மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கை எதிர்த்து 4000 தொழிலாளர்கள் பேரணி

மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதக் கொள்கைகள் தொழிலாளர்களின் உரிமைகளை வெகுவாக பாதிக்கும் நிலையில், ஜனவரி 31 அன்று 4000 ஏஐசிசிடியு தொழிலாளர்கள் தொழிலாளர்கள் உரிமைகளை நிலைநாட்ட சென்னையில் பேரணி ஒன்றை நடத்தினர். இதில் தமிழ்நாட்டில் இருந்து விவசாயம், தொழில்துறை மற்றும் சேவை துறைகளில் இருந்து பல்வேறு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களின் கோரிக்கைகள்:

  • 8 மணி நேர நாள் வேலை, 40 மணி நேர வார வேலை, அனைவருக்கும் தேவையான அளவில் கண்ணியமான, பாதுகாப்பு மிகுந்த பணிகள், குறைந்த பட்ச ஊதியமாக மாதம் ரூ21000
  • நிலையாணைச் சட்டம் 2009 மாற்றத்திற்கேற்ப மாடல் நிலையாணையை உடனடியாக மாற்ற வேண்டும்
  • அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த வேண்டும்
  • சம வேலைக்கு சம ஊதியம்
  • பொது விநியோகத் திட்டத்தை பழையபடி செயல்படுத்த வேண்டும்
  • பேருந்து கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்
  • விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்
  • தொழிற்சாலைகளில் ஒப்பந்த வேலை முறையை ஒழிக்க வேண்டும்.

இதைத் தவிர, சிறையில் வாடும் இரு பிரிக்கால் தொழிலாளர்களை விடுவிக்க தொழிலாளர்கள் கோரினர். தொழிலாளர்கள் தலைமைச் செயலகம் வரை பேரணியில் சென்று தங்கள் கோரிக்கை மனுவை கொடுக்க இருந்தனர். ஆனால் அவர்கள் தலைமைச் செயலகத்திற்கு முன்னரே தடுக்கப்பட்டனர். பின்னர் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதிகள் மாநில தொழிலாளர் துறை அமைச்சர் நிலோஃபர் கஃபீல் அவர்களை சந்தித்து மனுவை அளித்தனர்.

மாநில அரசை கிண்டலடித்து கோஷங்கள் எழுப்பிய தொழிலாளர்கள், அதிமுக அரசு ஆட்சி விலக வேண்டும் எனக் கோரினர். மோடியின் மத்திய அரசு கொள்கைகளையும் தொழிலாளர்கள் விமரிசித்தனர். குறிப்பாக தொழிலாளர்களின் உரிமைகளை மறுக்கும் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களையும், வேலை வாய்ப்பின்மை மற்றும் தரமற்ற பணிநிலைமைகள் குறித்து தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மரியாதைக்குரிய மருத்துவமனைகளிலும் எவ்வாறு 12 மணி நேர வேலை, குறைந்த பட்ச ஊதியத்திற்கும் குறைவான ஊதியம் ஆகிய தொழிலாளர் விரோதப் போக்குகள் நிலவுகின்றது என்பதை சென்னை இசபெல்லா மருத்துவமனையைச் சார்ந்த தொழிலாளர்கள் விவரித்தனர். சென்னை மற்றும் கோயம்பத்தூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வந்த தொழிலாளர்கள் சங்க அங்கீகாரம் மற்றும் சங்கத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது நிர்வாகங்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளையும் முக்கிய பிரச்சனைகளாக குறிப்பிட்டனர்.

கடலூர் மற்றும் தஞ்சாவூரில் இருந்து வந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு விவசாய நெருக்கடி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பருவமழை நன்றாக இருக்கும் காலத்தில் கூட கொல்லிடம் (காவேரி பாசனத் திட்டத்தின் கீழ் உள்ள கடைசிபகுதி) பகுதிகளில் பெரும் நீர் பற்றாகுறை நிலவுகிறது. மேலு;ம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடிய 100 நாள் வேலை திட்;டத்தில் நடக்கும் குளறுபடிகளாலும் ஊழலாலும், தொழிலாளர்களுக்கு போதிய பணிப்பாதுகாப்பு இருப்பதில்லை. இதனால் வேலைக்காக விவசாயத் தொழிலாளர்கள் நகரங்களுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் இடம் பெயர்கின்றனர். திட்டம் சரியாக வேலை செய்யாததற்கு அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் ஊழல்தான் காரணம் என ஒரு தொழிலாளர் குறிப்பிட்டார்.

கடந்த இரு மாதங்களாக 66 நாள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டு 25ம் தேதி மீண்டும் பணிக்கு திரும்பிய சான்மீனா தொழிலாளர்கள் அனைவரும் பேரணிக்கு வந்திருந்தனர். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்கள் பேரணியில் கலந்து கொள்வதற்காக ஒரு நாள் விடுமுறை கோரியிருந்தனர். அப்போது நிர்வாகம் இன்னொரு நாள் இதற்கான வேலையை தொழிலாளர்கள் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடு விடுமுறை கொடுக்க ஒத்துக் கொண்டிருந்தது. அவர்கள் கோஷங்கள் எழுப்பி பேரணியில் உற்சாகமாக பங்கேற்றனர். சிறையில் உள்ள தங்கள் சக தோழர்கள் இருவரை விடுவிக்க வேண்டும் எனக் கோரி கோயம்பத்தூர் பிரிக்கால் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

பேரணியில் தொழிலாளர்கள் உற்சாகமாக பங்கேற்றும், காவல்துறை அனுமதி அளித்திருந்த பேரணி பாதை முக்கிய சாலைகளை தவிர்த்ததால் பேரணியின் தாக்கம் வெகுவாக காணப்படவில்லை. மேலும் பேரணி தலைமைச் செயலகத்திற்கு 2கிமீ முன்னேயே பாந்தியன் சாலையில் நிறுத்தப்பட்டது. தடுப்பைத் தாண்டி தொழிலாளர்கள் முன்னே செல்ல தயாராக இருந்தனர். ஆனால் தொழிற்சங்கத் தலைவர்கள் தடுப்பை விட்டு செல்ல வேண்டாம் எனத் தொழிலாளர்களை சமாதானப்படுத்தியதன் விளைவாக, ஒரு சிறிய பிரதிநிதி குழு தொழிலாளர் துறை அமைச்சரை சந்திக்க சென்றனர். இதனால் சீக்கிரமே தொழிலாளர்கள் கூட்டத்தை விட்டு கலைந்தனர்.

தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபரைச் சந்தித்த பிரதிநிதி குழு, உற்பத்தியில் பயிற்சியாளர்களையும், ஒப்பந்தத் தொழிலாளர்களையும் கட்டுப்படுத்த நிலையாணை மாதிரியை திருத்தி அமைக்க வேண்டும் எனக் கோரினர். மேலும் குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றும், சம வேலைக்கு சம ஊதியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். தொழிற்சாலை அளவில் கோயம்பத்தூரில் உள்ள வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலை எல்ஜிபியில் உள்ள பிரச்சனைகளையும், மற்றும் அம்பத்தூர் தொழிற்சாலையில் நடக்கும் பிரச்சனைகளையும் குறிப்பாக தொழிலாளர் துறை இப்பிரச்சனைகளை தீர்க்க மெத்தனம் செய்யாதது குறித்து அவர்கள் அமைச்சரிடம் குறிப்பிட்டனர்.

இப்பிரச்சனைகளை ஆராய்ந்து உடனடியாக தீரப்பதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாக தொழிலாளர் துறை அமைச்சர் கூறினார். நிலையாணைச் சட்ட சீர்திருத்தத்திற்கு ஏற்ப விதிமுறைகளை மாற்றுவதாகவும் அவர் வாக்குறுதி அளித்தார். சட்ட சீர்திருத்தத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து 18 மாதங்கள் ஆகியும் விதிமுறைகள் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

This entry was posted in News, தமிழ் and tagged , , , , , . Bookmark the permalink.