அரசுடன் பேச்சுவார்த்தை தோல்வி – போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பிற்கும் மாநில அரசிற்கும் இடையிலான 13வது ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை தோல்வியடைந்த நிலையில், நேற்று மாலை 5 மணி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் மாநிலம் முழுதும் வேலைநிறுத்தத்தை துவக்கினர். ஊதிய உயர்வு கணக்கீட்டிற்கான அடிப்படை காரணி குறி;த்த கோரிக்கை பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமாகும். அரசு தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் பெற 3 காரணி அடிப்படையில் தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வு கோரி வந்தனர். பின்னர் அவர்கள் குறைந்தபட்சம் 2.57 காரணி அடிப்படையில் ஊதிய உயர்வு கோரினர். ஆனால் அரசோ 2.40 காரணி அடிப்படையில் ஊதிய உயர்வு கொடுக்கமுடியும் என்ற நிலைபாட்டை எடுத்துள்ள்து. இதனால் தொழிலாளர்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Workers at Pallavan House 4th Jan

Notice announcing Strike

இது மட்டுமில்லாமல் தொழிலாளர்கள் நலப்பயன்கள் பாக்கிகள்(பிஎஃப், பணிக்கொடை, கூட்டுறவு நிதி) என 7000 கோடி ரூபாயை போக்குவரத்து கழகம் பாக்கி வைத்துள்ளது.

தொழிற்சங்கங்கள் கோரியது அரசு அளிக்க முன்வந்தது
ஊதிய உயர்வு 3 காரணி அடிப்படையில் ஊதிய உயர்வு, 2.57 என்ற அடிப்படையில் 3 வருட ஒப்பந்தத்தை ஒத்துக்கொள்ள முடிவு 2.40 காரணி அடிப்படையில் 3 வருட ஒப்பந்தம் (2013 செப்டம்பர் 1 க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு 3சத ஊதிய உயர்வு (இவர்கள் பழைய ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை)
குறைந்த பட்ச ஊதியம் ரூ19500 ரூ17700 (2.57 காரணி அடிப்படையில்)
கிரேட் ஊதியம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் மற்ற பொதுத்துறை தொழிலாளர்களுக்கும் இடையிலான வேறுபாட்டை குறைக்கவேண்டும் கோரிக்கை எடுத்துக் கொள்ளப்படவில்லை.
ஓய்வூதியம் ஒப்பந்தபடி பென்ஷன் மற்றும் பிஎஃப் செலுத்தப்படவேண்டும். 2003 ஏப்ரல் 1 க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பென்ஷன் கொடுக்கப்படவேண்டும். கோரிக்கை எடுத்துக் கொள்ளப்படவில்லை.
நிலுவைத் தொகை தொழிலாளர்களுக்கான ரூ7000 கோடி நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும். ஜனவரி முதல் அனைத்து பணப்பயன்களும் சரியாக செலுத்த வேண்டும். ஒவ்வொரு வருடமும் ரூ1000 நிலுவைத் தொகை செலுத்தப்படும். ஏப்ரல் 2018ல் இருந்து பாக்கிகள் சரியாக செலுத்தப்படும்.

கடந்த 16 மாதங்களாக 22 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும், அதிமுக அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொழிலாளர்களின் கோரி;க்கைகளை மறுத்து வருகிறார். அரசு நிதிப்பற்றாகுறை தான் காரணம் என மாநில அரசு கூறுகிறது. தொழிலாளர் கூடத்துடன் பேசிய பல தொழிலாளர்கள் அரசின் நிலைபாட்டை குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். பல்லவன் சாலையில் உள்ள சென்ட்ரல் டிப்போவில் பணிபுரியும் சிஐடியு கிளைத் தலைவருக்கு 10 வருடங்களாகியும் ரூ20000 தான் ஊதியம் கிடைக்கிறது. அடிப்படை ஊதியம் ரூ9000 தான். ‘இந்த ஊதியத்தைக் கொண்டு நான் என் மகனையும் மகளையும் படிக்க வைத்தேன். எவ்வளவு கடினம் என்று நீங்களே யோசியுங்கள்’ என அவர் கூறுகிறார். தன்னுடைய குழந்தைகளின் கல்விக்காக அவர் சுமக்கும் கடன் பாக்கி ஏராளம். தன்னுடைய இரு குழந்தைகளுக்கான கல்விக்கு ரூ25000 கடன் வாங்கியுள்ளதாக, 2008ல் சேர்ந்த ஒரு தொழிலாளர் கூறுகிறார். ரூ19000 வாங்கும் அவரால் கடனை திருப்பித்தர இயலவில்லை. வட்டிதான் ஏறிக் கொண்டிருக்கிறது.

சிறிய நகரங்களில் வாழும் தொழிலாளர்களின் நிலை இன்னும் மோசம். நெடிய போராட்டத்திற்குப் பின்னரே 1995ல் தான் நிரந்தரப் படுத்தப்பட்டதாக ஈரோட்டில் பணிபுரியும் டிடிஎஸ்எஃப் தொழிற்சங்கத்தில் உள்ள நடத்துனர் கூறுகிறார். 20 வருடமாக பணிபுரிந்தும் அவருக்கு அடிப்படை ஊதியம் ரூ7500, ஊதியம் ரூ20000 தான். பல்வேறு ஓய்வு பெற்ற தொழிலாளர்களும் இதையே கூறுகின்றனர்.

Workers on Strike in Madurai 5th Jan

இந்த மோசமான நிலையிலும், தாங்கள் வேலை நிறுத்தத்தை விரும்பவில்லை என்றும் அரசுதான் தங்களை வேலைநிறுத்தம் செய்யும் நிலைக்கு தள்ளியுள்ளது எனப் பலத் தொழிலாளர்கள் கூறினர். தங்களின் பணி பொது சேவையாகும் எனப் பலப் போக்குவரத்து தொழிலாளர்கள் கருதுகின்றனர். தொழிலாளர் கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை என்ற செய்திகள் வெளியாகியவுடன், 5 மணியில் இருந்து பல்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் புறப்படவில்லை. இதனால் சிரமத்திற்கு ஆளாகிய பொதுமக்கள் கோபப்பட்டனர், ஆனால் பல்வேறு இடங்களில் ஓட்டுனர்களும் நடத்துனர்களும் தங்களுடைய பிரச்சனைகளை விளக்கி போக்குவரத்த வழிகள் குறித்து ஆலோசனை கொடுத்தனர். ஏற்கனவே கடந்த மாதம் நடந்த காத்திருப்பு போராட்டத்தில் தங்கள் கோரிக்கைகள் குறித்து துண்டறிக்கையை பொதுமக்களிடம் தொழிலாளர்கள் விநியோகம் செய்திருந்தனர். பொது மக்கள் தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தருவார்கள் என போக்குவரத்து தொழிற்சங்கத் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். பொதுமக்களிடம் கருத்துகள் இருதரப்பையும் பிரதிபலித்தன. தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும், வேலை நிறுத்தத்தை முன்கூட்டியே அறிவித்திருந்தால் தாங்கள் இவ்வளவு அவதிக்குள்ளாகமாட்டோம் என சிலர் கூறினர். பிரச்சனையை சுமூகமாக அரசு கையாளத் தவறியதை பல பொதுமக்கள் கண்டித்தனர்.

Commuters waiting for busses at Vadapalani

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் அவசியமான ஒன்று. வேலை நிறுத்தம் நடைபெறுவதனால் தான், அரசின் முழுகவனமும் தொழிலாளர்களின் பக்கம் வந்துள்ளது. இதனால் அரசு அதிகாரிகளும், போக்குவரத்து கழக அதிகாரிகளும் மாநில முதல்வருடன் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகின்றனர். இருப்பினும், இடதுசாரிகள் உள்ள 10 தொழிற்சங்கங்களை கொண்ட கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறிய பின், அவர்களை கூப்பிட்டு பேச்சுவார்த்தையை தொடராமல், மற்ற 32 தொழிற்சங்கங்களுடன் அவசரமாக ஒப்பந்தம் போட்டுள்ளனர். இது தொழிலாளர்களை பிளவு படுத்தி அவர்களை மோசமாக சித்திரிக்க செய்வதற்கு எடுக்கப்படும் கீழ்த்தரமான நடவடிக்கையாகும். டிசம்பர் 2015ல் சென்னை நகரமே நீரில் மூழ்கிய போதும், போக்குவரத்தை பல்வேறு இடங்களில் குறுக்கு வழிகளில் செலுத்தி பொது மக்களுக்கு அளப்பறியா சேவையை செய்தவர்கள் போக்குவரத்து தொழிலாளர்கள். பாதுகாப்பான இடங்களுக்கு பொதுமக்களை கொண்டு செல்லவும், மருத்துவ வசதி பெறவும் அவர்கள் பெரும் உதவி செய்தனர். அப்போது அவர்களை பாராட்டிய அரசு இன்று அவர்களை புறக்கணிக்கின்றது. அவர்களுடைய பொது சேவையை மனதில் கொண்டு அவர்களுக்குரிய தொகைகளை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் பொதுமக்களுக்கும் கடமை உள்ளது.

This entry was posted in News, Public Sector workers, Strikes, தமிழ் and tagged , , , , , , . Bookmark the permalink.