ஜொரா பீபியின் அவல நிலை சென்னையிலும் எதிரொலித்தது—வீட்டு வேலை தொழிலாளர்கள் ஆதரவு

நாய்டாவைச்சேர்ந்த மஹாகுன் மாடர்ன் அடுக்குமாடி வளாகத்திலிருந்து போலீசாராலும் தனியார் காவலர்களாலும் வீட்டு வேலை தொழிலாளர் ஜொரா பீபி வலுக்கட்டாயமாக தூக்கிச்செல்லப்படும் புகைப்படம் வெகுஜன மக்களின் மத்தியில் அதிர்வை எழுப்பியுள்ளது. ‘அப்படி தூக்கியெறியப்படுவதற்கு அவரென்ன குப்பைக்கூளமா?’ என பெருங்குடியைச் சேர்ந்த வீட்டு வேலை தொழிலாளரான தோழர் லதா வினவுகிறார். 22 ஜூலை 2017 அன்று, ஜொரா பீபிக்கு ஆதரவு தெரிவிக்க தன்னெழுச்சியாக நிகழ்ந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கூடிய 45 வீட்டு வேலை தொழிலாளர்களில் லதாவும் ஒருவர். ஒருபக்கம் பார்த்தால், தமது வன்முறை நிறைந்த செயல்களை நியாயப்படுத்துவதற்கு நடுத்தர வர்க்கத்தினர் ஜொரா பீபியை அவதூறு செய்கின்றனர். மறுபக்கம் பார்த்தால், இந்து வலதுசாரி சக்திகளால் தேசம் கட்டமைக்கபப்டும் இயக்கப்போக்கில் எழுந்துள்ள பளிச்சென்று தெரியும் ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு அதிர்ந்துபோயிருக்கும் பலரின் கூட்டான மனசாட்சி வளர்ந்து வருகிறது. இதற்கிடையே, வீட்டு வேலை தொழிலாளர்கள் விவாதித்துக்கொண்டும் கையாள வேண்டிய உத்திகளை திட்டமிட்டுக்கொண்டும் உள்ளனர். ஏனெனில், இது தொழிலாளர் வர்க்கத்தின் மீதான ஒரு தாக்குதல் என்றும் இதற்கு ஒன்றுபட்டதொரு எதிர்ப்பு தேவை என்றும் அவர்கள் உணருகின்றனர்.

political cartoon

நடக்கும் அனைத்து வேலைகளுக்குப் பின்னும் மறைந்து கிடக்கும் தொழிலாளர்களின் உழைப்பு

போலீசாரும் அரசியல்வாதிகளும் ஜொரா பீபிக்கும் இதர தொழிலாளர்களையும் விடுத்து மற்ற அனைவருக்கும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

வீட்டு வேலை தொழிலாளர் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டு அது தேசிய தலைப்பு செய்திகளாக வெளிவந்த பிறகு ஒரு வாரத்திற்கு அதிகமாக கொழுந்துவிட்டு எரியும் வர்க்க மோதலின் மையத்தில் இருக்கிறது நாய்டாவின் மஹாகுன் மாடர்ன் அடுக்குமாடி வளாகம். அவருக்கு கொடுக்கப்படாத ஊதியத்தைக் கோரியதால் ஒரு இரவு முழுவதும் ஜொரா பீபி அடைத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவருடைய கணவர் பீதியுற்று எல்லா இடங்களிலும் தேடினார். இறுதியில் மறுதினம் காலை களைத்து பலவீனமான நிலையில் ஜொரா பீபி வெளிக்கொணரப்பட்ட போது தொழிலாளர்கள் சீற்றமடைந்தனர். சூழ்நிலை பதற்றமானதாக மாறியது.

நாய்டாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜேபி பாராளுமன்ற உறுப்பினரான மகேஷ் சர்மா, தான் அவர்கள் பக்கம்இருப்பதாக ந்த அடுக்குமாடிக் குடியிருப்பாளர்களுக்கு, உடனடியாக வாக்களித்தார். அந்த அடுக்குமாடி வளாகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், “சேத்தி குடும்பத்தார் பக்கம் தப்பு இல்லை. …காயப்படுத்தி கொலை செய்யும் நோக்கத்துடன் ஒரு கும்பல் கூடியது என்பது தெளிவாகிறது. அதற்கான சட்டப்பிரிவுகளிலும் குண்டர் சட்டத்தின் கீழும் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட வேண்டும். அவர்களுக்கு ஆண்டுக்கணக்கில் ஜாமீன் கிடைக்காது என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். அந்தக் குடும்பத்தின் சார்பாக நங்கள் இந்த வழக்கை நடத்துவோம்,” என கரவொலிக்கிடையே அந்த எம்பி கூறியதாக Scroll.in செய்தி இனையதளம் தெரிவிக்கிறது. இதை ஒரு வகுப்புவாதப்பிரச்சனையாக மாற்றிவிட்டதாக அவர் ஊடகத்துறையையும் மனித உரிமை செயல்வீரர்களையும்குற்றஞ்சாட்டினார்.

போலீசார் மறுபுறம் அந்தக் அடுக்குமாடி வளாகத்திற்கு 2 கிமீ சுற்றளவிலுள்ள அனைத்து சேரிக்குடியிருப்புப் பகுதிகளிலிருந்தும் ஆண்களை வளைத்துப்பிடித்துக் கைது செய்துகொண்டிருந்தனர். அடுக்குமாடி வளாகத்தில் வசிப்பவர் எவருமே உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டது என புகார் கொடுக்காத போதிலும் போலீசார் 13 நபர்களைக் கைதுசெய்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து கேரவன் பத்திரிக்கை கேள்வியெழுப்புகையில், நாய்டா போலீஸ் சூப்பிரெண்டெண்டு அருண் குமார் சிங், “இந்தக் குற்றம் உறுதி செய்யப்படாவிடில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்என்று மட்டுமே கூறி, இக் கேள்விக்கு விடையளிக்க மறுத்துவிட்டார். கைது செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் அவர்கள் சமூகத்தினரும் சங்கங்கள் மற்றும் இதர அமைப்புகளின் உதவியை நாடி ஜாமீனுக்காக அல்லாடிக்கொண்டிருக்கின்றனர்.

காயமேற்படுத்தியது மற்றும் தவறான முறையில் அடைத்துவைத்தது என்ற குற்றங்களுக்காக மட்டுமே சேத்தி குடும்பத்தார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டிற்குமே அதிகபட்ச தண்டனை ஒரு ஆண்டு காவல் அல்லது 1000 ருபாய் அபராதம் அல்லது இரண்டுமே“, என்று கேரவன் பத்திரிகை கூறுகிறது. “CCTV பதிவுகள் அந்தப் பணிப்பெண் [ஜொரா பீபி] அவரை வேலைக்கமர்த்தியிருந்தவரின் வீட்டிலிருந்து ஓடிவிட்டதையும் அவர் ந்த அடுக்குமாடியின் ஒரு முற்றத்திலிருந்து மறு முற்றத்திற்கு ஓடுவதையும் காட்டுகின்றன. எனவே பிடித்து வைக்கப்பட்டார் என்ற வாதம் எடுபடாதுஎன்று சிங்க் Scroll.in செய்தி இணையதளத்திற்குத் தெரிவித்தார்.

விசாரணைக்காக சேத்தி குடும்பத்தினர் அழைக்கப்படவில்லை, உண்மையான புலனாய்வு எதுவும் நடைபெறுமா என்பதும் தெரியவில்லை. ஆனால் இக்குடும்பம் அவர்கள் தரப்பு விவரிப்பை மட்டும் ஊடகத்தில் பகிர்ந்துகொள்ளத் தயங்கவில்லை. “எங்களுக்கு மனித உரிமை எதுவுமே இல்லையென நான் உணருகிறேன். நாங்கள் ஏழைகள்“, என்று திருமதி சேத்தி நியூ யார்க் டைம்ஸ் நாளிதழுக்கு கூறினார். “பணிப்பெண்கள் எங்கள் வாழ்க்கையில் முக்கிய பகுதிகளாக விளங்குவதால் நாங்கள் அவர்களை வழிபடுகிறோம். …நீங்கள் உணவருந்தும்போது எவரோ ஒருவர் வெறும் வயிற்றோடு அதை பார்த்துக் கொண்டிருந்தால் சாப்பிட்டது செரிக்காது என இந்துக்கள் நம்புகின்றனர். நாங்கள் முதலில் அவர்களுக்கு உணவளித்து விட்டு பின்னர் சாப்பிடுகிறோம். வேலைகளை செய்ய வைக்கும் முன்பு நான் அவருக்கு தேநீர் வழங்குவேன். எங்களிடம் காசு இருப்பதால் எங்களை வெறுக்கின்றனர்: ‘அவர்கள் ஏன் இவ்வுளவு வசதியாக இருக்கின்றனர், இவ்வுளவு செல்வச்செழிப்பாக இருக்கின்றனர்?’ என எங்கள் மீது அவர்கள் பொறாமையாக இருக்கின்றனர். இப்படித்தான் அது வெளிப்படுகிறது.”

இதற்கிடையே, இந்து பத்திரிக்கை கூறுவது படி, நாய்டா ஆணையம் பெரும்பான்மை போராட்டக்காரர்கள் வசித்துவந்த மூன்று டஜன் சேரிக்குடியிருப்புகளுக்கு மேல் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. சேரிக்குடியிருப்புகள் மட்டுமின்றி இச்சேரிக்குடியிருப்புகளோடு சேர்த்து அடுக்குமாடி வளாகத்திலிருப்பவர்களுக்காகவும் கூட கடை நடத்திவந்த கொட்டாய்க்கடைகளும் கூட அழிக்கப்பட்டுவிட்டன. இந்த திடீர் நடவடிக்கையால் தொழிலாளர்கள் தலைக்கு மேல் கூரையின்றி அம்போ என்று விடப்பட்டனர்.

ஆதரவு தெரிவித்து சென்னையில் உணர்ச்சிமிக்கதோர் எதிர்ப்பு

அம்பத்தூர், சூளைமேடு மற்றும் பெருங்குடி உள்பட நகரின் பல பகுதிகளிலிருந்து வந்த வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் PTS (பெண் தொழிலாளர் சங்கம்) இந்த துன்ப நிகழ்வின்போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் வாயிலாக ஜொரா பீபி கதையை அவர்களோடு பகிர்ந்துகொண்டபோது ஜொரா பீபிக்கு ஆதரவு தெரிவிக்க முடிவுசெய்தனர். இந்த புகைப்படங்களைப் பார்த்தபோது வீட்டு வேலைத் தொழிலாளர்கள் அதிர்ந்துபோய் 22 ஜூலை அன்று சூளைமேட்டில் ஒரு குறுகிய காலஅளவிலான ஆனால் உணர்ச்சிமிக்க எதிர்ப்பு நிகழ்ச்சியில் ஒன்றுதிரண்டனர்.

எதிர்ப்பு நிகழ்ச்சியில் அவர்கள் பங்கெடுத்ததை பற்றி பேசுகையில் பணக்காரர்கள் பணக்காரர்களாக இருப்பதாலும் நாங்கள் ஏழைகளாக இருந்து அவர்களிடம் வேலை தேட வேண்டியிருப்பதாலும் அவர்கள் எது வேண்டுமானாலும் செய்துவிட்டு தப்பிவிடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்களா என தோழர் லதா வினவினார்.

தங்களுக்கு சேரவேண்டிய ஊதியதாக கேட்டதினால் பெண் தொழிலாளர்கள் ஏன் குற்றவாளிகளாக்கப்படவேண்டும் என்றும் பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பும் மரியாதையோடு பணிபுரிவதற்கான சூழலும் இல்லையெனில் அதன் பொருள் என்ன என்றும் அவர் வினவினார். இதே சொற்களை எதிரொலித்து, ‘மஹாகுனில்வசிப்போர் மகா மோசம் என தோழர் சுஜாதா கூறினார். இல்லப்பணியாளர்களை அங்கீகரிப்பதற்கான ILO தீர்மானத்தை அங்கீகரிக்கமறுப்பதன் மூலம் வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு மரியாதையுடன் கூடிய தகுதியைத் தர இந்திய அரசாங்கம் தொடர்ந்து மறுக்கிறது என்று அவர் கூறினார். அதிகாரவர்க்கத்தின் மனப்பான்மை என்னவென்றால் வீடுஎன்பது தனியார் இடமாகும் என்பதும் வீட்டை வேலையிடமாகக் கருதுவது மேற்கத்தியக் கருத்தும் கலாச்சாரமும் ஆகும் என்பதும் சட்டங்களை அமல் செய்ய ஆய்வாளர்களை வீடுகளுக்கு அனுப்பமுடியாது என்பதுமாகும்.

அரசு இயந்திரத்தால் பரப்பப்பட்ட மற்றொரு உறுதி செய்யப்படாத விஷயமென்னவென்றால் அத்தொழிலாளி வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் என்பதாகும். தேசிய இனத்தின் அடிப்படையில் ஒரு தொழிலாளிக்கு உரிமைகளை மறுக்கும் விஷத்தில் அவருடைய எதிர்ப்பில் தோழர் லதா அழுத்தம் திருத்தமாக இருந்தார். தொழிலாளர்கள் எங்கிருந்து வந்தவர்களாக இருந்தாலும் போதிய பாதுகாப்பைப்பெற அவர்களுக்கு உரிமையுண்டு. அடுக்குமாடிவாசிகள் குடியிருக்குமிடத்திற்கான நிரூபணமாக தொழிலாளர்களிடமிருந்து ஆதார் அட்டையை கோருவதாகவும் இது மிகவும் முறையற்றது எனவும் தோழர் சுஜாதா சுட்டிக்காட்டினார். தொழிலாளர்கள் பாகிஸ்தான் வங்காளதேசம் போன்ற இதர நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சட்டபூர்வமாக பணிபுரியவும் சட்ட பாதுகாப்பிற்கும் நியாயமான ஊதியத்திற்கு உரித்தானவர்களாகவும் இருப்பதற்குத் தேவையான ஆவணங்கள் அவர்களுக்கு கொடுக்கப்படவேண்டும். தமிழ்நாட்டிலிருந்து இதர மாநிலங்களுக்கும் துபாய் போன்ற நாடுகளுக்கும் பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் குடிபெயர்ந்து செல்வதால் இங்குள்ள தொழிலாளர்கள் இந்தப்பிரச்னையோடு தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது என்றார் தோழர் சுஜாதா. மஹாகுன் வாசிகள் அவர்களே குடிபெயர்ந்து வந்தவர்களில்லையா என்றும் சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்கும் உகந்த குடிபெயர்ந்து வந்த தொழிலாளி யார் என்பதைப்பற்றிய ஒரு கருத்து எவ்வாறு நிர்மாணிக்கப்படுகிறது என்றும் அவர் வினவினார்.

தோழர் லதா, ‘களவாடியுள்ளார்என்று தொழிலாளர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு கோணம் அத்தகைய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கபப்டுகின்றனவா இல்லையா என்பதைக்கூடப் பார்க்காமல் எவ்வாறு இல்லப்பணியாளர்களை உடனடியாகக் குற்றவாளியாக்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு எடுத்துக்கட்டாக சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார். ஒரு வீட்டில் நகையை திருடிவிட்டார் என்று ஒரு வீட்டு வேலைத் தொழிலாளி மீது குற்றம்சுமத்தப்பட்ட போது போலீசார் உடனடியாக அத்தொழிலாளியைக் கைது செய்து துன்புறுத்தினர். உள்ளூர் சமூகமும் வார்டு கவுன்சிலரும் உடனடியாக ஒன்றுகூடி அத்தொழிலாளி விடுவிக்கப்படவேண்டுமென கோரினர். குடும்ப உறுப்பினர்களுக்குளேயே ஒருவர் அந்த நகையை திருடியிருக்கிறார் என்பது பின்னர் தெரிய வந்தது. ஒரு தொழிலாளி திருடியிருந்தாலும் கூட தகுந்த சட்டரீதியிலான முறையில்லாமல் அவரை குற்றவாளியாக்க முடியாது என்றும் கூறினார் தோழர் சுஜாதா. அத்தகைய நிலைமைகளில் தங்களுடைய வழக்குகளில் போராட தொழிலாளர்களுக்கு உதவ ஒரு அமைப்பு என்ற முறையில் PTS கடமைப்பட்டிருக்கிறது என்றார் தோழர் சுஜாதா.

போலீஸ் அனுமதி பெறாமல் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தவிடாமல் தடுக்க முயற்சித்தாலும், போக்குவரத்துக்கு இடையூறின்றி அவர்கள் அதை செய்வர்களேயானால் அவர்களுடைய போராட்டத்தை தொடர இறுதியில் போலீசார் அவர்களுக்கு அனுமதியளித்தனர். பல இயக்கங்களின் மூலமாக இந்தப்பிரச்சினைகளைத் தொடர்ந்து வலியுறுத்த மத்திய தொழிற்சங்கங்களையம் சுதந்திர தொழிற்சங்கங்களையம் அணிதிரட்ட PTS திட்டமிடுகிறது. இந்திய அரங்கத்திற்கு உபி மற்றும் டெல்லி அரசாங்கங்களுக்கும் மனு கொடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

நாய்டாவிலிருந்து கிடைத்த சமீப செய்தி

போலீசாரிடமிருந்தும் அடுக்குமாடிவாசிகளிடமிருந்தும் இடைவிடாத தாக்குதலை சந்திக்கும் தொழிலாளர்களுடனும் உள்ளூர் சமூகத்தினருடனும் உரையாடுவதற்கு தொழிற்சங்கங்களும் சிவில்சமூகக் குழுக்களும் முயற்சிக்கின்றன. தொழிற்சங்க செயல்வீரர்கள் கூறுவது என்னவென்றால் பலத்த போலீஸ் பாதுகாப்பில் அப்பகுதிக்கே போகமுடிவதில்லை. இன்னும் தரை மட்டமாக்கப் படாமலிருக்கும் தொழிலாளர் காலனி குடிசைப்பகுதியில் போலீசார் இஷ்டப்படி சுற்றிவருகின்றனர்.

அடுக்குமாடிவளாகத்தின் கேட் அருகே ஆர்பாட்டம் செய்த சுமார் 100 ஆண் பெண் தொழிலாளர்களை அடுக்குமாடி குடியிருப்பார்கள் இனங்கண்டுள்ளனர். அவர்கள் வளாகத்திற்குள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவித்தன. உள்ளே வேலை செய்ய அனுமதிக்கப்படுபவர்கள் எதிரிகள் போல பார்க்கப்படுவதைத் தொடர்ந்து அனுபவிக்கின்றனர் என செயல்வீரர்கள் கூறினர். மோதல்கள் மேற்கொண்டும் வளராமலிருக்க ஜொரா பீபியும் அவரது குடும்பத்தினரும் அந்த குடிசைப்பகுதியைவிட்டே வெளியேறிவிட்டனர்.

கைதுசெய்யப்பட்ட 60 நபர்களில் 13 பேர் இன்னும் சிறையிலிருக்கின்றனர். வழக்கறிஞர்கள் குழு ஒன்று ஜாமீன் பெற அவர்களுக்கு உதவிவருகிறது. எந்தவித ஆதாரமுமின்றி இந்த நபர்கள் கொலை முயற்சி போன்ற கண்மூடித்தனமான வழக்குகளில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றார் தொழிலாளர் இயக்க செயல்வீரர் ஒருவர்.

இது தொழிலாளர் வர்க்கம் விழித்தெழுவதற்கான அறைகூவலா?

வீடு பற்றிய கலாச்சார வெளிப்பாட்டுடனும் இல்லப் பணியாளர்களுடனான அவர்களது உறவுகள் குறித்தும் மஹாகுன் வாசிகளின் இந்து மேல்சாதி மேலாதிக்கப் பார்வையோடு இந்திய அரசாங்கத்தின் பாசிசமும் ஒத்துப்போகிறது. ஒரு தொழிலாளிக்கு மரியாதை, பாதுகாப்பான பணிபுரியும் நிலைமைகள் மற்றும் நியாயமான ஊதியம் ஆகியவற்றை வழங்க மறுப்பது, தொழிலாளர் மீதான ஒடுக்குமுறையின் மிக மோசமான வெளிப்பாடாகும். மஹாகுன் விஷயத்தில், இந்த முரண்பாடுகள் மேல்சாதி இந்து முதலாளிக்கும் குடிபெயர்ந்து வந்துள்ள முஸ்லீம் பெண் தொழிலாளிக்குமிடையிலான பகைமையாக தெளிவாக அணி சேர்கிறது.

இந்தக் கருத்துக்களை ஏற்று இதோடு தங்களுடைய வர்க்க நலன்களுக்கு உதவியாகவோ அல்லது தீவிரமாக எதிராகவோ இருக்கும் அடிமைத்தனத்தையும் ஏற்று மேன்மேலும் அடியாட்கள் போல செயல்படும் செக்யூரிட்டி காவலர்களின் பாத்திரத்தை ஒரு வர்க்கம் என்ற முறையில் நாம் சோதிக்க வேண்டியள்ளது. ‘அதற்கு முன்னரே மஹாகுன் மாடர்ன் செக்யூரிட்டி காவலர்கள் நிராயுதபணியான தொழிலாளர்கள் தங்கள் பகுதியில் வசிப்பவரை விடுவிக்க வேண்டும் என்று மட்டும் கோரியதற்கு பதிலடியாக வானை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டனர். நாள்முழுதும் காத்துக்கிடந்து போலீசையும் செக்யூரிட்டி காவலர்களையும் அணுகியபின்னரே ஜொராவின் கணவர் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் சென்றார். ஜொரா உள்ளே இல்லை என்று முன்னதாக அவர்க்கு உறுதியளித்த அதே காவலர்கள் ஆர்ப்பாட்டம் எண்ணிக்கையில் பெருகியதை அடுத்து அவரை வெளியே கொண்டு வந்தனர்‘. இது தொழிற்சங்க இயக்கம் முன்பு தீவிர ஈடுபாட்டையும் உத்திவகுப்பதையும் கோரும் சவாலாகும்.

சென்னை ஆர்ப்பாட்டம் இல்லப்பணியாளர்கள் ஒரு வர்க்கம் என்ற முறையில் இந்தப்பிரச்சினை பற்றியும் தங்களுடைய பாதுகாப்புக்கு இதனால் ஏற்படக்கூடிய விளைவு பற்றியும் ஆழமாக யோசித்துவருகின்றனர் எனக்காட்டுகிறது. அந்த செயல்வீரர் கூறியதை நாம் மீண்டும் தெரிவிக்கிறோம்: ‘நிலுவையிலுள்ள ஊதியத்தைக் கோரி பாதுகாப்பாக ஒரு இல்லப்பணியாளர் திரும்ப வேண்டுமானால் அவரை வேலைக்கமர்த்தியவர் வீட்டு கேட் அருகே கல்வீசும் 100 சக தொழிலாளர்களாவது அவருக்குத் தேவை. முறைகேடாக நடத்துதல், வன்முறையில் ஈடுபடல், தங்குதடையின்றி சுரண்டுதல் வீட்டு வேலை துறையில் பறந்து காணப்படுகிறது. இத்துறை நாட்டில் அதிகரித்த அளவில் பெண் தொழிலாளர்கள் வேலை செய்யும் ஆரம்ப நிலை துறையாகும்.

This entry was posted in Domestic Workers, News, Women Workers, Workers Struggles, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.