பி.எஃப் கணக்கிலிருந்து தொழிலாளர்கள் பணம் கோருவதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கும் change.org கோரிக்கை

Contributed by Anand Kumar, Coimbatore

கடந்த பிப் 10 ஆம் தேதி மத்திய அரசின் சுற்றறிக்கையில் பி எப் வித் டிரா செய்வதில் கடும் கட்டுப்பாடுகளை விதித்ததோடு அல்லாமல் ரகசியமாக , எந்த ஒரு அறிவிப்பும் இன்றி அதிர்ச்சி தரும் வகையில் ஒரு அறிவிக்கையை அனுப்பி இருக்கிறது..அதன் படி , இனி எந்த தொழிலாளியும் தனது வேலையை விட்டு நின்றாலும் அவரின் வயது 58 நிறைவடையும் வரை தனது பி எப் பென்சன் உள்ளிட்டவற்றை கோர முடியாது. அவரின் கணக்கில் இருந்து பிடிக்கப்பட்ட 12% மட்டுமே அளிக்கப்படும். 35 வயதில் ஒருவர் பணியை விட்டாலும் , அவர் பங்கு 12% தவிர்த்த மீதமுள்ள நிறுவன பங்கு 12 % பென்சனர் திட்டம் உள்ளிட்ட எதுவும் அவரின் 58 வயது அன்றி கோரவே முடியாத அளவு குருட்டு த்தனமான ஒரு அறிவிக்கையை அனுப்பி செயல்படுத்தியும் விட்டது.

இது சம்பந்தமாக எந்த ஒரு செய்தி குறிப்போ எதுவும் பத்திரிக்கைகளுக்கு வழங்காமல் கெசட்டில் வெளியிட்டு செயல்படுத்தியும் விட்டது. பி எப் மீதான வரி கவனத்தில் எல்லாரும் இருக்கும் போது , கவனம் அங்கே இருக்க. இங்கே இப்படி ஒரு மோசமான செயல்பாட்டை செய்திருக்கிறது. இது சம்பந்தமான விவரங்கள் http://www.jagoinvestor.com/wp-content/uploads/files/EPF-withdrawal-restriction-notification.pdf இந்த அறிவிக்கையில் உள்ளன. மேலும் சில தன்னார்வலர்கள் Change.org என்ற தளத்தில் கோரிக்கையும் எழுப்ப தொடங்கி உள்ளனார்கள்.

https://www.change.org/p/why-should-we-wait-till-58-years-to-withdraw-employee-provident-fund-noepfwithdrawallimits

 

This entry was posted in Labour Laws, labour reforms, News, Press Releases, Workers Struggles, தமிழ் and tagged , . Bookmark the permalink.