பணி நிரந்தரம் கோரி துப்புரவுத் தொழிலாளர்களின் மாபெரும் போராட்டம்

மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்ததற்கு நன்றி காட்டவேண்டும் மாநகராட்சி பொறியாளர் கருத்து

நிரந்தரப் பணி அளிப்பதாகக் கொடுத்த வாக்குறுதியை சென்னை மாநகராட்சி நிறைவேற்றக் கோரி , 65% துப்புறவுத் தொழிலாளர்கள் விடுப்பில் சென்றதால் பிப்ரவரி 9 அன்று சென்னையில் குப்பை அள்ளும் துப்புரவுப் பணி பாதிக்கப்பட்டது. பிப்ரவரி 7 முதல் இத்தொழிலாளர்கள் மாநகராட்சி தலைமை அலுவலகம் ரிப்பன் வளாகத்தில் முதல் முற்றுகை இட்டனர். பிப்ரவரி 8 அன்று, இக்கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வராததால், அக்கட்டிடத்தின் தாழ்வாரங்களிலும் திறந்தவெளிகளிலும் உறங்கி, சுமார் 1800 தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். அவர்களை வெளியேற்றுவதற்கான காவல்துறையின் முயற்சி தோற்றுவிடவே, சென்னையின் மற்ற இடங்களைச் சேர்ந்த 2000 தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். எனவே, போராட்டம் 9ஆம் தேதி அன்றும் தொடர்ந்தது. நிரந்தரப் பணியாளர்களும், ஒழுங்குபடுத்தப்படாத (NMR) பட்டியலில் வரும் தொழிலாளார்களும் இவர்களுடன் இணைந்து கொண்டனர்.

Workers_at_the_protest

அவர்களது கோரிக்கைகள் கீழ்வருமாறு :

  • சென்னையைச் சுற்றியுள்ள முனிசிபாலிட்டிகள் சென்னை மாநகராட்சியுடன் 2011இல் இணைந்த பின்னர் NMR என்ற வகைத் துப்புவு மற்றும் சுகாதாரத் தொழிலாளார்கள், நிரந்தரத் தொழிலாளர்களாக்கப்பட வேண்டும்.
  • நிர்வாகச் சீர்கேடால் நிகழும் தாமதத்தினால், கடந்த சில வருடங்களில் உயிர் இழந்த 19 NMR தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நட்ட ஈடாக வழங்கப்படாத 1.5 லட்சம் ரூபாய் விரைவில் வழங்கப்பட வேண்டும்.
  • திடக் கழிவு மேலாண்மையை சென்னை கார்ப்பரேசன் இதற்கு மேலும் தனியார்மையமாக்கக் கூடாது.
  • ஸ்வர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ் பணி அமர்த்தப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள், தேசிய நகர வாழ்வியல் [national urban livelihood mission] திட்டத்தின்கீழ் கார்ப்பரேசன் தொழிலாளர்களாக மறு பணியமர்த்தல் செய்யப்பட வேண்டும்.

தற்போதைய தமிழ் நாட்டின் நிலவரம் காரணமாக, ஆணையரும் துணை ஆணையரும் நடவடிக்கையெடுக்கத் தயங்கினர். ஆனால் போராட்டம் உக்கிரமடைந்ததால் வேறு வழியில்லாமல் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். கார்ப்பரேசனுக்குக் கீழ் வரும் மூன்று துறைகளைச் சார்ந்த ஆணையர்கள், தொழிலாளர்கள் எழுப்பிய கோரிக்கைகளைப் பற்றி விவாதித்தனர் என்று துப்புவு தொழிலாளர்களை உள்ளடக்கிய செங்கொடி சங்கத்தின் சங்கத் தலைவர்கள் கூறினர். மூன்று மாதங்களில் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும், காலமானவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்பட வேண்டிய காப்பீடு 15 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர்கள் கூறியுள்ளனர்.

தொழிலாளர்களின் கோரிக்கைகள் கவனிக்கப்படும் என்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசிய தலைமை பொறியியளாலர் வாக்குறுதியளித்துள்ளார். மேலும் அவர், தங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிய கார்ப்பரேசனிடன் நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும் வேலை செய்ய மறுக்கக் கூடாது என்றும் கருத்துத் தெரிவித்தார். கூட்டத்தைக் கலைப்பதற்காகவும் போராட்டக்காரர்களை கைது செய்வதற்காகவும் பெரும் எண்ணிக்கையில் குமிக்கப்பட்டிருந்த காவல்துறையினர், அவர்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.

எழுப்பப்பட்ட கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில், உள்ளிருப்புப் போராட்டத்தை கைவிட சங்கத் தலைவர்கள் தயாராக இருந்தனர். மேலும், தற்போதைய அரசியல் சூழலில், அலுவலர்களால் வேறு எதுவும் செய்ய இயலாது என்று அவர்கள் கருதினர். ஆனால், அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் தொழிலாளர்களை சமாதானப் படுத்தவில்லை. தொழிலாளர்களைச் சந்தித்து உரையாடிய அலுவலர்கள், ஸ்வர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளைக் குறிப்பிடாததால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.மற்றவர்களது(NMR) தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு மட்டுமே அதிகாரிகள் பதில் அளித்தனர் எங்களது கோரிக்கைகளை குறித்து யாரும் கருத்து கூறவில்லை” என்று பெண் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் கூறினார்.

கோரிக்கைகளுக்காக, இரண்டு நாட்கள் போராட்டத்தில் அமர்ந்தவர்கள் நாங்கள் தான், எனவே பகுதி வாரியாக, குப்பை அள்ளுதலை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களிடம் நாங்கள் மாற்றம் செய்யப்படுவோம். எங்களுக்கென்று உரிமைகளோ நிரந்தரப் பணிகளோ இருக்காது. 10 வருடங்களாக இங்கு உழைத்துள்ளோம். எங்களை [regularize] கடந்த வருடம் கூறிய பின்னரும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் NMR தொழிலாளர்களாக மறு வரையறை செய்யப்பட்டு, கார்ப்பரேசனால் நேரடியாக பணியமர்த்தப்பட வேண்டும். முறையான வாக்குறுதிகள் இல்லாமல் நாங்கள் பின் வாங்கப் போவதில்லை” என்றார் மற்றொரு தொழிலாளர். பகுதிவாரியான தலைவர்களிடமிருந்து இதற்கான விடைகளைப் பெற, சிறு குழுக்களாகத் தொழிலாளர்கள் பிரிந்தனர்.

அலுவலர்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தைக்குப் பின், சமரசத்திற்கு உடன்பட்டு, தங்கள் போராட்டத்தை பிப்ரவரி 9 அன்று இரவு 8.30 மணிக்கு முடித்துக்கொண்டனர். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், தங்கள் வாக்குறுதிகளிலிருந்து அலுவலர்கள் தவறினால் மேற்கொள்ளப்பட்டவேண்டிய திட்டங்கள் குறித்தும் முடிவு செய்வதற்காக, அனைத்து பகுதிகளைச் சேர்ந்த சங்க பிரதிநிதிகளும் பங்கேற்கும் கூட்டம் ஒன்றை பிப்ரவரி 22 அன்று நடத்த முடிவு செய்துள்ளனர். மற்ற நகரங்களிலும் துப்புரவுத் தொழிலாளர் போராட்டங்கள் நடை பெற்று வரும் இதே தருணத்தில், இங்கும் கிளர்ச்சி வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

This entry was posted in Contract Workers, News, Public Sector workers, Sanitation Workers, Workers Struggles, தமிழ் and tagged , , . Bookmark the permalink.