தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்ட அரசியல் கட்சிகளை கோருகிறது ஏஐசிசிடியு

மே 16 அன்று தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி, தொழிலாளர் வர்க்க கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அகில இந்திய தொழிற்சங்க மய்ய கவுன்சில்(ஏஐசிசிடியு) தொழிலாளர் வர்க்க சாசன அறிக்கையை வெளியிட்டுள்ளது. நவீன தாராளமயவாதப் பிண்ணனியில் அமைப்புசார்ந்த தொழிலாளர்களின் உரிமைகள் பல்வேறு உற்பத்தி முறைகளாலும், அரசின் மெத்தனப் போக்கினாலும், தொழிலாளர் சட்ட சீர்திருத்த முயற்சிளாலும், பறிபோகும் நிலையில் உள்ளன. இதை ஒட்டி ஏஐசிசிடியு ஒப்பந்த தொழிலாளர் முறையையும் பயிற்சியாளர் முறையையும் ஒழிப்பதற்கு, இரண்டு தொடர் வருடங்களில் 480நாள் வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நிரந்தரம் செய்ய கோரியுள்ளது. மேலும், சம வேலை பாரக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தொழிலாளரின ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் என்று கோருகிறது. ரகசிய வாக்கெடுப்பு மூலம் தொழிலாளர்கள் சங்க உரிமையை பாதுகாக்க அரசு தொழிற்சங்க விதிகளை மாற்ற வேண்டும், நிறுவனங்களுடன் போடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வெளியிட வேண்டும், தொழிலாளர்கள் உரிமையை பறிக்கும் ஆட்டோமொபைல் துறையை பொதுத் துறையாக அறிவிக்கக்கூடாது என்றும் தொழிலாளரகளின் போராட்டங்கள் மீது காவல் துறையை ஏவக்கூடாது என்றும் சாசனம் கோருகிறது.

அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் காக்க முறையான சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் நலப் பதிவுகளில் தொழிற்சங்கங்களை ஈடுபடுத்தல், ஆபத்தான தொழில்களில் விபத்துகளை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், கண்காணிப்புகளை அதிகரித்தல், மனிதக் கழிவுகளை அகற்றுதலில் தலித் தொழிலாளர்களை ஈடுபடுத்துதலை தடை செய்து தொழிலாளர்களுக்கு மாற்று வேலைக்கு ஏற்பாடு செய்தல், இடம் பெயர் தொழிலாளர்களின் நலன் காக்க தனி ஆணையரகம் எனப் பல கோரிக்கைகளை சாசனம் வைத்துள்ளது.

ஏஐசிசிடியுவின் கோரிக்கைகளை இங்கே முழுவதுமாக காணலாம்.

Download (PDF, 1.01MB)

This entry was posted in News, தமிழ் and tagged , . Bookmark the permalink.