நல வாரியக் கொள்கைகளை எதிர்த்து ஏஐடியுசி சங்க அமைப்பு சாரா தொழிலாளர்கள் போராட்டம்

தொழிலாளர் நல வாரியங்களில் செயல்படுத்தப்படும் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நலவாரிய முற்றுகைப் போராட்டங்கள் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஜுலை 21 அன்று நடை பெற்றது. சென்னை அண்னாநகரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில். 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

AITUC Construction Workers Protest1

போராட்டத்தில் பேசிய வட சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் மூர்த்தி, “நலவாரியங்கள் செயல்படத் துவங்கி 20 வருட காலங்களில் தொழிலாளர்களின் நலப் பயன்கள் மாறவில்லை” எனக் குறிப்பிட்டார். தற்போது, இயற்கை மரணங்களுக்கு ரூ50000, வேலையில் ஏற்படும் மரணங்களுக்கு ரூ1 லட்சம், ஈமச்சடங்குகளுக்கு ரூ2000 மற்றும் பேறுகால உதிவிகளுக்கு ரூ6000 கொடுக்கப்படுகிறது. விபத்து மரணத்திற்கு ரூ 10 லட்சம், இயற்கை மரணத்திற்கு ரூ 5 லட்சம், திருமணத்திற்கு ரூ 1லட்சம், பிரசவகால உதவியாக ரூ60 ஆயிரம், ஈமச்சடங்குக்கு ரூ25 ஆயிரம் என உயர்த்த வேண்டி சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கைகள் எழுப்பினர்.

தற்போது கொடுக்கப்படு;ம் பயன்கள் கூட சரியாக கொடுக்கப்படுவதில்லை என்று தொழிலாளர்கள் கூறினர். தொழிலாளர் பதிவு மட்டுமன்றி பணப்பயன் மனுக்கள் கொடுப்பதற்கும், தொழிலாளர்கள் நேரில் வரவேண்டும் என்று தொழிலாளர் நலத் துறை கூறுகிறது. முன்பு மின்ட் அருகே இருந்த நல வாரியம் மூடப்பட்டு, அண்ணாநகருக்கு மாற்றப்பட்டு விட்டதால், தொழிலாளர் நேரில் வருவதற்கு மேலும் கடினமாக உள்ளதாக கொருக்குப்பேட்டையில் தையல் தொழிலாளராக வேலை செய்யும் ஜெயந்தி கூறினார். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வேலை செய்தாலே கூலி என்ற நிலைமையில், தொழிலாளர்களை நேரில் வரச் சொல்வது என்பது நலத்துறையின் தொழிலாளர் விரோதப் போக்கையை வெளிப்படுத்துகிறது. மேலும் அற்பமான காரணங்களை வைத்து மனுக்களை நிராகரிக்கும் நலத்துறை போக்கினை தோழர் மூர்த்தி சுட்டிக்காட்டினார்.

கட்டத் தொழிலாளர்கள் நலவாரியம் கட்டுமான பணிகளிலிருந்து ரூ1000 கோடிக்கு மேலாக வரியாக வசூலித்து உள்ளது. இந்த வரியின் நோக்கமே தொழிலாளர்களின் சமூகப்பாதுகாப்புக்குதான். இவ்வாறு வசூலிக்கப்படுகின்ற தொழிலாளர்களின் பணத்தை தொழிலாளர்களுக்கு தராமல் ஏய்க்கும் மாநில அரசின் செயல்பாட்டை கண்டித்தார் தென் சென்னை மாவட்ட தலைவர் தோழர் சீனிவாசன். தொழிலாளர் பதிவுகளில் தொழிற்சங்கங்களை புறக்கணிப்பதை கண்டித்தும், நலவாரியத்தை தன்னாட்சி அதிகாரம் கொண்ட முத்தரப்பு குழுவினை அமைத்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப் பட்டது.

This entry was posted in Construction Workers, News, Unorganised sector, Workers Struggles, தமிழ் and tagged , . Bookmark the permalink.