உலக தொழிற்சங்கங்களின் சம்மேளன WFTU 17வது மாநாடு உற்சாகமாக துவங்கியது.

பத்திரிக்கை செய்தி – இந்திய தொழிற்சங்க மையம் (CITU)

உலக தொழிற்சங்கங்களின் சம்மேளன 17வது மாநாடு தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் ஆக்டோபர் 5 அன்று கோலாகலமாக துவங்கியது. சிஐடியுவின் அகில இந்திய துணைத் தலைவர் ஒருவரான ஹேமலதா மற்றும் ஏஐடியுசி அகில இந்திய துணைத் தலைவர் ஒருவரான அமர்ஜித்கவுர் உள்ளிட்ட 45 தலைவர்களை கொண்ட தலைமைக்குழு அமைக்கப்பட்டு அவர்களின் வழிகாட்டுதலுடன் மாநாடு நடைபெற்று வருகிறது.

South African President addressing WFTU

South African President addressing WFTU

தென்ஆப்பிரிக்க தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மாநாட்டில் பங்கேற்ற 1500 பிரதிநிதிகளை வரவேற்றார். தென் ஆப்பிரிக்க நாட்டின் அதிபர் ஜேகப் ஸூமா மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். உலகமய கொள்கைகளினால்  தென் ஆப்பிரிக்க தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சவால்கள் பற்றி விவரித்தார். மேலும் பிற நாடுகளுக்கு புலம் பெயரும் தொழிலாளர்களின்  நிலைமைகள் வளர்ந்த நாடுகள் இந்த தொழிலாளர்களை நடத்தும் விதத்தை பற்றியும், உலகம் முழுவதும் உள்ள போராடும் தொழிலாளர்களுக்கு தனது ஆதரவையும் உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் – இழப்பதற்கு அடிமை சங்கிலியை தவிர என்ற முழக்கத்துடன் மாநாட்டை துவக்கி வைத்தார்.

WFTU பொதுச்செயலாளர் ஜார்ஜ் மாவர்கோஸ் தனது அறிக்கை சமர்பித்தார். அவர் இணைக்கப்பட்ட சங்கங்களின் நடவடிக்கைகளை குறிப்பாக இந்திய நாட்டின் தொழிலாளி வர்கம் நடத்திய வரலாறு சிறப்புமிக்க அகில இந்திய வேலைநிறுத்தங்கள்  ஆகியவற்றை பாராட்டினார். தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் ஒற்றுமையின் அவசியத்தை விளக்கினார்.அதே போன்று உலகத்தில் உள்ள அனைத்து இளம் பெண்கள் மற்றும் இளம் தொழிலாளர்களை திரட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

புலம் பெயர்ந்த தொழிலாள்ரகளின் பிரச்சனைகள் மீது தனி அக்கறை செலுத்தி அவர்களை தொழிற்சங்கத்தின் கீழ் திரட்டிட வேண்டும். இந்த காலகட்டத்தில் உறுப்பிணர் எண்ணிக்கை 7.8 கோடியிலிருந்து 9.2 கோடி என  18% உயர்ந்துள்ளது.

112 நாடுகள், 132 தொழிற்சங்கங்களிலிருந்து 340 பெண் பிரதிநிதிகள் உள்பட 1500 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

WFTU வின் துணை பொதுச் செயலாளர் ஸ்வதேஷ் தேவ்ராய்,கே.ஹேமலதா, ஆர்.சிங்காரவேலு, ஆர். முத்து சுந்தரம் ஏ.ஆர்.சிந்து திபக்தாஸ்குப்தா எளமாரம்கறீம், கே.கே.திவாகரன், எஸ்.வரலட்சுமி, பி.என்.சௌதிரி, அமிதாவாகுஹா, திபன்ஞன் சக்ரவர்த்தி, கிரிராஜ் சிங், எஸ் என் ரெட்டி எம்எஸ்.ராஜா க்ஶ்ரீகுமார், நாகன் சூயி,பூஷன் படேல், அபிமன்யூ WFTU மாநாட்டிற்கு  இந்தியாவிலிருந்து சிஐடியு சார்பில் கலந்து கொண்டுள்ளனர்.

G.SUKUMARAN

GENERAL SECRETARY CITU

This entry was posted in News, Working Class Vision, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.