தேசிய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து மாநேசர், பங்களுர், சத்தீஸ்கர் போராட்டங்கள்

மாநேசர் – காலை 9 மணியளவில் மாருதி மாநேசர் தொழிற்சாலை வாயில் முன்னர் வேலை நிறுத்தத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த 5 தொழிலாளர்களை காவல் துறை கைது செய்தனர். மேலும் தொழிற்சாலைக்குள்ளே மாருதி மாநேசர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தோழர் தர்மேந்திரா, சந்தீப், மனோஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மாநேசரி; தொழிற்சாலை முன்னாள் தொழிலாளர், மற்றும் இடைக்காலச் செயற்குழு உறுப்பினர் தோழர் குஷிராம் கைது செய்யப்பட்டார். பல்வேறு கிராமங்களுக்குப் போய் ஒப்பந்த தொழிலாளர்களை வேலை செய்யுமாறு காவல் துறை நிர்பந்தித்தாக சங்கப் பிரதிநிதிகள் கூறினர். ஆனாலும் தொழிலாளர்கள் செப்டம்பர் 2 அன்று வேலை நிறுத்தம் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 12 தொழிலாளர்களை விடுவிக்க கோரி ஹோண்டா, எப்சிசி ரிக்கோ, பஜாஜ், சன்பீம், முஞ்சல் ஷோவா, சத்யம் ஆட்டோ தொழிற்சாலைகளின் சங்கப் பிரதிநிதிகள் காவல்துறையின் மீது நெருக்கடி ஏற்படுத்தினர். பின்னர் செக்ஷன் ஐபிசி 151 வழக்கை பதிவு செய்து தொழிலாளர்களை காவல் துறை விடுவித்துள்ளது.

Manesar Rally

ஜப்பான் மண்டலம் எனப்படும் நிம்ரானா பகுதியில் உள்ள டாய்கின் மற்றும் பல நிறுவனங்களில் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 1000 தொழிலாளர்கள் இங்கு பேரணி நடத்தினர்.

பங்களுர் – கர்னாடகாவில் மற்ற தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து காட்வு(GATWU) தொழிற்சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது. சுமார் 5 லட்ச கார்மென்ட் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. கார்மென்ட் தொழிற்சாலைகளில் உள்ள மாவட்டங்களில் காட்வு தொழிற்சங்கம் தனியாக போராட்டம் நடத்தி தாலுகாவின் தாசில்தாரரிடம் மனு கொடுத்தனர்.

GATWU Karnataka

GATWU Karnataka

சத்தீஸ்கர் – சத்தீஸ்கரில் பல பகுதிகளில் தேசிய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு வெளிப்பட்டது.

cmm-image-1பிரகதிஷீல் சிமென்ட் ஷ்ரமிக் சங்க் தொழிலாளர்கள் ஏகமனதாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஜாமுலில் உள்ள ஏசிசி-ஹோல்சிம் தொழிற்சாலையில் உற்பத்தி முழுவதுமாக பாதிக்கப்பட்டது. ஒப்பந்த தொழிலாளர்கள் ஒருவர் கூட வேலைக்கு செல்லவில்லை. சில நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டும் வேலைக்கு சென்றனர். தற்போது கட்டப்பட்டு வரும் புதிய தொழிற்சாலைக்கு கூட 25 கட்டுமானத் தொழிலாளர்களே சென்றனர்.

cmm-image-2குர்சிபார் மற்றும் புரையினா கேட்களில் லோக்தந்திரிக் இஸ்பத் மற்றும் என்ஜினியரிங் தொழிலாளர் சங்கத்தின் தோழர்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தப்போது பிலாய் ஸ்டீல் தொழிற்சாலையின் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். இங்கு துண்டறிக்கைகள் வெகு அளவு விநியோகிக்கப்பட்டன.

என்டிபிசி-செயில் மினசார நிலையத்தில் உற்பத்தி முழுவதுமாக பாதிக்கப்பட்டது. ஜன் ஆதாரித் மின்சார ஆலை தொழிற்சங்கம் தொழிற்சாலை வாயிலில் துண்டறிக்கை விநியோகித்தது. பிரகதிஷீல் யுவ சங்கம் மற்றும் ஜன ஆதாரித் என்ஜினியரிங் தொழிற்சங்கம் தலைமையில் நடத்தப்பட்ட வேலை cmm-image-4 நிறுத்தப் போராட்டத்தில் தர்சீவா பகுதியில் பார்ச்சுன் நிறுவனத்தின் வயர் டிரம் மற்றும் ரோலிங் மில் நிறுவனத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

cmm-image-3

 

 

சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சா(மஸ்தூர் கார்யகர்தா சமிதி)யின் தொழிலாளர்கள் உர்லா தொழிற்பேட்டையின் சிம்ப்ளெக்ஸ் சவுக் பகுதியில் நூற்றுக்கணக்கான துண்டறிக்கைகளை விநியோகித்தனர்.

This entry was posted in labour reforms, News, Strikes, தமிழ் and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.