பழைய பாக்கிகளைக் கோரி போக்குவரத்துக் கழகங்களின் ஓய்பெற்ற தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய போராட்டம்!

மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான  ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் நவம்பர் 21 அன்று போராட்டம் நடத்தினார்கள். வெகு நீண்டகாலமாகக் கிடப்பில் போடப்பட்ட கோரிக்கைகளை அவர்கள் எழுப்பினர். அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பற்பல பழைய பாக்கிகளைத் தர வேண்டும் என்று அவர்கள் கோரினர்.  2017 மே மாதத்தின் போது தொழிலாளர்கள் நடத்திய  2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும் பழைய பாக்கிகளை அரசு அளிக்கவில்லை. சென்னை பல்லவன் சாலையில் 45 நிமிடங்களுக்கு தொழிலாளர்கள் சாலை மறியல் செய்தனர். மிக அதிகமான அளவில் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தபோதும், அவர்களின் கோபம் கண்ணுக்கு எதிரே தெரிந்தது. CITUவோடு இணைக்கப்பட்ட தமிழ்நாடு மாநில மற்றுபோக்குவரத்துக் கழகங்களின் ஓய்வுபெற்ற ஊழியர்கள் நலச் சங்கம் போராட்டத்தை அமைப்பாக்கியிருந்தது. ஓய்வூதியம், பஞ்சப்படி, வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, எடுக்காத விடுப்புகளுக்கான சம்பளம் உள்ளிட்ட பாக்கிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரினர். இதற்கான நிதி ஒதுக்கீடு அரசு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

 

அரசும், போக்குவரத்து சேவைகளை அளிக்கும்  அரசின்  மாநிலப் போக்குவரத்துக் கழகங்களும் ஆயிரக் கணக்கான தொழிலாளர்களைச் சுரண்டி வருகின்றன. தொழிலாளர்களுக்கும், ஓய்வுபெற்றவர்களுக்கும் அளிக்க வேண்டிய பாக்கிகள் கொடுக்கப்படவில்லை. அவ்வாறு கொடுக்கப்படாததற்கு நஷ்டம்தான் காரணம் என்று சொல்கின்ற போக்குவரத்துக் கழகங்கள், தொழிலாளர்களுக்கு உரிமையான கோடிக் கணக்கான ரூபாய்களையும் பயன்படுத்திக்கொண்டுவிட்டன. PF பிடித்தங்கள், சேமிக்கப்பட்ட விடுப்புகளுக்கான ஊதியம், கடன்- சிக்கன சங்கம்- நலச் சங்கங்களுக்கு தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணம் உள்ளிட்டவை இவ்வாறு போக்குவரத்துக் கழகங்களால் செலவு செய்யப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற சூழலில், இவ்வகையான போராட்டங்கள் அத்தியாவசியம் ஆகின்றன. அதுமட்டுமல்லாமல், சிறிய பலன்களைப் பெறுவதற்குக் கூட இதுபோன்ற போராட்டங்களை சங்கங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தொழிற்சங்கங்களின் மதிப்பீட்டின்படி மாநிலத்தில் 66 ஆயிரம் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் உள்ளனர். 2017, ஜூன் 30 வரை தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பாக்கிகள் பின்வருமாறு:

விவரம் தொழிலாளர்களின் எண்ணிக்கை பாக்கித் தொகை (கோடி ரூபாய்களில்
வருங்கால வைப்பு நிதி 7328 333.12
ஓய்வூதியப் பங்களிப்பு 7242 233.21
பணிக்கொடை 7242 233.21
விடுப்பு (ஊதியம்) 25486 336.05
ஓய்வூதிய ஒப்படைப்புதொகை

 

12646 201.10

த்தம் ரூ .1140.65 கோடிகள்

மாநில போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வு பெற்ற ஊழியர்கள் நல்வாழ்வுச் சங்கம் பிற 8 பெருநகரங்கள்- நகரங்களில் அமைப்பாக்கிய போராட்டத்தின் பகுதியாக சென்னையில் நடைபெற்ற மறியல் அமைந்தது. விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள போக்குவரத்துக் கழக தலைமையிடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் உள்ள பெருநகரப் போக்குவரத்துக் கழக தலைமையகத்தின் முன்பு நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் கூடி, கோபாவேசமாக முழக்கம் எழுப்பினர். பின்னர், பிராதான சாலையில் 45 நிமிடங்களுக்கு மறியல் நடத்தினர். பல பத்தாண்டுகள் ஓட்டுநராக அல்லது நடத்துனராகப் பணியாற்றி PF, பஞ்சப்படி, மற்றும் பிற பலன்கள் கொடுக்கப்படாத   தொழிலாளர்கள் பலருடன் தொழிலாளர் கூடம் பேசியது. வெட்கங்கெட்ட அரசு என்று முழங்கிய அவர்கள், அவர்களைக் கைது செய்வதற்காக, பிரதான சாலையில் இருந்து அகற்ற முயன்ற  காவல்துறையினரைக் கோபத்துடன் வம்பிக்கிழுத்து கிண்டல் செய்தனர்.

This slideshow requires JavaScript.

ஒவ்வொரு மாதமும் பென்ஷன் எப்போது வரும் என்று எங்களுக்குத் தெரியாது என்று சொன்ன பல தொழிலாளர்கள், மற்ற அரசு ஊழியர்கள் போலவே தங்களுக்கும் குறிப்பிட்ட ஒரு நாளில், தவறாமல்,  மாதாந்திர பென்ஷன் வர வேண்டும் என்றனர். மேலும், ஓய்வு பெறும் தொழிலாளர்கள், ஏறக்குறைய அனைவருக்கும் அவர்கள் ஓய்வு பெறும் தினத்தன்று அவர்களுக்கான பாக்கிகள் கொடுக்கப்படுவதில்லை. சிலருக்கு பின் தேதியிட்ட காசோலைகள் கொடுக்கப்படும். வேறு சிலருக்கோ சில நாட்கள் கழித்து வந்து பாக்கிகளை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ரவிச்சந்தின் என்ற தொழிலாளி கும்பகோணத்தில் நடத்துனராக 1989 முதல் பணியாற்றியிருக்கிறார். அதன்பின் அவர் சென்னையின் பெருநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு மாற்றப்பட்டார். கடந்த அக்டோபரில்  ஸ்பெஷல் கண்டக்டராகப்  பணி ஓய்வு பெற்றார். அப்போது அவர் பெற்றுவந்த சம்பளம் ரூபாய் 35 ஆயிரம். “பின் தேதியிட்ட இரண்டு காசோலைகள் எனக்குக் கொடுக்கப்பட்டன. ஒன்று PFக்கானது. அதில் 2 ஜனவரி 2018 என்று தேதியிட்டு இருந்தனர். மற்றது பணிக்கொடைக்கானது. அதில் 2 ஏப்ரல் 2018 என்று தேதியிட்டிருந்தது. எனக்கு எவ்வளவு ஓய்வூதியம் வரும் என்று எனக்குச் சொல்வதைக் கூட துறையைச் சேர்ந்தவர்கள் செய்யவில்லை. எனக்கு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 21 ஆயிரம் வரும் என்று நான் நினைக்கிறேன். செட்டில்மெண்ட் ஆகும்போது திருப்பிக் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையில் நான் பல இடங்களில் கடன் வாங்கி வருகிறேன். ஆனால், இந்த செக்குகள் காசாகும் வரை நான் வட்டிக் கட்ட வேண்டியிருக்கும்“, என்று ரவிச்சந்திரன் சொன்னார். தான் ஓய்வு பெற்ற நாளிலேயே மின்சார வாரியத்திலிருந்து ஓய்வுபெற்ற தன் நண்பரைப் பற்றி ரவிச்சந்தின்  சொன்னார். மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நண்பருக்கான செட்டில்மென்ட் தொகை உடனே தரப்பட்டதுடன், நவம்பருக்கான பென்ஷன் தொகையும் செக்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தங்களின் பிள்ளைகளுக்கான திருமணம், கல்வி போன்ற காரணங்களுக்காக கடன் பட்டுள்ளதாக தொழிலாளர்கள் பலரும் எங்களிடம் சொன்னார்கள்.

 ஓய்வூதியர்களின் கொடுமையான நிலை பற்றி கவனம் செலுத்திய, 2017 மேயில் நடைபெற்ற இரண்டு நாள் போராட்டம் விரும்பியப் பலன்களைத் தரவில்லை என்ற ஏமாற்ற உணர்வு ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் மத்தியில் உள்ளது. அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து தொழிற் சங்கங்களின் கூட்டுக் குழுவிற்கும் அரசிற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இது குறித்து தொழிலாளர் கூடம் மே மாதத்தில் எழுதியுள்ளது

அந்த ஒப்பந்தத்தின்படி, முதலில் கொடுக்கப் போவதாகச் சொல்லப்பட்ட ரூபாய் 750 கோடியும் ரூபாய் 500 கோடியும் தற்போதுள்ள பஞ்சப்படி பாக்கிகளையும் பென்ஷன் பாக்கிகளையும் கொடுப்பதற்காக உடனடியாக வழங்கப்படும். மாணவர்  சலுகைத் தொகை முன்பணம் ரூபாய் 250 கோடியும் (GO 37), ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடையை அளிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட குறுகியக் காலக் கடனான 375 கோடி ரூபாயும் (GO 38), பற்றாக்குறை சமாளிப்பு முன் பணமாக (Ways and Means advance) அளிக்கப்பட்ட ரூபாய் 121.84 கோடியும் (GO 39)மேற்சொன்ன ரூபாய் 500 கோடியில் அடங்கும். மூன்று மாதங்களுக்குப் பின்பு ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பாக்கிகள் அனைத்தும் கொடுக்கப்பட்டுவிடும். மேலும், PF, LIC, பணிக்கொடை  என்பதாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அளிக்கப்பட வேண்டிய சட்டபூர்வப் பிடித்தங்கள்  பற்றி கொள்கை அளவில் பரிசீலிக்கப்படும். புதிய ஒப்பந்தம்  கையெழுத்து ஆகும் வரை 13வது சம்பளக் கமிஷன் படி சம்பளம் வழங்கப்படும். இதுதான் 2017 மே போராட்டத்தின் இறுதியில் அரசு அளித்த உறுதிமொழியாகும்.

அரசு இந்த உறுதிமொழிகளை அளித்திருந்தாலும்,ஓய்வுபெற்றத் தொழிலாளர்களுக்கு எதுவும் வந்து சேரவில்லை என்று சொல்கிறார் சங்கத்தின் பொதுச் செயலாளரான தோழர் கர்சன். “உறுதி கொடுக்கப்பட்ட பணத்தில் ஏதோ கொஞ்சத்தைக் கொடுத்தார்கள். அந்தப் பணம் தற்போதிருக்கும் தொழிலாளர்களின் பஞ்சப்படி பாக்கியைக் கொடுக்கப் பயன்படுத்தப்பட்டது. செப்டம்பரில் அளிக்கப்பட்டிருக்க வேண்டிய ரூபாய் 375 கோடியை அரசு விடுவிக்கவே இல்லை“, என்று அவர் சொன்னார். நீதிமன்றங்களிலும் கூட அரசு உறுதிமொழிகளைத் தருகிறது. வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது, ESMA அறிவிக்கப்படும் என்று நீதிமன்ற அச்சுறுத்தல் வந்த சமயத்தில் மாயாண்டி சேர்வை என்ற தொழிலாளி, தொழிலாளர்களின் துன்பத்தைப் பற்றி அஞ்சல் அட்டை ஒன்றில் நீதிபதிகளுக்கு எழுதினார். மேற்சொன்ன பொது நல வழக்கை ஏற்றுக்கொண்டிந்த நீதிமன்றமான மதுரை உயர்நீதிமன்ற இருக்கை அந்தக் கடிதத்தில் தொழிலாளி எழுப்பியிருந்த விஷயங்களைத் தானே முன்வந்து வழக்காக ஏற்றது. அந்த வழக்குத் தற்போது, சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது இருக்கைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த இருக்கையின் முன்பு நவம்பர் 20 அன்று ‘முதல் தவணையான ரூபாய் 375 கோடி நிதித் துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழகங்களின் வழியே தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுவிடும்‘ என்று அரசு உறுதியளித்தது. “இப்படி அவர்கள் நீதிமன்றத்தில் சொல்லி ஒரு வாரம் ஆகிறது. ஆனால், இதுவரையில் அது தொடர்பாக எந்த அசைவும் எங்கள் கண்ணில் படவில்லை“, என்று தோழர் கர்சன் சொன்னார்.

 இதற்கிடையில் 13வது சம்பள ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் கழகங்களுக்கும் சங்கங்களுக்குமிடையில் துவங்கியிருக்கின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் என்ன என்று காத்திருப்பதாக தோழர் கர்சன் சொன்னார். அடுத்த கட்ட நடவடிக்கையை முடிவு செய்ய டிசம்பரில் கூடுவோம் என்றும் அவர் சொன்னார்.

 

 

This entry was posted in News, Public Sector workers, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , , , . Bookmark the permalink.