Chennai Street Vendors Demand Rights on National Vendors Day

20.1.15 அன்று சாலையோர சிறுகடை வியாபாரிகள் தினத்தை ஒட்டி பிரதிநிதிகள் கூட்டம் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் சார்பாக நடைபெற்றது. சென்னை மாநகராட்சி ஆணையாளருக்கு பிரதிநிதிகள் சார்பாக பின்வரும் பிரச்சனைகளை தீர்க்கக் கோரி கோரிக்கைகள் தரப்பட்டன.

StreetVendorsDayMeet

சாலையோர சிறுகடை வியாபாரிகளின் தேசிய கொள்கையை ஒட்டி மத்திய மசோதா சட்டமாக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று ஓராண்டு ஆகியும்

தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படாமல் உள்ளது.

25 ஆண்டுகளுக்கு மேலாக அல்லிகுளம் மூர்மார்க்கெட் பழைய பொருள் சாலையோர சிறுகடை வியாபாரிகளில் 131 பேருக்கு மட்டுமே இடம் ஒதுக்கப்பட்டு

கடைகள் கட்டப்படாமல் உள்ளன. விடுபட்ட 165 சிறுகடை வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கப்படாமல் சென்னை மாநகராட்சி காலம் தாழ்த்தி வருகிறது.

அன்றாட தேவைக்கான பொருட்கள், மீன், உணவுப்பொருள், பூ, பழம், காய்கறி, கீரை, பிளாஸ்டிக் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், சாலையோரங்களிலும் தெரு சந்து பூங்கா மற்றும் பொது அல்லது தனியார் பகுதியில் சைக்கிள், தள்ளு வண்டிகளிலும் வியாபாரம் செய்பவர்களே சாலையோர சிறுகடை வியாபாரிகள் ஆவர்.

கோயம்பேடு சிறுகடை வியாபாரிகளின் வாழ்வுரிமை அன்றாடம் கேள்விக்குறியாக உள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் காலையில் கூடும் நூற்றுக்கணக்கான மீன் வியாபாரிகளான பெண்களுக்கும் ஆண்களுக்கும் அடிப்படை வசதிகளான குடிநீர்,கழிப்பிட வசதிகளின்றி அல்லல்படுகின்றனர்.

கோரிக்கைகள்:

1. தேசிய கொள்கையின் படியும், மத்திய சட்டத்தின் படியும் சிறுகடை வியாபாரிகளின் கணக்கெடுப்பை சென்னை மாநகரிலும், தமிழ்நாடு முழுவதிலும் உள்ளாட்சி அமைப்புக்கள் மூலம் செயல்படுத்தி அத்தாட்சி அட்டை, இடம், கடனுதவி செயல்படுத்த வேண்டும்.

2. சாலையோர சிறுகடை வியாபாரம் செய்யும் ஒவ்வொருவரையும் கட்டாய பதிவு, அடையாள அட்டை வழங்குதல் கடைகளுக்கான உரிமைகள் – கடமைகள் அடிப்படை வசதி வங்கி கடன் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.

3. தமிழ்நாடு முழுவதும் நகர சிறுவியாபாரிகள் குழு அமைக்கவும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சாலையோர சிறுகடை வியாபாரிகள் திட்டம், குறை

தீர்த்தல், தகராறு தீர்த்தல் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும்.

4. கடன் உதவி, காப்பீடு மற்றும் பிற சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் சாலையோர சிறுகடை வியாபாரிகளை மேம்படுத்த வேண்டும்.

5. அல்லிகுளம் பழைய பொருள் சாலையோர சிறுகடை வியாபாரிகள் 296 பேருக்கும் இடம், கடை, கடனுதவி ஆகியவை உடனடியாக தரப்பட வேண்டும்.

6. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம்,சாலை வசதிகள் உடனே ஏற்படுத்தி தரப்பட வேண்டும்.

7. கோயம்பேடு சாலையோர சிறுகடை வியாபாரிகளுக்கும் தொழில் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

This entry was posted in News, Press Releases, Unorganised sector, Women Workers and tagged , , , , . Bookmark the permalink.