பையும், ஆபத்துகளையும் கொண்டது. கட்டுமானத் தொழில்களிவ் சரியான பாதுகாப்பு முறைகளை முதலாளிகள் பயன்படுத்துவதில்லை. இதனால் பல வருடங்களாக தொழிலாளர்கள் கட்டிடத் தொழிலில் தங்களுடைய வாழ்வையும் உடல் உறுப்புகளை இழந்து வேலைக்கே செல்ல முடியாத நிலைமை ஆகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த விபத்துகள் பொது மக்களின் கண்களுக்கே வராத நிலையில் முகலிவாக்கம் கட்டிட இடிபாடுகளில் இறந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் நிலைமை அனைவரையும் குலுக்கியது. ஆனால் இது ஒரு முறை நடப்பதில்லை. மெட்ரோ திட்டங்களிலும், கல்லூரி, தொழிற்சாலை, வீடு சுவர்கள் இடிபாடுகளில் தொழிலாளர்கள் இன்னும் மடியும் நிலையே. முகலிவாக்கத்தின் எதிரொலியாக அரசு வடமாநிலத் தொழிலாளர்களை பதிவு செய்வதற்கும், உயிர் இழப்பு நிவாரணத்தையும் அதிகரிக்க முன்வந்துள்ளது. ஆனால் தொழிலாளர்களின் பாதுகாப்பில்லாத நிலைமை இன்னும் மாறவில்லை. மேலும் இதற்காக உள்ள விதிமுறைகளில் உள்ள தடங்கல்களினால் தொழிலாளர்கள் உரிய நிவாரணம் பெறுவதில்லை. ‘தொழிலாளர்களுக்கு விபத்து நேரிடும் போது போதிய விவரம் தெரியாததால் விபத்துகளை காவல் துறையிடம் பதிவு செய்வதில்லை. இதனால் தொழிலாளர் விபத்து இழப்பீடு சட்டங்கள் மூலம் நிவாரணம் பெற முடிவதில்லை. மேலும் முதலாளிகள் இதனால் பாதிக்கப்படுவர் எனப் பலர் பதிவு செய்யத் தயங்குகின்றனர். இந்த போக்கை மாற்றி தொழிலாளர் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்’ என மாவட்ட பொது செயலாளர் சீனிவாசன் எடுத்துரைத்தார்.

பெண் தொழிலாளர்களின் நிலை
அனைத்து அமைப்பு மற்றும் அமைப்புசாரா தொழில்களிலும் பெண் தொழிலாளர்கள் தொழிலாளர் மட்டுமன்றி பெண் என்ற அடிப்படையிலும் ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர். பெண் தொழிலாளர்களின் ஊதியம் ஆண் தொழிலாளர்களை விட குறைவாகவே உள்ளது. சம ஊதியக் கோரிக்கைகளை தோழர் புஷ்பராணி வலியுறுத்தினார். மகப்பேறு கால உதவித் தொகையை 36000ருபாய்க்கு உயர்த்த தோழர் வஹீதா கோரிக்கை எழுப்பினார். தொழிலாளர்களுக்கு கழிப்பிட வசதி வேண்டிய கோரிக்கையை ஆமோதித்தார் தோழர் ஜவஹர்.

மற்ற கோரிக்கைகள்
கட்டிடம் கட்டும் தொழிலாளர்களுக்கு வீடு இல்லை குறையை போக்க வீட்டு மனை மற்றும் வீடு கட்ட கடனுதவி
கட்டிடத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்விக்கட்டணத்தை அரசே ஏற்று அவரவர் தாய் மொழியில் இலவசக் கல்வியை அமலாக்கம் செய்தல்.
பெண் கட்டிடத் தொழிலாளர்களுக்கு 50 வயது முதல் ஓய்வூதியம்

ஏஐடியுசி கட்டிடத் தொழிலாளர்கள் சங்கத்தின் தென் சென்னை மாவட்ட மாநாடு கடந்த செப்டம்பர் 30 அன்று திருவான்மியூரில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் கட்டிடத் தொழிலாளர்களின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. இவற்றில் ஏஐடியுசி கட்டிடத் தொழிலாளர்களின் சங்க மாநில செயலாளர் ரவி, ஏஐடியுசி தேசிய செயலாளர் வகிதா, பத்திரிக்கையாளர் ஜவஹர், ஏஐடியுசி தென் சென்னை மாவட்ட கவுரவத் தலைவர் ஏழுமலை, செங்கொடி ஆட்டோ சங்கத்தின் தமிழ்செல்வன், வங்கி அலுவலக சங்கத்தின் வீரக்குமார், ஏஐடியுசியின் புஷ்பராணி மற்றும்; பார்த்தசாரதி ஆகியோர் உரையாடினர்.

இன்றைய அரசியல்
கடந்த பாராளுமன்ற தேர்தலில் முதலாளித்துவ காங்கிரஸ் அரசை தோற்கடித்து தற்போது ஆளும் பாஜக அரசின் தொழிலாளர் பார்வை குறித்து தோழர்கள் உரையாடினர். ‘மத்திய அரசின் இந்துத்துவா அரசியல் இந்தியாவில் மதவாத அரசியலை வளர்த்துவிடுகின்றது. அதே சமயம் கம்யூனிச அரசியலின் தாக்கம் நாட்டில் குறைந்து வருகின்றது. மத்திய மதவாத அரசும் முதலாளி வர்க்கத்திற்காகவே செயல்படுகின்றது. தொழிலாளர்கள் நலன்கள் மற்றும் சட்டங்கள் முதலாளி வர்க்கத்திற்காக அழிக்கப்படுகின்றன. ராஜஸ்தான் மாநில பிஜேபி அரசு ஏற்கனவே தொழிலாளர் சட்டங்களை தளர்த்தியுள்ளது’ என தோழர் சீனிவாசன் கூறினார். ‘விவசாய வீழ்ச்சியினால் தொழிலாளர்கள் வேலை தேடி நகர்புறம் செல்லும் நிலையில் இன்றைய ஒப்பந்த தொழிலாளர் முறை அனைத்து தொழிலாளர்களின் நலன்களை அழித்து வருகின்றது’ என தோழர் வஹீதா குறிப்பிட்டார். ‘தொழிலாளர் மற்றும் தாழ்ந்த நடுத்தர மக்கள் சேமித்து வரும் பணத்தை வைத்து வங்கிகள் நடத்தும் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் அவர்களுக்கு கடன்களை மறுத்து  அவற்றை முதலாளிகளுக்கு தாரை வார்க்கின்றன. அவ்வாறு கொடுத்து திரும்ப வாங்க முடியாத கடன்கள் ஆயிரக்கணக்கான கோடிகளாகும்’ என அவர் குறிப்பிட்டார்.

நலவாரியங்களின் முடக்கம்
கட்டிடத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் குறித்து சரியான கணக்கெடுப்பு இல்லை எனினும் சுமார் 4 கோடி மக்கள் இதில் ஈடுபடுகின்றனர் என மதிப்பிடப்படுகிறது. இந்தியாவின் 40 கோடி தொழிலாளர்களில் 10சதமாவர். அமைப்புசாரா தொழிலாளர்கள் எனப்படும் இவர்களுக்கு முறையான தொழிலாளர் நலன்களை அரசு தரவேண்டும் எனத் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் தொடர்ந்து போராடிய பின் கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்களின் நல வரிச் சட்டம் (டீரடைனiபெ யனெ ழுவாநச ஊழளெவசரஉவழைn றுழசமநசள றுநடகயசந ஊநளள யுஉவ) 1996ல் கொண்டுவரப்பட்டது. இதன் நிலைமையை குறித்து அனைத்து பிரதிநிதிகளும் எடுத்துரைத்தனர்.

மூத்த பத்திரிக்கையாளரான தோழர் ஜவஹர் ‘1996ல் தேசிய அளவில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டும் 10 மாநிலங்களே இதை அமல்படுத்தியுள்ளன. அதில் ஒன்றான தமிழ்நாட்டில் சட்டத்தில் கூறப்பட்டுள்ள 1சதத்திற்கு பதிலாக .3சதமே வசூலிக்கப்படுகிறது. தேசிய அளவில் வசூலித்த வரிப்பணமே இன்று 11000கோடி ரூபாய் உள்ளது ஆனால் தொழிpலாளர்களுக்கு இதுவரை 1000 கோடி தான் செலவிடப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 22லட்சத் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். 606 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு 277 கோடி செலவிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் தமிழ்நாடு அரசு மேலும் 127 கோடி ரூபாய் தொழிலாளர் நலனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியது. கட்டிடத் தொழிலாளர்களுக்கு வேலையிட விபத்து மரணம் 1லட்சத்திலிருந்து 5 லட்சமாகவும், வடமாநிலத் தொழிலாளர்கள் தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவி;த்துள்ளன. இவை வரவேற்கப்படவேண்டியவை என்றாலும் தொழிலாளர் நல வாரியங்கள் தொழிலாளர்களுக்கு சலுகைகளை மறுப்பதான பணியில் ஈடுபடுவதாகவே அனைத்து சங்கப்பிரதிநிதிகளும் கருத்து தெரிவித்தனர். தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் நலன்கள் அவர்களது உரிமைகளாக கருதப்படுவதில்லை. அதை இலவசங்களாகவும் சலுகைகளாகவும் சித்தரிக்கப்படுவதை தோழர் வஹீதா கண்டித்தார். ‘5 வருடங்களுக்கு ஒரு முறை தொழிலாளர் தங்களுடைய நலவாரிய பதிவை புதுப்பிக்கவேண்டும் என்பது நடைமுறைக்கு உரியதல்ல. ஒரு அரசு ஊழியர் வேலையில் சேர்ந்தவுடன் அவருக்கு அனைத்து நலன்களும் தரப்படுகிற பொழுது, ஏன் அமைப்புசாரா தொழிலாளர்கள் மட்டும் புதுப்பிற்க வேண்டும்’ என சென்னை கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

தொழிலாளர் நலன்களை பெறுவதற்கு தொழிலாளர்களை அடிக்கடி நேரில் வரச் சொல்லி கட்டாயப்படுத்துவது தொழிலாளர்கள் தங்கள் வேலை ஊதியத்தை இழக்க வேண்டியுள்ளது என தோழர் புஷ்பராணி கூறினார்.

தொழிலாளர் ஓய்வு ஊதியம் இன்று 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டாலும், ‘இன்றைய நிலவரப்படி இது தொழிலாளர்களின் வாழ்விற்கு போதுமானது அல்ல எனவும் தற்போது ஓய்வு ஊதியம் 3000ரூபாயாக கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு அடிப்படையான பிரச்சனை ஓய்வு ஊதியம் பணவீக்கத்தின் அடிப்படையில் மாறறுவதற்கான வழிவகுக்கப்படவில்லை. அரசு ஊழியர்களின் ஓய்வு ஊதியம் பணவீக்கத்தின் அடிப்படையில் மாறும் போது ஏன் கட்டிடத் தொழிலாளர்களுக்கு ம்ட்டும் அரசு நிர்ணயிக்கும் தொகை கொடுக்கப்படுகின்றது’என தோழர் சீனிவாசன் கோரிக்கை எழுப்பினார். விபத்து மரணம் 5 லட்சமாக மாற்றப்பட்டாலும் இயற்கை மரணத்திற்கு இன்னும் 10000ரூபாய் தரப்படுகிறது. இதை 3 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
;
பாதுகாப்பற்ற வேலை நிலைமை
கட்டிடத் தொழில் கடும் உழைப்பையும், ஆபத்துகளையும் கொண்டது. கட்டுமானத் தொழில்களிவ் சரியான பாதுகாப்பு முறைகளை முதலாளிகள் பயன்படுத்துவதில்லை. இதனால் பல வருடங்களாக தொழிலாளர்கள் கட்டிடத் தொழிலில் தங்களுடைய வாழ்வையும் உடல் உறுப்புகளை இழந்து வேலைக்கே செல்ல முடியாத நிலைமை ஆகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த விபத்துகள் பொது மக்களின் கண்களுக்கே வராத நிலையில் முகலிவாக்கம் கட்டிட இடிபாடுகளில் இறந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் நிலைமை அனைவரையும் குலுக்கியது. ஆனால் இது ஒரு முறை நடப்பதில்லை. மெட்ரோ திட்டங்களிலும், கல்லூரி, தொழிற்சாலை, வீடு சுவர்கள் இடிபாடுகளில் தொழிலாளர்கள் இன்னும் மடியும் நிலையே. முகலிவாக்கத்தின் எதிரொலியாக அரசு வடமாநிலத் தொழிலாளர்களை பதிவு செய்வதற்கும், உயிர் இழப்பு நிவாரணத்தையும் அதிகரிக்க முன்வந்துள்ளது. ஆனால் தொழிலாளர்களின் பாதுகாப்பில்லாத நிலைமை இன்னும் மாறவில்லை. மேலும் இதற்காக உள்ள விதிமுறைகளில் உள்ள தடங்கல்களினால் தொழிலாளர்கள் உரிய நிவாரணம் பெறுவதில்லை. ‘தொழிலாளர்களுக்கு விபத்து நேரிடும் போது போதிய விவரம் தெரியாததால் விபத்துகளை காவல் துறையிடம் பதிவு செய்வதில்லை. இதனால் தொழிலாளர் விபத்து இழப்பீடு சட்டங்கள் மூலம் நிவாரணம் பெற முடிவதில்லை. மேலும் முதலாளிகள் இதனால் பாதிக்கப்படுவர் எனப் பலர் பதிவு செய்யத் தயங்குகின்றனர். இந்த போக்கை மாற்றி தொழிலாளர் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்’ என மாவட்ட பொது செயலாளர் சீனிவாசன் எடுத்துரைத்தார்.

பெண் தொழிலாளர்களின் நிலை
அனைத்து அமைப்பு மற்றும் அமைப்புசாரா தொழில்களிலும் பெண் தொழிலாளர்கள் தொழிலாளர் மட்டுமன்றி பெண் என்ற அடிப்படையிலும் ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர். பெண் தொழிலாளர்களின் ஊதியம் ஆண் தொழிலாளர்களை விட குறைவாகவே உள்ளது. சம ஊதியக் கோரிக்கைகளை தோழர் புஷ்பராணி வலியுறுத்தினார். மகப்பேறு கால உதவித் தொகையை 36000ருபாய்க்கு உயர்த்த தோழர் வஹீதா கோரிக்கை எழுப்பினார். தொழிலாளர்களுக்கு கழிப்பிட வசதி வேண்டிய கோரிக்கையை ஆமோதித்தார் தோழர் ஜவஹர்.

மற்ற கோரிக்கைகள்
கட்டிடம் கட்டும் தொழிலாளர்களுக்கு வீடு இல்லை குறையை போக்க வீட்டு மனை மற்றும் வீடு கட்ட கடனுதவி
கட்டிடத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்விக்கட்டணத்தை அரசே ஏற்று அவரவர் தாய் மொழியில் இலவசக் கல்வியை அமலாக்கம் செய்தல்.
பெண் கட்டிடத் தொழிலாளர்களுக்கு 50 வயது முதல் ஓய்வூதியம்

This entry was posted in Construction Workers, Contract Workers, News, Unorganised sector, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.