கௌரி லங்கேஷ் கொலையைக் கண்டித்து சென்னை உட்பட இந்தியாவெங்கும் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டங்கள்.

Protests over the death of Gauri Lankesh, Chennai

தைரியமிக்க பத்திரிகையாளரும், செயல்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள அவர் வீட்டில், 5 செப்டம்பர் 2017 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். தபோல்கர், கல்புர்கி, பன்சாரே சுட்டுக்கொல்லப்பட்ட அதே முறையில் கௌரியும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொலை நடந்த பின்னர் அதனைக் கண்டித்து ஆயிரக் கணக்கானோர் பேரணி நடத்தினர். அதன்பின், சென்ற வாரம் அகில இந்திய அழைப்பொன்று விடப்பட்டது.  சென்னை, டெல்லி, கொல்கத்தா மற்றும் எண்ணற்ற பிற இடங்களில்  பேரணிகள் நடந்தன. “நான்தான் கௌரி, நாங்களெல்லாம் கௌரி“, “காந்தியைக் கொன்றவர்கள்தான் கௌரியைக் கொன்றார்கள்“ போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

This slideshow requires JavaScript.

கௌரி லங்கேஷ் பத்திரிகா என்ற சுதந்திரமான பத்திரிகையின் ஆசிரியராக கௌரி லங்கேஷ் இருந்தார். அவரின் இடது சாரிக் கருத்துகளையும் RSS எதிர்ப்பையும் அந்தப் பத்திரிகை பொதுவாகப் பிரதிபலித்தது. கௌரி வீட்டிற்குத் திரும்பிய போது கொலைகாரர்கள் அவர் வீட்டு வாசலில் காத்திருந்திருக்கின்றனர். கௌரி வீட்டிற்கு வந்த உடனே அவரை நெருங்கி நான்கு முறை சுட்டிருக்கின்றனர். கல்புர்கியும் அவரின் வீட்டு வாசலில்தான் கொல்லப்பட்டார். MM கல்புர்கியைக் கொன்றது போன்ற துப்பாக்கிதான் கௌரியைச் சுடவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கல்புர்கியையும் கௌரி லங்கேஷையும் கொன்றவர்கள் சனாதன் சன்ஸ்தா என்ற இந்து தீவிரவாத பயங்கர அமைப்பின் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

“கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் என்று நீண்ட பட்டியலே இருக்கிறது. அவர்களில் பலரும் மிகச் சாதாரணமான பின்னணியில் இருந்து வந்தவர்கள். ஆங்கிலமல்லாத மொழிகளில் கிராமப்புரப் பிரச்சனைகள் பற்றி எழுதியவர்கள்“, என்று P. சாய்நாத் The Wire -ல் எழுதினார்.  பெங்களூரு பெருநகரத்தில் நடந்த இதுபோன்ற கொலையில் இதுதான் முதலாவது. கொலையாளிகளுக்கு எவ்வளவு துணிச்சல் இருந்திருக்கிறது என்பதை இந்தக் கொலை காட்டுகிறது. இதற்கு முந்தைய கொலை வழக்குகளில் தண்டனை கிடைக்காமல் போனது போல இந்தக் கொலைக்கும் தண்டனை கிடைக்காது போகலாம். கொலையாளிகள் தப்பித்துக்கொள்வார்கள் என்றே தோன்றுகிறது. சமூக வலைதளங்களில் கேட்கும் அருவருப்பூட்டும் குரல்கள் கௌரியின் கொலையைக் கொண்டாடுகின்றன. சிலர், கௌரிக்கு இது வேண்டும் என்கின்றனர். சிலர் இது நக்சலைட்டுகளின் வேலை என்கின்றனர்.

கௌரி கொலை செய்யப்பட்ட ஒரு வாரம் கழித்து ஆயிரக் கணக்கானோர் பெங்களூருவில் பேரணி நடத்தினர். அதன்பின் அக்டோபர் 5 அன்று அகில இந்திய அளவில்  பேரணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. மும்பையில் நூற்றுக் கணக்கானவர்கள் மெரின் டிரைவ் பகுதிக்கு வந்தார்கள். “அநீதிக்கு எதிராக, ஒடுக்குமுறைக்கு எதிராக, சுரண்டலுக்கு எதிராக கருத்துகளை வெளிப்படுத்துங்கள். மக்கள் தங்கள் நிலையை அறியச் செய்யுங்கள், அநீதிக்கு எதிராக, ஒடுக்குமுறைக்கு எதிராக, சுரண்டலுக்கு எதிராக, அவற்றை மாற்றியமைக்க எதிர்த்துப் போராடச் செய்யுங்கள்; அமைப்பாக்குங்கள்“, என்று சலீம் சபூவலா குறிப்பிட்டதற்கு இணங்க வந்திருந்த அனைவருக்கும் பேனா வழங்கப்பட்டது.

டெல்லி பேரணி பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியிருந்தது. கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த கைலாசபுரம் கிராமத்தின் சர்தாராம் பட்டி என்ற முன்னாள் செயல்பாட்டாளர் கூறியதை அந்தப் பத்திரிகை வெளியிட்டிருந்தது. சர்தாராம் மூளை அறுவை சிகிச்சைக்கு ஆளானவர். பரவக் கூடிய மூளைக் கட்டியை அகற்றியதற்கான அடையாளம், மழிக்கப்பட்டிருந்த அவர் தலையில் தெரிந்தது. அவர் சொன்னார்:  “பாசிசம் இன்னும் இங்கு வந்துவிடவில்லை. ஆனால், நமது நாட்டை அது ஆட்கொண்டுவிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, நான் வாழும் நாள் வரை அந்த சக்திகளுக்கு எதிரான எனது எதிர்ப்புக் கருத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்திக்கொண்டே இருப்பேன்.“

சென்னையில் போராட்டக்காரர்கள் கௌரி லங்கேஷ் கொலையைக் கண்டித்து முழங்கினர். “காந்தியைக் கொன்றவர்கள்தான் கௌரியைக் கொன்றார்கள்‘ என்றப் பதாகையைத் தாங்கி வந்தனர். ஆனால், அவர்கள் காந்தி சிலையை நோக்கி வந்தபோது காவல்துறையால் கைது செய்யப்பட்டு வலுக்கட்டாயமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

This entry was posted in News, Working class against communalism, தமிழ் and tagged , , . Bookmark the permalink.