அன்றைய அடிமைகளின் நிர்வாகம் இன்றைய நவீன நிர்வாகத்தின் அடித்தளம்

(இந்த கட்டுரை http://hbswk.hbs.edu/item/7182.html இணையதளத்தில் வெளியடபட்ட  கட்டுரையிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது)

அமெரிக்காவின் தென் மகாணங்களன் அமெரிக்க தோட்ட அதிபர்கள் அ10ப்பிரிக்க அமெரிக்கர்களை அடிமையாக்கி தங்களது மூலதனத்தை பெருக்கியது அனைவரும் அறிந்ததே. அது குறித்து நடத்திய ஆய்வாளர் கைட்லின் ரோஸன்தால் அன்று தோட்ட முதலாளிகள் அடிமைகளின் உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கு அமல்படுத்திய திட்டங்கள் இன்றைய நவீன நிர்வாக முறைகளுக்கு அடித்தளமாக உள்ளது என்று கூறுகிறார்.

முதலாளத்துவத்தின் அடையாளமான நவீன நிர்வாகம் என்பது அன்றைய கண்டுபிடிப்பான மின் தறிகளிலிருந்து இன்றைய கணினிகள் வரை ஏற்பட்ட தொழிற் நுட்ப மாறுதல்கள், புத்திசாலிதனத்தை கொண்டு உருவாக்கப்பட்டவை என்ற பலமான கருத்து நிகழ்கிறது. ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல. இன்றைய முதலாளத்துவம் கட்டற்ற சந்தையை மட்டும் அடிப்படையாக கொண்டதல்ல. அன்றைய அடிமைத்தனத்தின் அடித்தளத்திலிருந்து எழுப்பபட்டுள்ளது’ என அவர் கூறுகிறார்.

தொலைவிலிருந்து நிர்வாகம் செய்த நிலச்சுவான்தார் முறை
ரோஸன்தாலின் ஆய்வின் படி ஜமாய்கா மற்றும் பார்படோஸில் 1750களில் நிலச்சுவான்தார்கள் தங்களுடைய நிலங்களை மற்றவர்களின் கீழ் நிர்வாகப் பொறுப்புகளை விட்டு சென்ற போது முறையான கணக்குகளை கண்டறிய வகைகளை வகுத்தனர். உடைமைதாரர்களும், நிர்வாகமும் தனியான அமைப்புகளாக இன்றைய முதலாளித்துவ கட்டமைப்பில் நிலவுவதற்கு இதுவே வித்திட்டது என அவர் கூறுகிறார்.

அiடிமை முறையில் ‘சுதந்திரமான’ தொழிலாளர் குறித்து வைக்கமுடியாத கணக்கெடுப்புகள் அடிமைகளை வைத்து எடுக்க முடிந்தது. தொழிலாளர்கள் தங்களை விட்டு சென்று விடுவர் என்ற கவலைகள் அவர்களுக்கு இல்லாத நிலையில் உற்பத்தி திறனை பெருக்குவதற்கும் அதை கண்காணிப்பதற்கும் பல யுத்திகளை கையாள முடிந்தது. தொழிலாளர்கள் உண்ணும் உணவு, ஒரு பெண் தொழிலாளர் எவ்வளவு நேரம் தனது குழந்தைக்கு பால் கொடுக்கிறார் என்பதைக் கூட அவர்களால் பதிவு செய்ய முடிந்தது.

இவற்றை வைத்து தொழிலாளர்களுடைய உற்பத்தி திறனை அதாவது ஒவ்வொரு தொழிலாளரும் எத்தனை மூட்டை பஞ்சுகளை பொறுக்குகின்றனர் என நிரவாகிகள் கணித்தனர். மேலும் அடுத்த ஆண்டு உற்பத்தி திறனை நிர்ணயித்து தங்களுடைய லாபத்தை அதிகரிக்க புதுயுத்திகளை முதலாளிகள் கண்டுபிடித்தனர்.

அடிமை நிர்வாக யுத்திகள் இன்றைய நவீன நிர்வாகத்தின் அடித்தளங்கள்
அதிகமாக பஞ்சு பொறுக்குவதற்கு கொஞ்சம் பணத்தை பரிசாக கொடுப்பது அவர்கள் கண்டுபிடித்த யுத்திகளில் ஒன்று. இதில் வெற்றி பெற்ற தொழிலாளர்கள் அதன் பின்னர் அவ்வளவு பஞ்சு பொறுக்கியாக வேண்டும். உற்பத்தி திறனை எட்டாத தொழிலாளர்களுக்கு தண்டனைகளை கொடுப்பதற்கும் எவ்வாறு இந்த கணக்கெடுப்புகள் உதவின அடிமைகள் தங்களுடைய உரைகளில் பதிவு செய்துள்ளதையும் அவர் ஆராய்கிறார். உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக தொழிலாளர்களுக்கு பண பரிசு அறிவிப்பது இன்றைய நிர்வாக முறையில் உள்ளது.

அதே போல் தோட்டங்களில் திருடுபோவதை தவிர்ப்பதற்கு தோட்ட முதலாளிகள் தொழிலாளர்களுக்கு கூட்டு தண்டனை முறையை அமல்படுத்தினார்கள். அதாவது தொழிலாளர்கள் திருடியவரை அடையாளம் காணத் தவறினால் அனைத்து தொழிலாளர்களின் போனஸ்களிலிருந்து கழிக்கப்படும் என்று எச்சரிக்கபட்டிருந்தனர். இன்றும் சிங்கர் தையற்பொறி கம்பெனி போன்ற பல தொழிற்சாலைகளில் தொழிலாளர்களே மற்றவர்களை கண்காணிப்பது, கூட்டு தண்டனை ஆகிய கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன.

இன்றைய நிர்வாகத்தில் காணப்படும் தொழிற் உற்பத்தி திறன் அளவீடு தோட்ட நிர்வாகத்திலும் காணப்பட்டது என ரோஸன்தால் கூறுகிறார். ஒவ்வொரு தொழிலாளரின் உற்பத்தியை வைத்து 30 வயது ஆண் தொழிலாளரின் உற்பத்தி திறனை தோட்ட முதலாளிகள் நிர்னயம் செய்தனர். அதே போல் இன்று காணப்படும் தொழில் சாதனங்களில் அதனுடைய பயன்பாட்டு மற்றும் வயதுக்கு ஏற்ப விலை மதிப்பு குறைவு(Depreciation) முறை தொழிலாளர்களுக்கும் பயன்படுத்தினர். நன்றாக வேலை செய்யக்கூடிய தொழிலாளரின் மதிப்பை விட வயதான தொழிpலாளர்களுக்கு மதிப்பு குறைவாக மதிப்பிடபட்டது. இந்த நிர்வாக முறை ரெயில்ரோடு அமைக்கும் போது அமல்படுத்தப்பட்டது என்பது தவறான சிந்தனை என அவர் குறிப்பிடுகிறார்

மேலும் இத்தகைய நிர்வாக முறைகள் தொழிலாளர்களை ‘மனிதர்கள்’ என பார்க்காமல் ‘முதலீடுகள்’ என்று பார்க்கும் சிந்தனை முறையை வளர்க்கின்றது என அவர் வலியுறுத்திகிறார். ‘அடிமை நிர்வாக முறைகளை நாம் இன்று நவீன நிர்வாக முறைகளில் உபயோகப்படுத்துகிறோம் என்றால், நாம் இன்றைய நிர்வாக முறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாம் எவ்வாறு மனிதர்களை அடையாளம் காணுகிறோம்? மனிதத்துவத்திற்கு நமது கடமை என்ன? என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும்’ என்பது ரோஸன்தாலின் ஆய்வு வலியுறுத்துகிறது.

This entry was posted in Analysis & Opinions, Research Papers, தமிழ். Bookmark the permalink.