தமிழ்நாடு – புதுவையில் விழிப்புணர்வு பயணம் நிறைவு: சென்னையில் அரங்கக் கூட்டம

                                                        பத்திரிக்கை செய்தி                                         1.11.2017

Justice (retd) Hariparanthaman at the meeting

அன்புடையீர், வணக்கம். தேங்கியுள்ள விண்ணப்பங்களுக்கு உடன் பணப்பயன்கள் – பணப்பயன்களை அதிகரித்தல்;  நலவாரியங்களுக்கு லெவி மத்திய மாநில பட்ஜெட்களில் 3 சத ஒதுக்கீடு மத்திய சமூகப் பாதுகாப்பு வரைவு III & செஸ் ரத்துக்களை திரும்பப் பெறவும் தமிழ்நாடெங்கும் விழிப்புணர்வு பயணம் அக்டோபர் 2 அன்று சென்னை காந்திசிலை அருகில் புறப்பட்டு நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டு;க்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, ஊட்டி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளுர், காஞ்சிபுரம், புதுவை, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் வழியாக சென்னையை  அடைந்து நிறைவு நிகழ்ச்சியாக 1.11.17 அன்று சென்னையில் அரங்கக் கூட்டம் நடைபெற்று கோரிக்கை மனுக்களை மாண்புமிகு தமிழக முதல்வர், மாண்புமிகு தொழிலாளர்துறை அமைச்சர், உயர்திரு தொழிலாளர் துறை ஆணையாளர், உயர்திரு தொழிலாளர் துறை செயலாளர் ஆகியோருக்கு  தரப்பட்டன.

Workers at the meeting

நாட்டையும் நாகரீகத்தையும் பலவகை பொருள் உற்பத்தி மற்றும் சேவைகளில் ஈடுபடும் கட்டட, விவசாய, மீன், கைத்தறி, வீட்டு வேலை, தையல், தோல், மண்பாண்டம், முடி திருத்துதல், சலவை, பனை மரம் ஏறுதல், உப்பளம், சிறுகடை, துப்புரவு போன்ற பலவகை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பணி – ஊதியம் – சமூகப்பாதுகாப்பு தரும் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் சட்டம் 1982ல் இயற்றப்பட்டு அதன் கீழ் நலவாரியங்கள் 95லிருந்து ஏற்படுத்தப்பட்டன. தற்போது தொழிலாளர் துறையின் கீழ் 17 நலவாரியங்களும், பல்வேறு துறைகளின் கீழ் மேலும் 17 நலவாரியங்களும் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் கட்டுமானம் ஆட்டோ, மீன், விவசாயம்; தவிர பிற நலவாரியங்ளுக்கென நிதி ஆதாரங்களின்றி பல்லாயிரக்கணக்கான கேட்பு மனுக்கள்  தேங்கியுள்ளன. பணப்பயன்கள், குறி;ப்பாக ஓய்வூதியம், இயற்கை மரணம், பிரசவ உதவி, கல்வி உதவி, மருத்துவ சேவை, வீட்டு வசதி ஆகியவற்றில் பிற மாநிலங்களை ஒப்பிட்டால் குறைவாக உள்ளன. ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து காத்திருந்த பலர் இறந்தும் விட்டனர் என்ற வருத்தமான செய்தியை பல்வேறு மாவட்டங்களில் கேட்டு அதிர்ச்சி அடைந்தோம்.

தேசிய அளவில் ஏற்கனவே உள்ள சமூகப் பாதுகாப்பு சட்டங்களை ரத்து செய்யும்வகையில் சமூகப் பாதுகாப்பு வரைவு சட்டம் III உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி யை காரணம் காட்டி உப்பு, நிலக்கரி, டோலமைட், சினிமா, இரும்புத்தாது, மைக்கா போன்ற தொழிலாளர் நலநிதிகளுக்கான செஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரூபாய் நோட்டு ரத்து மற்றும் ஜி.எஸ்.டி காரணமாக சிறு தொழில்களும் கூலித் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மறுபுறம் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கேட்காமலே ஊதிய உயர்வு, ஓய்வூதியம் அதிகரிப்பு என்ற நிலையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக பலமுறை போராடியும் தரப்படவில்லை. 

எமது கோரிக்கைகள் : 

1. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அனைத்து நலவாரியங்களுக்கும் லெவி  ஒரு சதம் வசூல் செய்ய வேண்டும். 2. மத்திய மாநில பட்ஜெட்களில் 3மூ அமைப்புசாரா தொழிலாளர் சமூகப்பாதுகாப்புக்காக ஒதுக்கீடு செய்யவேண்டும். 

3. வருவாய்துறை குறுக்கீடின்றி ஸ்மார்ட் கார்டுமுறை ஃ ஆதார் அட்டை மூலம் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களையும் தொழிலாளர் பங்களிப்புடன் கட்டாயப் பதிவு செய்ய வேண்டும். நலவாரியங்களை சீரமைத்து மத்திய தொழிற்சங்கங்கள் – சுதந்திரமான தொழிற்சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். 

4. பணப்பயன்கள் அனைத்தும் தில்லி மாநிலத்தைப் போல அதிகரிக்கப்பட வேண்டும். நுளுஐ மருத்துவவசதி-பணப்பயன்களை அதிகரித்தல்-நிபந்தனையற்ற ஓய்வூதியம்-ரூ.3000, மகப்பேறு காலஉதவி 90நாட்களுக்கான ஊதியம் 20ஆயிரம், அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ5லட்சம் விபத்து நிவாரணம், இயற்கைமரணத்திற்கு 50ஆயிரம், திருமண உதவி 25ஆயிரம், வீட்டுவசதி, மழைக்கால நிவாரணம் அமலாக்கப்பட வேண்டும். 

5. தேங்கியுள்ள விண்ணப்பங்களுக்கு உடனே பணப்பயன்கள் தரப்பட வேண்டும். நீண்ட காலமாக நிலுவையிலுள்ள கேட்பு மனுக்களுக்கு உடனடி பணப்பயன்கள், நலவாரிய செயல்பாடுகளை கண்காணித்தல் – மேல்முறையீடுக்கு வழிவகை செய்ய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். 

6. மத்திய அரசின் ரத்து செய்யப்பட்ட செஸ்கள் மறுபடி கொண்டு வரப்பட்டும் ஏற்கனவே உள்ள கட்டுமான, பீடி மற்றும் பிற செஸ்கள் பாதுகாக்கப்படவும் புளுவு மசோதாவில் விலக்கு அளிக்கப்பட வேண்டும். 

7. மத்திய அரசு தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் என்று பெயரில் மத்திய சமூகப் பாதுகாப்பு வரைவு III அமைப்புசாரா தொழிலாளர்களின் உரிமை மீறல்கள், தனியார்மயம், மத்திய அரசின் ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை ரத்து செய்திட வேண்டும்.             

  இப்படிக்குமாநில ஒருங்கிணைப்பாளர்கள்     

R GEETHA (UWF) and Thirupathi (HMS)

அமைப்புசாரா தொழிலாளர்களின் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

This entry was posted in Construction Workers, Contract Workers, Informal sector, Labour Laws, News and tagged , , , , . Bookmark the permalink.