தமிழாராய்ச்சி நிறுனத்தில் வேலை நியமன விதிமுறை மீறல்கள் – Äcademics for Democracy அறிக்கை

சென்னை தரமணியில் உள்ள உலகத்  தமிழாராய்ச்சி நிறுவனம் 1970ம் ஆண்டு தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டு இன்று வரை சென்னையில் இயங்கி வருகின்றது. தமிழ் குறித்து பல்வேறு ஆய்வுகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. ஆய்வு நிறுவனமாக செயல்பட்டு வந்த இந்நிறுவனத்தில் 2005ம் ஆண்டு முதல் UGCயின் வழிமுறைகளுக்கு  இணங்க  முனைவர் மற்றும் M.Phil படிப்புகள் தொடங்கப்பட்டன. இங்கு பணியாற்றி வந்த ஆய்வாளர்கள் கற்ப்பித்தல் பணியிலும் ஈடுபட்டனர்.  UGC விதிகளின்படி முழுநேர ஆசிரியர்களை  உதவிப் பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள்  மற்றும் பேராசிரியர்கள் என்றே வகைபடித்தி அழைக்க வேண்டும். இவ்விதி இங்கு மீறப்பட்டுள்ளது.

முனைவர் பட்டம் பெற்ற, பல்வேறு கல்லூரிகளில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப்  பணியாற்றிய அனுபவமுள்ள ஆசிரியர்கள் முதுநிலை ஆராய்ச்சியாளர்களாகவே உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இது UGC விதிக்கு புறம்பானது. UGC விதியின் கீழ், முதுகலைப்  பட்டம் பெற்று ஆய்வுகளை மட்டுமே மேற்கொள்ளும் ஒருவரை மட்டுமே முதுநிலை ஆராய்ச்சியாளராக கருத வேண்டும்.

இந்நிறுவன துணை விதிகளின் படி முதுநிலை ஆராய்ச்சியாளராக 5 வருடங்கள் பணியாற்றிய ஒருவர் இணைப் பேராசிரியராக பதவி உயர்வு அடைய இயலும். இப்பதவி உயர்வு நடைமுறையும் கூட இங்கு சரியாக பின்பற்றப்படவில்லை. ஏற்கனவே, ஆசிரியர்களை முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் என்று குறிப்பிடுவது UGC விதிக்கு புறம்பானது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.தகவல் அறியும் சட்டத்தின் கீழ் “உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளராக பணியாற்றிய
அனுபவம் உதவிப் பேராசிரியர் அனுபவமாக கருதப்படுமா ?” என்ற கேள்விற்கு “இல்லை, கருதப்படாது” என்ற பதிலைப் பெற்றுள்ளனர் இங்கு பணியாற்றும் சில “முதுநிலை ஆராய்ச்சியாளர்கள்”. 

முதுநிலை ஆராய்ச்சியாளர்களில்  சிலர், நிறுவனத்தின் இயக்குநரிடம் பலமுறை இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட மனு அளித்தும், இயக்குநரின் போலி வாக்குறுதிகளால் சலிப்புற்று, ஆகஸ்ட் மாதம் நிறுவன வாயிலின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்புகளையும் புறக்கணித்தனர். இதற்கு எதிர்வினையாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் கற்பித்தல் மற்றும் ஆய்வு மேற்பார்வைப் பணியில் இருந்து வலுக்கட்டாயமாக விடுவிக்கப் பட்டுள்ளனர். இயக்குநருக்கு / நிறுவனத்திற்கு  எதிராக இவ்வித ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று ஆணை பிறப்பிக்கபட்டுள்ளது.

இந்நிறுவன இணையதளத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் உதவிப் பேராசிரியர்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் – http://www.ulakaththamizh.org/Lecturers.aspx.ஆனால், போராடிய ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட குறிப்பாணையோ இதை மீண்டும் மறுக்கிறது. Äcademics for Democracy அமைப்பை சார்ந்த சிலர் இயக்குநரை சந்திக்க சென்ற போது “நேரமில்லை” என்று கூறி பேச மறுத்துவிட்டார்.

This entry was posted in Press Releases, Research Papers, Service Sector, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.