பெல்சோனிகா தொழிலாளர்களின் வெற்றி

பெல்சோனிகா ஆட்டோ பாகங்கள் நிறுவனத் தொழிலாளர்களின் இரண்டு வருட காலப் பேராட்டம் தொழிலாளர்களின் வெற்றியோடு முடிவுக்கு வந்துள்ளது. சங்க வேலைகளில் ஈடுபட்டதாக வேலை நீக்கம் செய்யப்பட்ட 54 நிரந்தரத் தொழிலாளர்கள், 32 பயிற்சியாளர்கள் மீண்டும் வேலையில் அமர்ததப்பட்டுள்ளனர். அவர்கள் வேலையில் நீக்கப்பட்ட காலத்திற்கு ஊதியமும் தரப்பட்டுள்ளது. அதே போல் பணிநீக்கம் செய்யப்பட்ட 60 ஒப்பந்தத் தொழிலாளர்களில் 25 தொழிலாளர்கள் மீண்டும் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். மீண்டும் ஒப்பந்த தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் போது மற்றத் தொழிலாளர்களையும் வேலையில் அமர்த்த நிர்வாகம் உத்தரவாதம் தந்துள்ளது. நிர்வாக ஒடுக்குமுறைக்கு எதிராக நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஒன்றுசேர்ந்த போராட்டமே இவ்வெற்றிக்கு காரணமாகும்.

சட்டவாத யுக்தி
2014 ஆகஸ்ட் மாதத்தில் பெல்சோனிகா தொழிலாளர்கள் சங்கத்தை பதிவு செய்வதற்காக தங்களது மனுவை அளித்தனர். சங்க வேலைகளை ஈடுபட்டத் தொழிலாளர்களையும், சங்கத்தை ஆதரித்த தொழிலாளர்களையும் நிர்வாகம் உடல்ரீதியாகவும், வாய்மொழிரீதியாகவும் தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர். 2014 அக்டோபர் மாதத்தில் சங்கப் பதிவு பெற்ற உடனேயே 45 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தனர். மேலும் பலத் தொழிலாளர்களின் மேல் ஒடுக்குமுறை அதிகரித்தது. இதனால் வேலை நீக்கம் செய்யப்பட்டத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 145 ஆக ஏறியது. தொழிலாளர்களை வேலை விட்டு நீக்கியதற்காக தொழிற் தகராறு சட்டம் பகுதி 33(2)ன் கீழ் நிர்வாகம் அனுமதி கோரி தொழிலாளர் உதவி ஆணையரின் அலுவலகத்தை நாடியது.

அடுத்த ஒரு வருடத்திற்கு வேலை நீக்கத்திற்கு எதிராக தொழிலாளர்கள் பல அரசு அலுவலகங்களை நாடினர். நிர்வாகம் பல தொழிலாளர்களை பயமுறுத்தியும், லஞ்சம் கொடுத்தும் தங்கள் பக்கம் இழுக்க முயன்றனர். சங்கப் பிரதிநிதிகள் எதிராக தொழிலாளர்களை வைத்து பொய் வழக்கு போட வைத்தனர். ஆனால் நீதிமன்றத்தில் தொழிலாளர்கள் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று ஒத்துக் கொண்டனர். 2015ல் நவம்பர் மாதத்தில் உதவி ஆணையர் நிர்வாகத்தின் மனுவை நிராகரித்தார்.

ஆனால் உதவி ஆணையரின் ஆணையை நிறைவேற்ற நிர்வாகம் மறுத்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீதிமன்றமும் நிர்வாகத்திற்கு எதிராக தீர்ப்பு கொடுத்தது. ஆனால் நிர்வாகம் தீர்ப்பை செயல்படுத்த மறுத்தனர். இதனால் தொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் குர்காவ் பகுதியில் உள்ள மற்ற சங்கப் பிரதிநிதிகள் பெல்சோனிகா தொழிற்சாலையின் முன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய துணை ஆணையர் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படும் அரசு அதிகாரத்தை சாடினாரே தவிர நீதிமன்ற ஆணையை செயல்படுத்தத் தயாராக இல்லை. மாறாக செயல்படுத்தினால் தொழிற்சாலை வேறு இடத்திற்கு மாறி விடும் என்று காரணம் கூறினார். மேலும் நிர்வாகம் நீதிமன்றத்தின் ஆணையை எதிர்த்து மேல் முறையிட்டது. நீதிமன்றம் வழக்கை இரண்டு மாதத்திற்கு தள்ளிப் போட்டதும் தொழிலாளர்களுக்கு சட்ட வாதத்தின் மேல் அதிருப்தி ஏற்பட்டது.

போராட்ட யுக்தி
இக்கால கட்டத்தில் தொழிலாளர்கள் மத்தியில் சட்டவாதம், மற்ற போராட்ட வடிவங்கள் குறித்த ஒரு விவாதம் எழுந்தது. தொழிலாளர்கள் தாங்கள் இதுவரை நல்ல பிள்ளையாக நடந்து கொண்டாலும் பிரச்சனைகள் தீரவில்லை என்று கருதினர். நீதிமன்ற வாயிலாக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் போது நிர்வாகத்திற்கே அது சாதகமாக உள்ளதாக தொழிலாளர்கள் கருதினர். குறிப்பாக நிர்வாகத்திடம் உள்ள செல்வாக்கினால், வழக்கை தள்ளிப் போடுவதிலும், அவ்வாறு தாங்கள் வெற்றி பெற்றாலும் நிர்வாகம் அதை செயல் படுத்துமா என்பதில் தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்தனர்.

தொழிலாளர்கள் தங்கள் ஒற்றுமை மற்றும் பலத்தை காட்டும் நடவடிக்கைகளில் இறங்க முடிவு செய்தனர். முதல் கட்டமாக 2016 மே 1 அன்று தொழிலாளர் தினத்தை கொண்டாட முடிவு செய்தனர். பெல்சோனிகா தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் சங்கம் மேற்கொண்ட முதல் அரசியல் சார்ந்த நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ அனைத்து தொழிலாளர்களும் கலந்து கொண்டு தங்கள் ஒற்றுமையை நிலைநாட்டினர். மேலும் அவர்களை ஆதரித்து ஜவஹர்லால் பல்கலை கழக மாணவர்களும், தில்லி பல்கலைகழக மாணவர்களும், மற்ற தொழிற்சாலையின் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

ஒப்பந்த தொழிலாளர்கள், நிரந்தரத் தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள், அப்பிரன்டைஸ் தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் என அனைத்து தொழிலாளர்களையும் சங்கத்தில் இணைத்தனர். சங்கம் பதிவு செய்யபட்ட போது 1000 தொழிலாளர்களில் 89 தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளர்களாக இருந்தனர். இரண்டு வருடம் கழித்து அவர்கள் எண்ணிக்கை வெறும் 122 ஆக உயர்ந்தது. அங்கு வேலை செய்த 356 பயிற்சியாளர் தொழிலாளர்களும் மற்ற ஒப்பந்த தொழிலாளர்களும் அதே பணியில் நான்கு ஐந்து வருடங்களாக பணி செய்து வந்தனர். 150 தொழிலாளர்கள் நீக்கப்பட்டதை வெறும் 100க்கணக்கான நிரந்தரத் தொழிலாளர்களால் மட்டும் வெல்ல முடியாது என்பதை தொழிலாளர்கள் அறிந்து இருந்தனர்.

தொழிற்சாலையில் உள்ள பல்வேறு ஷிஃப்டுகள் மற்றும் அசெம்பளி லைன்களை கணக்கில் கொண்டு 100 ஒருங்கிணைப்பாளர்களும், 11 பிரதிநிதிகளும் ஜனநாயக முறையில் சங்கத்தில் தேர்ந்தெடுக்கப் பட்டனர். சங்க உறுப்பினர்களுக்கிடையே கூட்டங்கள் முறையாக நடத்தப்பட்டன. ஒருங்கிணைப்பாளர்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும் தகவல்கள் கொடுக்கப்பட்டன. சங்கத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் தொழிலாளர்களுக்கு சொல்லப்பட்டன.

ஜுலை 3 அன்று தொழிலாளர்கள் 8 மணி நேர உண்ணாவிரதப் போராடட்டத்தை மேற்கொண்டனர். பின்னர் அனைத்து ஓவர்டைம் வேலைகளை புறக்கணித்தனர். ஒரு வாரத்தில் 2 நாட்க்ள தொடர்ந்து ஓவர்டைம் வேலையை புறக்கணித்தனர். மேலம் மாருதி மண்டலத்தில் உள்ள 8 சப்ளையர் நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களை சங்கம் தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர். இதற்கு பதிலாக நிர்வாகம் தொழிற்சாலையில் காவல்துறை மற்றும் தனியார் காவலாளர்களை நியமித்து கண்காணிப்பை பலப்படுத்தியது.

ஆகஸ்ட் 1 அன்று ஜப்பானில் இருந்து வந்த நிர்வாக இயக்குனர் தொழிற்சாலையை பார்வையிட வந்த போது மூன்று கோரிக்கைகளை கொண்;ட மனு அவரிடம் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு தொழிலாளருக்கும் மனுவின் நகல் கொடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 2 அன்று இயக்குனர் நிரந்தரத் தொழிலாளர்களை மட்டும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். முதல் ஷிஃப்ட் தொழிலாளர்கள் செல்ல முடிவு செய்தனர். இரண்டாவது ஷிஃப்ட் தொழிலாளர்கள் கூட்டத்திற்கு செல்லவில்லை. இயக்குனர் தொழிலாளர்களிடம் உற்பத்தியை பெறுக்கவும், இருப்புகளை முறைப்படுத்தவும் கோரிய போது, தொழிலாளர்கள் 150 தொழிலாளர்களை மீண்டும் வேலை அமர்த்த நிர்வாகத்தை கோரினர். ஆகஸ்ட் 3 அன்று நிர்வாகம் அழைத்தக் கூட்டத்தில் வேலையில் இருந்து நீக்கப்பட்ட 150 தொழிலாளர்களையும் வேலையில் மீண்டும் அமர்த்த நிர்வாகம் ஒப்புக் கொண்டது. தொழிலாளர்களின் ஒற்றுமைக்கு இது ஒரு முக்கிய வெற்றியாகும்.

அடுத்து என்ன?
நிரந்தரத் தொழிலாளர்களையும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பிரிக்கும் முயற்சியில் நிர்வாகம் இறங்கியுள்ளனர். சங்கத்தில் தொழிலாளர்கள் அல்லாதவர்களை சேர்க்க வேண்டாம் என்றும் தொழிற்சாலைக்கு வெளியே நடக்கும் எந்தப் போராட்டங்களிலும் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். நிரந்தரத் தொழிலாளர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகளை நிர்வாகம் அதிகரித்துள்ளனர். நிர்வாகத்தின் கோரிக்கைகளையும், யுக்திகளையும் எவ்வாறு சங்கம் கையாளும் என்று இனிதான் தெரியும். இப்பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களில் 10000 பேரை ஒருங்கிணைக்க சங்கம் முடிவெடித்து இருந்தனர். இந்த வேலைகள் நடக்குமா அல்லது நிர்வாகத்தின் கோரிக்கைகளுக்கு அடிபணியுமா என்றும் காலம் தான் கூறும்.

சட்டவாதம் தொழிலாளர்களுக்கு ஒரு ஆயுதம் ஆனால் அதை மற்றும் நம்பக் கூடாது என்று தொழிலாளர்களுக்கு இந்நிகழ்வுகள் பாடம் கற்பித்துள்ளது. நிரந்தரத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள் என நிர்வாகம் தொழிலாளர்களை பிரித்தாலும், அனைத்து தொழிலாளர்களும் ஒன்று எனவும் அனைத்துத் தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதையும் நிரந்தரத் தொழிலாளர்கள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் தொழிலாளர்கள் மத்தியில் உள்ள ஒற்றுமையை பலப்படுத்தும். தொழிலாளர்கள் மத்தியில் உள்ள ஒற்றுமை வீழ்ந்தால் தொழிலாளர்கள் போராட்டம் வீழ்ந்து விடும் என்பதற்கு இன்றைக்கு பல உதாரணங்கள் உள்ளன. ஒப்பந்த தொழிலாளர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் சங்கம் நிர்வாகத்தின் நல்லெண்ணத்தை மட்டுமே நம்ப முடியும் போராட்டங்களை வெல்ல முடியாது. தொழிலாளர்கள் ஒற்றுமையை பலப்படுத்தி அனைவரின் கோரிக்கைகளையும் வென்றெடுப்பது பெல்சோனிகா தொழிலாளர்களின் கடமையாகும்.

மஸ்தூர் பத்திரிக்கைகாக குர்காவ் பத்திரிக்கையாளரால் இந்தியில் எழுதப்பட்டு தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

This entry was posted in News, Workers Struggles, Working Class Vision, தமிழ் and tagged , . Bookmark the permalink.