மும்பை ஆட்டோ வேலை நிறுத்தத்தின் போது நாங்கள் ஏன் ஆட்டோ ஓட்டினோம்? இரண்டு தொழிலாளர்களின் கருத்துகள்

மும்பை ஆட்டோ ரிக்ஷாமென் சங்கம் நகரத்தில் ஆட்டோ ஓட்டுனர்களின் மிகப் பெரிய சங்கமாகும். 1.05 லட்ச ஆட்டோ ஓட்டுனர்களில் 90சதம் இந்த சங்கத்தில் உறுப்பினராக உள்ளதாக சங்கத் தலைவர் எஸ் ராவ் கூறுகிறார். ஆகஸ்ட் 31 அன்று ஆட்டோகளுக்கு முறையற்ற விலை நிர்ணயத்தை எதிர்த்தும், தனியார் டாக்சி நிறுவனங்களான ஒலா மற்றும் உபெர் ஆகியோருக்கு கொடுக்கப்படும் உரிமங்களை எதிர்த்தும் ஆட்டோ ரிக்ஷாமென் சங்கம் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்காக அழைப்பு விடுத்திருந்தது.

இந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தின் போது சுமார் 95000 ஆட்டோக்கள் ஓடவில்லை என்று சங்கத் தலைவர் கூறியுள்ளார். ஆனால் ஜுலை 31 அன்று மும்பை சாலைகளைக் காணும் போது நிலைமை வேறு மாதிரி இருந்தது. மாலை 5 மணிக்கு பினனர் சாலைகளில் ஆட்டோக்கள் அதிகமாக தென்பட்டன. சங்க நிபந்தனைகளுக்குப் புறம்பாக வேலை நிறுத்த நாள் அன்று ஆட்டோ ஓட்டிய, சங்கத்தைச் சார்ந்த இரண்டு தொழிலாளர்களுடன் நாங்கள் உரையாடினோம்.

இந்த இரண்டு தொழிலாளர்களும் மகாராஷ்டிராவைச் சார்ந்தவர்கள் அல்ல. ஒருவர் உத்தரப் பிரதேசத்தில் இருந்தும் இன்னொருவர் பீஹாரில் இருந்தும் வந்து மும்பையில்; வேலை செய்யும் தொழிலாளர்கள் ஆவர். வேலை நிறுத்தம் குறித்து சங்கங்களில் உள்ள முரண்பாடுகளை குறிப்பாக வேலை நிறுத்த முடிவுகளில் தொழிலாளர்களின் பங்கேற்பு இல்லாததையும், வேலை நிறுத்தத்தின் முக்கியத்துவத்தை தொழிலாளர்களுக்கு உணரவைக்கத் தவறிய தொழிலாளர் பிரதிதிகளின் பங்கு குறித்தும் அவர்களின் கூற்றுகள் வெளிப்படுத்துகின்றன.

கே: நாள் முழுவதும் நீங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றீர்களா?
ஆட்டோ 1 : ஆம் ஆனால் மாலையில் நாங்கள் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்து விட்டோம். நாங்களும் சாப்பிட வேண்டுமல்லவா? (சிரிக்கிறார்)
ஆட்டோ 2 : இவ்வாறு ஆட்டோ ஓட்டுவதற்கு தைரியம் வேண்டியுள்ளது. வேலை நிறுத்தத்தை புறக்கணித்ததற்காக பல இடங்களில் ஆட்டோ ஓட்டுனர்களை அடித்ததாக எங்களுக்கு தகவல்கள் வருகின்றன. நாங்கள் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. குறிப்பாக ஹைவேக்களிலும், எங்கள் ஏரியாக்களில் சிறிய தொலைவு மட்டுமே ஓட்டுகிறோம். ஹைவேக்களை விட்டு மக்கள் நிறைந்த பகுதிக்கு சென்றால் நாங்களும் அடிவாங்க நேரிடும்.

கே: வேலை நிறுத்தம் எதற்காக மேற்கொள்ளப்படுகிறது?
ஆட்டோ 1: ஓலாவிற்கும் உபேர் நிறுவனத்திற்கும் எதிராக வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இன்று ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உரிமம் வாங்குவது கடினமாக உள்ளது. 1-1.5 லட்சம் செலவு செய்து நடையாய் அலைய வேண்டியுள்ளது. அதனால் தான் மும்பையில் ஆட்டோ ஓட்டுனர்களை விட ஆட்டோக்கள் அதிகமாக உள்ளன. ஆனால் ஓலா மற்றும் உபேர் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு ஷோரூமில் இருந்து டாக்சியை வெளியே எடுக்கும் போதே உரிமம் கிடைத்து விடுகிறது. ஏரியா மற்றும் (தேவைகள் அதிகம் உள்ள) சில நேரங்களில் அவர்கள் கட்டணத்தை மாற்றி கொள்கின்றனர். இது சட்ட விரோதமாகும் ஆனாலும் அவர்கள் செய்கின்றனர். நாங்கள் அதை செய்ய முடியாது. எங்களுடைய வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

கே: இந்த வேலை நிறுத்தத்தில் நீங்கள் நம்பிக்கை கொண்டுள்ளீர்களா?
ஆட்டோ 2: கண்டிப்பாக. வேலை நிறுத்தம் மிக முக்கியமானது. ஆனால் பல உள்ளுர் ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தை புறக்கணித்து ஆட்டோ ஓட்டினர். நாங்களும் அதனால் தான் எங்களுடைய ஆட்டோவை ஓட்டுகின்றோம்.

கே: வேலை நிறுத்தத்தை நடத்தும் முன்னர் உங்களுடைய கருத்துகளை சங்கத் தலைவர்கள் கேட்டார்களா?
ஆட்டோ 2: இல்லை. எப்போதும் தலைவர்களிடம் இருந்து கட்டளைகள் தான் வருகிறது. எங்களிடம் அவர்கள் கருத்து கேட்பதில்லை. அனைத்து இடங்களிலும் அவர்கள் துண்டு பிரச்சாரங்களை கொடுத்து வேலை நிறுத்தத்தின் காரணங்களை விளக்கினர். இந்த காரணங்கள் எங்களுக்கும் உடன்பட்டவையே ஆனாலும் அவர்கள் வேலை நிறுத்தம் குறித்து எங்களிடம் எதுவும் கேட்க வில்லை.

கே: வேலை நிறுத்தத்திற்கு எதிராக இவ்வாறு பலபேர் செயல்பட்டால், வேலை நிறுத்தம் வெற்றியடைவதற்கு சாத்தியங்கள் குறைவில்லையா?
ஆட்டோ 1: எப்படியும் வேலை நிறுத்தம் வெற்றியடைவதற்கு சாத்தியம் இல்லை. அரசு இந்த நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படும் போது எவ்வாறு ஒரு நாள் வேலை நிறுத்தம் வெற்றி அடையும்? இந்த வேலை நிறுத்தத்தால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. நாங்கள் தான் பாதிக்கப்படுகிறோம்.

கே: எத்தனை வருடங்களாக நீங்கள் ஆட்டோ ஓட்டுகிறீர்கள்?
ஆட்டோ 2: நான் 6 வருட காலமாக ஓட்டுகிறேன். நான் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வருகிறேன். அங்கு விவசாயத்தில் வருமானம் இல்லாததால் நான் இங்கு வந்தேன். ஒருவர் கடினமாக உழைத்தால் நன்றாக சம்பாதிக்கும் நிலைமை முதலில் இருந்தது.
ஆட்டோ 1: நாங்கள் கிராமத்தில் சம்பாதித்ததை விட இங்கு நிலைமை மேலாக இருந்தது.
ஆட்டோ 2: ஓலா மற்றும் உபேர் வந்த பிறகு நிலைமை மாறி விட்டது. எங்களுடைய ஊதியம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

This entry was posted in Analysis & Opinions, Drivers Auto, Strikes, Workers Struggles, தமிழ் and tagged . Bookmark the permalink.