தமிழ்நாடு அரசு அறிவித்த சம்பள அறிவிப்பினால் JACTO-GEO ஏமாற்றம்

வேலைநிறுத்தம் செய்வதற்கான  ஊழியர்களின் உரிமையை மறுத்துவிட்டு, வேலையளிப்பவரான மாநில அரசுக்கும் JACTO-GEO விற்கும் இடையில் சமரசம் செய்துவைக்க உயர் நீதிமன்றம் முன்வந்த பின்னர், மாநில அரசு அறிவித்த புதிய சம்பள முறையினால், கூட்டமைப்பின் உறுப்பினர்களான அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களைத் திருப்திப்படுத்த முடியவில்லை. 2016 முதல்  சம்பளம் மாற்றியமைக்கப்பட வேண்டும், வேலைசெய்பவர்களில்  ஆகக் கீழ் மட்டத்தில் உள்ளவர்களுக்குக் கூடுதல் சம்பள உயர்வு, மத்திய அரசு ஊழியர்கள் பெறும் சம்பளத்துக்குச் சமமான சம்பளம், NEET முறையை ஒழிப்பது போன்றவற்றை மாநில அரசு கருத்தில்கொள்ளவில்லை என்று பல்வேறு அம்சங்கள் குறித்து JACTO-GEO பிரதிநிதிகள் ஆட்சேபணை தெரிவித்தனர்.

நாங்கள் முன்னமே செய்தி வெளியிட்டது போல, ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரையின்படி சம்பளத்தை மாற்றியமைத்தல், அரசு வேலையில் ஒப்பந்த முறையை ஒழித்தல், பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டுவருதல் ஆகியவற்றை வலியுறுத்தி செப்டம்பர் 7 முதல் JACTO-GEO  வேலைநிறுத்தம் செய்தது. வேலைநிறுத்தப் போராட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து முரண்பட்ட கருத்துகள் ஏற்பட்டதால், JACTO-GEO – வின் தலைமையில் பிளவு ஏற்பட்டது. அரசுக்கு ஆதரவான அணுகுமுறையைப் அப்போதிருந்த தலைமை மேற்கொண்டதாலும், உறுப்பு சங்கங்கள் போராட்டத்தைத் தொடர விரும்பியதாலும் புதிய தலைமையொன்று உருவானது. அந்தப் புதிய தலைமை அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டத்தை வழிநடத்திச் சென்றது.

இருந்தபோதும் மதுரை உயர்நீதிமன்றம், ஒரு பொது நல வழக்கில்   வேலைநிறுத்தம் செய்யும் உரிமை அடிப்படை உரிமை அல்ல என்று சொன்னதுடன், எஸ்மாவைப் (ESMA -Essential Services Maintenance Act) பயன்படுத்தி வேலைநிறுத்தம் செய்த ஊழியர்களுக்கு எதிரான நிலையை எடுத்தது.  போதுமான அளவுக்குத் தயாரிப்பு செய்திராத தலைமை, தீர்ப்பின் அடிப்படையில் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. யூனியன்களின் கவலைகளை  மாநில அரசு தீர்க்க வேண்டும் என்று சொன்ன நீதிமன்றம், அமலாக்கம், சமரசம் செய்தல் என்ற பாத்திரத்தை கையில் எடுக்க வேண்டிவந்தது.

அக்டோபர் 11 அன்று மாநில அரசு ஊதிய உயர்வை அறிவித்தது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான மிகப்பெரும் சம்பள உயர்வு என்று ஊடகங்கள் சொல்லின. ஆனால், ஊதிய உயர்வு உழைக்கும் வர்க்கத்தைச் சாந்தப்படுத்தவில்லை. குறிப்பாக, கீழ் மட்டத்திலுள்ள ஊழியர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தனர்.  உதாரணமாக, அரசு ஊழியர்கள் மத்தியில் உள்ள ஆகக் குறைந்த சம்பளத்திற்கும் ஆக அதிக சம்பளத்திற்கும் இடையிலான வேறுபாடு மலைப்பூட்டுவதாக இருக்கிறது. (தொழிலாளிக்குக் குறைந்தது 18,000 ரூபாய் மாதச் சம்பளம் வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரி வரும் நிலையில்,) குறைந்த அளவிலான சம்பளம் ரூபாய் 15, 700 என்று இருக்க, அதிகபட்ச சம்பளம் 2.25 லட்சம் ரூபாய் என்று இருக்கிறது. சம்பளத்திற்கும் இதர தொகைகளையும் 2.75  என்ற எண்ணால் பெருக்கியிருக்கிறார்கள் என்று தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சொல்கிறார்கள். இருந்தபோதும், இது மிகப் பெரிய ஊதிய வித்தியாசத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. துப்புரவுத் தொழிலாளி அல்லது எழுத்துப் பணியில் இருக்கும் ஒரு தொழிலாளருக்கு ஏறக்குறைய 180 ரூபாய் போக்குவரத்துப் படியாகக் கிடைக்கும். அதேசமயம், ஒரு ஐஏஎஸ் அலுவலர் பெறுகின்ற  போக்குவரத்துப் படி சில ஆயிரங்களாக இருக்கும்.

நீதிமன்ற வழக்கு இழுத்துக்கொண்டே செல்ல, தமிழ்நாடு அரசு அளித்தவற்றில் பல்வேறு அம்சங்களினால் மகிழ்ச்சியடையாத தொழிற்சங்கப் பிரதிநிதிகள்  தொழிலாளர்களுக்கான விளக்கக் கூட்டம் ஒன்றை அக்டோபர் 20 அன்று நடத்தினர். அந்தக் கூட்டத்தின்போது பேசிய தோழர் அன்பரசன், “அரசு நிர்வாகத்தில் இருக்கும் அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தினால் பயன் (சம்பள உயர்வு) பெற்றிருக்கிறார்கள்.போராடியத் தொழிலாளர்களுக்கு மிகக் குறைவாக கிடைத்திருக்கிறது“, என்று சொன்னார். யூனியன்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளை அரசு ஒதுக்கிவிட்டது என்று கூட்டத்தில் உரையாற்றியவர்கள் குறிப்பிட்டனர். ஒதுக்கி வைக்கப்பட்ட கோரிக்கைகளில் சில: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான  ஊதியம், 2016 முதல் கூலி உயர்வு கேட்டிருப்பதனால் 2016 முதல் ஊதிய உயர்வு பாக்கியை அளிக்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்திற்கு முடிவு கட்டுவது, ஒப்பந்த ஊதிய முறையை ஒழிப்பது. ஆனால், அரசு இவற்றுக்கு நேர் எதிரானத் திசையில் பயணப்பட விரும்புகிறது. ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்ட அதே சமயம், வேலைகளை வெளியே கொடுத்து செய்து வாங்கும் முறையை (அவுட் சோர்ஸ்-outsource) நடைமுறைப்படுத்தும் தன்  நோக்கத்தை அரசு வெளிப்படுத்தியது என்று தோழர் அன்பரசன் சொன்னார். (அரசுப் பள்ளிகளில் உள்ள துப்புரவுப் பணிகளை தனியாருக்கு விடுவதற்கான புதிய அரசாணை  ஒன்றை 26 அக்டோபர் அன்று அரசு வெளியிட்டிருக்கிறது.)

இதற்கிடையில் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வும் கைக்கு வரவில்லை. புதிய ஊதியத் தொகையை நடைமுறைப்படுத்துவதற்குத் தாங்கள் இன்னும் தயார் ஆகவில்லை என்று கருவூலத்துறையினர் சொல்கின்றனர். புதிய ஊதியத்திற்கு எதிராக நீதிமன்றத் தடையாணை வாங்குவதற்கு கருவூலத்துறை செயலாளர்  தயார் செய்து வருகிறார் என்று தோழர் அன்பரசன் சொல்கிறார்.

நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கின் காரணமாக தொழிற்சங்கத் தரப்பினர் சிக்கலான நிலையில் இருக்கிறார்கள். ஒரு பக்கம், போராட்டத்தைத் தொடர்வோம் என்று அவர்கள் முழங்கவேண்டியிருக்கிறது. மறுபக்கம், போராட்டம் என்னவென்று தீர்மானிப்பதை நீதிமன்றத்தின் கையில் கொடுத்துவிட்டதால் உயர் நீதிமன்றம் சொல்வதைக் கேட்க வேண்டிய நிலைக்குத் தங்களைத் தள்ளிக்கொண்டவர்களாய் ஆகிப்போயிருக்கிறார்கள். இதன் காரணமாக, விவாதம் அனைத்தும் ஊதிய உயர்வைப் பற்றியதாக இருக்கும்படி அரசு செய்துவிட்ட அதேசமயம், தொழிற்சங்கத்தின்  இதர கோரிக்கைகள் அனைத்தும் விவாதத்திற்கு வராமல் போய்விட்டன. தற்போது, மிக வேகமாக ஒப்பந்த  முறையைக் கொண்டுவர முயற்சிகள் நடப்பது இதற்கான சாட்சியமாக இருக்கிறது. NEET விவகாரத்தைப் பொறுத்தவரை, இப்பிரச்சனையைத் தொடர்ந்து கையிலெடுக்க தொழிற்சங்கங்களுக்குத் திட்டம் ஏதும் இல்லை என்று தோன்றுகிறது. இதன் காரணமாக, பற்றியெரியும் பிரச்சனைகளை மட்டும்தான் JACTO-GEO கையிலெடுக்கிறது என்ற பொது  மக்களின் கருத்து வலுப்பெறுவதாகிறது.

அக்டோபர் 23 வரவிருக்கும் நீதிமன்ற விசாரணைக்குப் பின்பு அடுத்து என்ன செய்வது என்பது பற்றி JACTO-GEO விவாதிக்கத் திட்டமிட்டிருக்கிறது.

 

This entry was posted in News, Public Sector workers, Workers Struggles, தமிழ் and tagged , , . Bookmark the permalink.