தொழிலாளர்களின் தேசிய மாநாடு அறிவிப்பு – மார்ச் 30, 2016

மவுலங்கார் ஹால். புது டெல்லி

(for English)

(மொழிபெயர்ப்பு தொழிலாளர் கூடம் குழு)

Chengalpattu-1மத்திய தொழிற்சங்கங்களின் பொது மேடை சேவை துறை மற்றும் தொழில் துறையில் உள்ள தொழிலாளர் சங்கங்களின் தேசிய கூட்டமைப்புக்களோடு இணைந்து தொழிலாளர்களின் தேசிய மாநாட்டை ஒருங்கிணைத்தது. கடந்த 02.09.2015 அன்று நடந்த தேசிய பொது வேலை நிறுத்தத்தின் வரலாறு காணாத வெற்றிக்கும் அதை தொடர்ந்து 10.03.2016 அன்று நடைபெற்ற தேசிய போராட்ட தினத்தின் வெற்றிக்கும், தொழிலாளர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கிறது. இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை தோற்கடிக்க, இந்த போராட்டங்களின் வாயிலாக உருவாகி இருக்கும் தொழிலாளர் ஒற்றுமையை வளர்த்து வலுவடையச் செய்ய வேண்டும்.

தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிர்மறையான இந்த அரசின் போக்கும், அதனால் தொழிலாளர்களுக்கு உருவாகும் சவால்களையும் இந்த மாநாடு கவனத்தில் கொள்கிறது. செப்டம்பர் 12 பொது வேலை நிறுத்தத்திற்குப் பின் 12 அம்சங்கள் கொண்ட கோரிக்கை பட்டியல் மீதான விவாதம் செய்ய இந்த அரசிற்கு மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து கடிதம் அளித்தன. ஆனால் அரசு அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் கோடிக்கும் மேலான தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து நடத்திய போராட்டத்தை அலட்சியப்படுத்தி உள்ளது. இந்த கோரிக்கை பட்டியலில் தேசியப் பொருளாதார நலனும், திட்டத் தொழிலாளர்கள் உட்பட அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா துறைகளின் உள்ள தொழிலாளர்களின் வாழ்வதார நலனும் உள்ளடங்கி உள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதிலும் வேலை வாய்ப்பு ஏற்படு;த்துவதிலும் அரசு ஊடகங்கள் வழியாக வெறும் வாய் சவடால் விடுகிறதே தவிர அர்த்தமுள்ள எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை, பொருள் வினியோகத்தை அனைவருக்கும் அமல்படுத்துவதை விட்டுவிட்டு ‘நேரடி நன்மை பரிமாற்றம்’ என்ற பெயரில் சாதாரண ஏழை மக்களை திட்டங்களிலிருந்து விலக்கி மக்கள் விரோத போக்குகளை கடைபிடிக்கிறது. டீசலின் மேல் போடப்பட்டுள்ள கூடுதல் வரி, நிலக்கரியின் செஸ் வரி இரட்டிப்பு, 2016 – 17 பட்ஜெட்டில் மறைமுக வரி அதிகரிப்பு, மேலும் கச்சா எண்ணெய் பொருட்கள் விலை அதிகரிப்பு ஆகியவற்றால் அத்தியாவசிய பொருட்களின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வெளி நாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பணத்தை மீட்பதை பற்றிய விவகாரத்தில் இந்த அரசு மௌனம் சாதிக்கிறது. நான்கு இலட்சம் கோடி தாண்டிய நேரடி வரி கட்டத் தவறியவர்களிடம் வரி மீட்பதிலும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் கடன் மற்றும் வரி செலுத்த தவறிய நபர்களுக்கு மேலும் விதிவலக்குகள் தரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மறைமுக வரிகளை அதிகரித்தும் சமூக நலத்துறைக்கான நிதி ஒதுக்கிட்டை குறைத்தும் சராசரி மனிதர்களை நசுக்கி வருகிறது.

சமூக பாதுகாப்பு திட்டங்கள் அனைத்தும் தீவிரமான தாக்குதலை சந்திக்கின்றன. தொழிலாளர் வைப்பு நிதி, தொழிலாளர் அரசு காப்பிட்டு திட்டங்களை கட்டாயமற்ற திட்டங்களாக மாற்றி அமைக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இவை சமூகப் பாதுகாப்புகளை முற்றிலுமாக செயல் இழக்க செய்து விடும். 2004ஆம் ஆண்டிற்குப் பின் அரசு பாதுகாப்பு, ரயில்வேஸ் போன்ற துறைகளில் சேர்ந்த தொழிலாளர்கள் மீது, தீவிர விமர்சனத்திற்கு உள்ளாகிய ‘புதிய ஓய்வு திட்டம்’ திணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் போதிய நிதியும் செயலாற்றலும் உருவாக்காமல் பழைய சமூகத் திட்டங்களை அமைப்புசாரா தொழிலாளர்களின் பாதுகாப்பு என்ற பெயரில் புதிய பெயர் சூட்டி அமைப்புசாரா தொழிலாளர்களை ஏமாற்றி வருகிறது.

தொழிலாளர் வைப்பு நிதி மீதான வரி விதிப்பை திரும்ப பெற்ற நிலையிலும் சிறு சேமிப்புத் திட்டங்களான பொது வைப்பு நிதி, அஞ்சல் சேமிப்பு, பெண் குழந்தை சேமிப்பு, கிஸான் விகாஸ் பத்ரா தேசிய சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதத்தை அதிக அளவு இந்த அரசு குறைத்துள்ளது. இது, சராசரி மக்களையும், ஏழை எளிய மக்களையும் குறிப்பாக ஓய்வு பெற்று வட்டி வருவாயை நம்பி வாழும் முதியோர்களையும் பெருமளவு பாதிக்கும்.

தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த எதிர்ப்பினை உதாசீனப்படுத்திவிட்டு இந்த அரசு தொழிலாளர் சட்டங்களை சீர்குலைத்துக் கொண்டு இருக்கிறது. தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் இச்செயலை முதலாளிகள் ஆட்குறைப்பு செய்வதற்கு ஏதுவாக இந்த அரசு செய்து கொண்டு இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் செய்தது போல முதலாளிகளுக்கு சாதகமாக தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்களை செய்யக் கோரி மாநில தலைமைச் செயலாளர்களுக்கு பிரதமர் அலுவலகம் எழுத்து பூர்வமான அறிக்கையை அனுப்பியுள்ளது. குறிப்பாக ஜனவரி 12 அன்று அறிவிக்கப்பட்ட அரசு ஆணை மூலம் இந்திய அரசின் 9 முக்கிய தொழிலாளர் சட்டங்கள் மற்றும் அரசு ஆய்விலிருந்து ஸ்டார்ட் – அப் (Start-Up) கம்பெனிகளுக்கு தொழிலாளர் துறை ஆணையர் விலக்கு அளித்துள்ளார். இது சட்ட மீறல்களை நெறிப்படுத்துவதற்கு வகை செய்யும்.

நாற்பதுக்கும் குறைவாக தொழிலாளர் வேலை செய்யும் தொழிற்சாலைகளுக்கு, 14 முக்கிய தொழிலாளர் சட்டங்களிலிருந்து முன் மொழியப்பட்ட சிறு தொழிற்சாலை மசோதா விலக்கு அளிக்கின்றது. தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை ஏதும் செய்யாமல், ஊதியத்திற்காக தொழிலாளர் நெறி முறை தொகுப்பு(Labour Code on Wages Bill) மற்றும் தொழிற்சாலை உறவுக்களுக்கான தொழிலாளர் நெறிமுறை தொகுப்பு(Labour Code on Industrial Relations Bill) மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ‘144 ஆம் விதியை’ முத்தரப்பு ஆலோசனையை மீறுவதாகும். இந்த சீர்திருத்தங்கள் 90சத தொழிலாளர்களை அனைத்து தொழிலாளர்களின் பாதுகாப்பில் இருந்து விலக்கி முதலாளிகளின் சுரண்டல்களை அதிகமாக்கும். அதே நேரத்தில் ராஜஸ்தான், ஹரியானா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் செயலாக்கம் செய்வது போல் அனைத்து மாநிலங்களிலும் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி போராடும் தொழிலாளர்கள் மீது கடும் அடக்குமுறை, அச்சுறுத்தல் மேலும் சிறையில் அடைத்தலும் நடந்து கொண்டு இருக்கிறது.

விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் தீவிர தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். நில ஆர்ஜித சட்டத்தின் கீழ் விலசாயிகள் நில உரிமைகளும், விவசாய தொழிலாளர்களின் வாழ்வதார உரிமைகளும் பறிபோகும் நிலை இருந்தது. மக்கள் போராட்டங்களின் காரணமாக இந்த சட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அபாய நிலை முற்றிலுமாக நீங்கவில்லை.

பொதுத்துறை நினைக்க முடியாத அளவுக்கு தாக்குதலை சந்தித்து வருகிறது. மத்திய பொதுத்துறை கம்பெனிகளின் பங்கு விற்பனை அல்லாது இந்தக் கம்பெனிகளை முழுவதுமாக விற்பனை செய்ய அரசு தயராகி வருகிறது. அதன் முக்கிய இலக்கு. அதிக லாபம் ஈட்டும் மஹாரத்ன என அறிவிக்கப்பட்ட மத்திய பொதுத்துறை கம்பெனிகளை தேசிய மற்றும் பன்னாட்டு தனியார் கம்பெனிகளுக்கு விற்பனை செய்வதாகும். இதை தொடர்ந்து முக்கியத் துறைகளான ரெயில்வெஸ், பாதுகாப்பு மற்றும் நிதி;த்துறைகளிலும் அளவில்லா அன்னிய நேரடி முதலீடு அனுமதித்து இந்தத் துறைகளை தனியார் மயம் ஆக்குவது இந்த அரசின் கொள்கை ஆகும்.

நிரந்தர தொழிலாளர்களுக்கு கிடைக்கும் ஊதியம் மற்றும் பிற சலுகைகளை ஓப்பந்த தொழிலாளர்களுக்கும் நியமனப்படுத்தக் கோரி 43, 44, 45, இந்திய தொழிலாளர்கள் மாநாட்டில் எழுத்த ஒருமித்;த பரிந்துரைகளை இந்த தொழிலாளர் விரோத அரசு நிராகரித்துவிட்டது. யுளுர்யுஇ மத்திய உணவு மற்றும் அங்கண்வாடி போன்ற திட்டங்களில் சேவை செய்யும் தொழிலாளர்களுக்கும் அனைத்து சலுகைகளும் தரப்படவேண்டும் என்ற பரிந்துரையும் ஏற்கப்படவில்லை. மாறாக பட்ஜெட்டில் பல ஏழை மக்கள் மேம்பாட்டுக்குரிய திட்டங்களின் நிதி ஒதுக்கீடுகளை அதிக அளவு குறைந்துள்ளது. நடைபாதை வியாபாரிகளின் சட்டத்தையும் அமல்படுத்தவில்லை.

தொழிலாளர் சட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்ட சீரமைப்பை முழுவதுமாக கைவிட வேண்டும். சட்ட விரோத ஒப்பந்த வேலை முறை நிறுத்தப்பட வேண்டும். குறைந்த பட்ச ஊதியம் ரூபாய். 18,000ஃ- ஆக நிர்ணயம் செய்யப்படவேண்டும். குறைந்த பட்ச ஊதியத்தை நுகர்வோர் குறியீடுகளுடன் இணைத்து அதற்கேற்ப மாற்றப்பட வேண்டும். சமூக பாதுகாப்பு சலுகைகளும் ஓய்வதியமும் அமைப்பு சாரா தொழிலாளர் உட்பட அனைத்து மக்களுக்கும் உறுதி பட வேண்டும். என்ற கோரிக்கைகளை இந்த மாநாடு மீண்டும் வலியுறுத்துகிறது. 45 நாட்களுக்குள் கட்டாய தொழிற்சங்க பதிவு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தீர்மானம் 87 மற்றும் 88 ஐ செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளையும் இந்த மாநாடு வலியுறுத்துகிறது. செயல்பட்டில் உள்ள பொருளாதார கொள்கைகள், நமது நாட்டின் பொருளாதாரத்தை பெரும் சரிவிலும் இன்னலிலும் இறக்கி உள்ளது. இது உழைக்கும் மக்களை பெருமளவு பாதித்து உள்ளது. இந்தப் போக்கை அரசு மாற்றிக் கொள்ள இந்த மாநாடு வலியுறுத்துகிறது. மேலும் போராடிக் கொண்டிருக்கும் அரசு தொழிலாளர்களுக்கும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் இந்த மாநாடு ஆதரவு தெரிவிக்கிறது.

அடித்தளத்திலிருந்து ஒருங்கிணைப்பை விரிவுபடுத்தி தேசம் தழுவிய இயக்கத்திற்கு தயார் செய்து கொள்ள தொழிற்சங்களுக்கும் கூட்டமைப்புகளுக்கும் இந்த மாநாடு அறை கூவல்விடுத்துள்ளது. கீழ்கண்ட செயல் திட்டங்களை தங்களுடைய போராட்ட திட்டத்தில் இணைக்குமாறு சங்கங்களை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.
1. ஜுன் ஜுலை மாதங்களில் மாநிலம் மாவட்டம் மற்றும் தொழிற்சாலை அளவில் மாநாடு மற்றும் பிரச்சாரங்கள் மேற்கொண்டு விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல தரப்பு மக்களை போரட்டத்தில் இணைப்பு.

2. மாநில தலைநகரங்களில் மற்றும் தொழிற்பேட்டைகளில் ஆகஸ்ட் 9 (வெள்ளையனே வெளியேறு தினம்) அன்று போராட்டம் செய்வது.

3. வரும் செப்டம்பர் 2 அன்று தேசிய பொது வேலை நிறுத்தம் மேற்கொள்வது.

12 அம்ச கோரிக்கைகளை செயல்படுத்துவதற்காக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு இந்த மாநாடு தயாராக உள்ளது. அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு இந்திய தொழிலாளர் காங்கிரசின் குறைந்த பட்ச ஊதியப் பரிந்துரைகள், ஒப்பந்த தொழிலாளர் விவகாரம் மற்றும் திட்டத் தொழிலாளர்கள் பிரச்சனையை ஒருமித்து பரிந்துரைகளை செயல்படுத்துவது முக்கியமாகும்.

தங்களுடைய தனித்துவ அடையாளங்களை மற்றும் சார்புகளை கடந்து தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் ஒன்று கூடி தேசிய பொது வேலை நிறுத்தத்தை மாபெரும் வெற்றிகாண செய்யுமாறு தொழிலாளர்களின் தேசிய மாநாடு கேட்டுக் கொள்கிறது. தொழிலாளர் மற்றும் பொது மக்களின் ஒற்றுமை போராட்டங்கள் வாயிலாக பாதுகாக்க, வலுவடைய வேண்டும். தேசிய வேலை நிறுத்தம் அன்று விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கிராமப்புற மற்றும் நகர்புற உழைக்கும் மக்களின் ஆதரவையும், பங்கேற்பையும் இந்த மாநாடு கோருகிறது.

INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, UTUC, SEWA, AICCTU, LPF And

ALL INDIA FEDERATIONS OF BANKS, INSURANCE, DEFENCE, RAILWAYS, CENTRAL/STATE GOVERNMENTS EMPLOYEES AND OTHER SERVICE ESTABLISHMENTS

This entry was posted in labour reforms, News, Press Releases, Workers Struggles, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.