பிரியாவிடை தோழர்: தோழர். ஜார்ஜ் கோமஸ்க்கு நினைவு அஞ்சலி

The following obituary to Com. George Gomez is written by Comrade M Krishnamoorty, Secretary, Democratic Fisher and Fishworkers Union

தொழிற்சங்க மாமேதை தோழர். ஜார்ஜ் கோமஸ் அவர்கள் 27.08.2016 அன்று தனது 90வது வயதில் இயற்கை எய்தினார்கள். ஜார்ஜ் கோமஸ் அவர்கள் 24.08.1927 அன்று தூத்துக்குடி மாவட்ட புன்னைக்காயல் மீனவ கிராமத்தில் பிறந்தவர். இவர் தனது சிறுவயதில் உழைப்பின் நிமித்தம் இலங்கை சென்று காரல் மார்க்கஸின் தீவிர பற்றாளராக லியோன் டிராஸ்க்கியின் ஆதரவாளராக நான்காவது சர்வதேசம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் புகழ்பெற்ற பொதுவுடைமை செயல்பாட்டாளராக விளங்கினார். பின்னர் இந்தியா வந்து மும்பையில் துறைமுக ரீதியான பணியில் ஈடுபட்டு முதலாளித்துவ ரீதியிலான துறைமுக நடவடிக்கைகளுக்கு எதிராக துறைமுக தொழிலாளர்களை ஒன்று திரட்டி தொழிலாளர்களை துறைமுக நிர்வாகத்தில் நிரந்தர தொழிலாளர்களாக்கியதோடு இந்தியாவில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் தொழிற்சங்கம் உருவாவதற்கான முதன்மை பணிகளில் ஈடுபட்ட பெருமை இவரை சாரும். மேலும் இவர் இந்தியாவில் உள்ள துறைமுகங்கள் சார்ந்த அனைத்து தொழிற்சங்கங்களையும் கட்சி சார்பற்று ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.

George Gomez (center) with Udhyakumar and Eric Toussaint

George Gomez (2007)

துறைமுக தொழிற்சங்க பணிகளை தாண்டி இந்துஸ்தான் லிவர் தொழிலாளர்களுக்கான போராட்டம் மற்றும் பல்வேறு தனியார் நிறுவன தொழிலாளர்களுக்கான போராட்டங்களிலும் ஈடுபட்டவர். மேலும் இவர் அணுசக்திக்கு எதிரான போராட்டங்கள், சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு எதிரான போராட்டங்கள் என இவர் வாழ்க்கை முழுவதும் தொழிலாளர்களுக்காக தொய்வில்லாமல் இறுதி மூச்சு வரை போராடியவர். இவரை இவரது தோழர்கள் இவரின் அனுபவத்தின் அடிப்படையிலும்;, அன்பின் அடிப்படையிலும் அப்பா என்றே அழைக்கின்றனர். இவர் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பின் காப்பாளராகவும், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு ஆலோசகராகவும், ஜனநாயக மீனவர் மீன்வார்பு தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் மற்றும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் செயல்படக்கூடிய பல்வேறு மக்கள் இயக்கங்களின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.


(Translation by Thozhillalar Koodum team)

Farewell Comrade: Remembering George Gomez

Comrade George Gomez passed away on 27th of August 2016. For 90 years he had tirelessly organized workers in their struggle against capitalism, inspiring youth towards Marxism. Born in 1926, in fishing hamlet of Punnaicoyal in Tuticorin District, he was born to a time of imperialism, anti-colonial struggles and World War II. When he went to Ceylon (present day Srilanka) to work, he became an avowed marxist and trotskyist, working closely with socialist youth promoting the Fourth International.

When he moved to Bombay (present day Mumbai) to work in the port, he began his most defining political work with the port workers of Bombay. Here he led the workers struggle that made the workers permanent employees. Taking the lessons of this struggle, he began organizing port workers from across India, trying to establish workers’ unions in all Indian ports. He worked steadfast to develop an independent federation of port unions in India. He was also working to unionize workers in private factories including Hindustan Lever Limited. He has also been active in organizing fish workers through the Democratic Fisher and Fish Workers Union.

He was an early dissenter of Nuclear Energy and had been part of the struggle against Koodunkulam ever since its conception in Nov 1988. He has been an ardent advocate of environmental issues and supported many environmental struggles in Tamil Nadu and India. He has also served as convener of Unorganized Workers Federation and advisor to National Alliance of Peoples Movements. He remains an inspiration to many generations of socialists and political activists.

 

This entry was posted in News, Press Releases, தமிழ் and tagged , , . Bookmark the permalink.