மண்டலம் 9 மாநகராட்சி தொழிலாளர்கள் வேலை நீக்கத்தை எதிர்த்துப் பிச்சை எடுக்கும் போராட்டம்

Sankar, Madras School of Social Work

மார்ச் 22 ஆம் தேதி மண்டலம் 9 சென்னை மாநகராட்சி நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் சென்னை செங்கொடி சங்கம் சார்பில் சுகாதார தொழிலாளர்களுக்காக பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக சொர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழே வேலை செய்து வந்த 89 ஒப்பந்த சுகாதாரத் தொழிலாளர்கள் (மலேரியா ஓழிப்பு மற்றும் கொசு மருந்து அடிக்கும் தொழி்லாளர்கள்) வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அத்தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரி இப்போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தை செ.செ.ச பொது செயலாலர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. செ.செ.ச தலைவர் சுந்தர் ராஜன் துவங்கினார்.

தலைவர் திரு.சுந்தர் ராஜன் கூறுகையில் மண்டலம் 6-9 வரை உள்ள ஓப்பந்த தொழிலாளர்கள் முன் அறிவுப்பின்றி வேலை நிறுத்தம் செய்யப்பட்டனர். இதை அடுத்து பல போராட்டங்களில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து அதிகாரிகள் மூப்பு தொழிலாளர்களுக்கு முதலில் வேலை தருவதாகவும் கடைசியாக வந்த தொழிலாளர்களை நிறுத்திக்கொள்கிறோம் என்று உறுதியளித்துள்ளனர். மண்டலம் 9 ஆய்வாளர் மட்டும் சுகாதார அதிகாரியுடன் கலந்து பேசி 170 தொழிலாளர்களில் 89 தொழிலாளர்களை வேலைக்கு நிறந்தர படுத்தவில்லை. பல மனுக்கள் கொடுத்தும் தீர்வு வரவில்லை என்ற காரணத்தினால் தான் இந்த பிச்சை எடுக்கும் போராட்டம் நடப்பதாக கூறினார்.

துணைத்தலைவர் திரு.கிருஷ்ண மூர்த்தி கூறுகையில் அதிகாரிகள் 10ஆயிரம் 20 ஆயிரத்துக்கு விலை போகின்றனர். உழைக்கும் வர்க்கத்தினரிடம் மோத வேண்டாம் எனவும் கூறினார். பின்பு 1-5 மண்டல நிர்வாகி திரு.ராஜன் சுகாதார தொழிலாளர்கள் பிரச்சினை மற்றும் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்களைப் பற்றி கூறினார்.

இறுதியாக செயலாலர் திரு.சீனிவாசன் கூறுகையில் தலைவர் திரு.சுந்தர் ராஜன் அதிகாரிகளுடன் கலந்து பேசினார். நாளை முடிவு கூறப்படுவதாகும் இல்லை எனில் காலவரையற்ற போராட்டம் 10ஆயிரம் செங்கொடி தொழிலாளர்களால் நடத்த படும் எனக் கூறினார்.

 

This entry was posted in Contract Workers, News, Sanitation Workers, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.