ரங்கநாதன் தெருவின் கருப்பு உள்ளங்களுக்குள் கொண்டு செல்லும் “அங்காடி தெரு” !

shopping மன திருப்தியை தரும் ஒரு வகை தியானம் என்று வர்ணிக்கப்படுவதுண்டு. எனக்கோ நான் வளரும் ஒரு கட்டத்தில் இருந்தே shopping அனுபவம் விரும்பத்தகாத எப்பொழுதும் தள்ளிப்போடக்கூடிய செயலாகவே இருந்துள்ளது. வாடிக்கையாளர்களை நன்கு “கவனித்து” அதிகபட்ச பொருட்களை வாங்கிய “சந்தோஷத்துடன்” வழி அனுப்ப வேண்டுகிற விற்பனை பிரதிநிதிகளை அலட்சியப்படுத்தவதா? என்னை கொஞ்சம் தனியாக விடுங்கள் என மெதுவாய் அடம்பிடிப்பதா? “எனக்கு சேவை செய்வதை திவிர உனக்கு என்ன வேலை? நான் select பண்ணியதை கூட உன்னால் ஒழுங்காக pack செய்ய முடியாதா? அங்கு என்ன அரட்டை? manager இடம் சொன்னால் தான் திருந்துவீர்கள்” என பயங்கரமாய் அலறும் aunty களையும் uncle களையும் கேட்டும் கேளாமல் வந்த வேலையை முடிப்போம் என இருப்பதா? அல்ல, கம்மி விலை கடைகளில் மட்டும் தான் இந்த நச்சும் கூட்டமும், posh ஆள்வார்பேட்டை தெருக்களில் இரு தரப்பினரும் நிதானமாக கனிவாக நடந்துக்கொள்வார்கள் என அந்த வலையில் போய் விழுவதா?

அங்காடி தெரு என்ற படம். பட்டினத்திற்கு கூட்டிக்கொண்டு வரப்பட்டு “பயச்ச்சந்திரன் ஸ்டோர்ஸ்” களிலும் “அண்ணாச்சி டெக்ஸ்டைல்ஸ்” களிலும் நாகரீக அடிமைகள் ஆக்கப்படும் மனிதர்களின், இன்னும் சொல்லப்போனால், சிறுமி சிறுவர்களின் வாழ்க்கை சித்திரம். மனித “பரிணாம” வளர்ச்சியில் இன்னும் ஒரு அசிங்கமான சரித்திரத்தின் சிறு தொகுப்பும் இது. 10ஆம் வகுப்பு மற்றும் +2 படித்து முடித்த, மேலும் படிப்பை தொடர விரும்பாத அல்லது இயலாத உற்சாக இளைஞர்களை முற்றிலுமாய் உற்சாகம் இழக்க வைக்க திட்டமிட்ட அணுகுமறை தீட்டபட வேண்டும். இதில் பல வருடங்களாக தேர்ச்சி பெற்றுள்ளனர் ஜவுளிக்கடை உரிமையாளர்களும் மேல்பார்வையாளர்களும். (ஜவுளி ஆலைகளின் சுமங்கலி திட்டம், ஆடை தொழிற்சாலைகளின் தொழிலாளர் முகாம்கள், விற்பனை இடத்தின் வன்கொடுமைகள் – இவையில் எந்த நரகம் மேலானது என்று யோசிக்க முயற்சிக்க வேண்டாம்). ஜாதி பாரபட்சம் “நம் ஊர் பிள்ளைகளுக்கு உதவனும் இல்லையா” என்ற பெருந்தன்மையாக தென்பட, கும்பலாக பேருந்தில் கொண்டுவரப்படுகிறார்கள் மலிவு விலை இளம் ஊழியர்கள். வந்த நாளிலேயே தரமான சுதந்திரமான வாழ்க்கையின் மாயை எல்லாம் கலைந்து விடுகிறது. ஒரு பெரிய அறையில் உடல்கள் உரசியபடி நூற்றுக்கணக்கானோர் தூங்க வேண்டும் (பாய் தலைகாணி கூட சொகுசு), விடிகாலையில் உதைத்து எழுப்பப்பட்டு குளிக்க இடம் /நேரம் இல்லாமல் விரைய வேண்டும், varicose veins ஆல் கால்கள் வீங்கி நொறுங்கி போகும் வரை நின்று துணிகளை விரித்து காட்ட வேண்டும், அளவிற்கு அசுத்தமான சுகாதாரமற்ற உணவு கூடத்தில் சாப்பாட்டை அவசரமாக திணித்துக்கொள்ள வேண்டும்.

www.youtube.com/watch?v=LXD20TV9GtY

“கருங்காலி” என அழைக்கப்பட்டு கீழ்த்தனமான சர்வாதிகாரியாய் terror காட்டும் floor supervisor. வேலை பார்க்கும் இடத்தில் ஆண் பெண் கலந்துரையாடி ரகசியமாய் காதல் கடிதங்கள் பரிமாறி கொண்டால் அவமானப்படுத்தி தற்கொலைக்கு தள்ளப்படுவார்கள், எனவே உணர்வுகளுக்கு மாறாக நடந்துக்கொள்வதே survival of the fittest கான முதல் பாடமாக அமைகிறது. CCTV இல் பதிவாவது உணராமல் கடைக்குள் பூட்டப்பட்டு விட்ட ஒரு இரவை காதலனுடன் ஆசைப்பட்ட ஆடைகளை trial பார்த்து கழித்துவிட்ட ஒரே “பாவத்திற்காக” அந்த பெண்ணை பலாத்காரம் செய்து “தண்டிப்பது” கருங்காலி போன்ற supervisor களின் “கடமை”யாம். அதற்க்கென்று தனி அறை. திரையை கிழித்து அதிர்ச்சியில் உறைய வைக்கிறது படம். கரடுமுரடாக நிமிர்ந்து நிற்கும் தைரிய பெண்ணையும் மிரட்டல்களால் பாலியல் கொடுமைக்கு compromise செய்ய வைத்துவிட பெரும் முயற்ச்சி தேவைப்படுவதில்லைகருங்காலிகளுக்கு. அதிகார பலமும் police உடன் பணக்கட்டு adjustment உம் போதும். இந்நிலையில் ஆடம்பர விளம்பரங்களுக்காக கடைகளுக்கு shooting கிற்கு வரும் பெரிய நடிகை-நடிகர்கள், brand endorsement செய்யும் பரப்பரப்பில் தங்களை சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் ஊழியர்கள் சகித்துக்கொள்ளும் கற்பனைக்கு மீறிய கொடூரங்களை பற்றி விசாரிப்பார்கள் என்று நாம் TV முன்னால்அமர்ந்து எதிர்ப்பார்ப்பது நியாயம் இல்லை தானே? ஆடல் பாடல், அதை தாங்கி பிடிக்க சிறிது glamour இருந்தால் எதையும் விற்று விடலாம் அல்லவா!

வீட்டு வேலை புரியும்போது வயதுக்கு வந்து விடும் சிறுமியை ஆச்சாரம் பார்த்து car shed இல் நாயுடன் ஒதுக்கி வைக்கும் “மனிதர்கள்” மத்தியில், பொது கழிவறை cleaner ஆக தன்னைத்தானே பணி அமர்த்திக்கொண்டு சில்லறைகளை சம்பாதிக்கும் கதாபாத்திரமும், வெயிலில் அமர்ந்து பொம்மைகளை விற்று மற்றவர்களுக்கும் வேலை குடுத்து உதவ நினைக்கும் பார்வை இழந்த முதியவரும் ஜொலிக்கிறார்கள் !

வயிற்றுப் பிழைப்பை விட தன்மானமும் சுயமரியாதையும் முக்கியம் என்று தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்க்கொள்கின்றனர், கால்களை இழந்த வலிமிக்க பாரத்தையும் காதல் கொண்டு சவால் விடுகின்றனர்.
வசந்தபாலனும் அணியும் நேர்மையாய் விடை பெறுகின்றனர்.

This entry was posted in Art & Life, தமிழ் and tagged , , , , , , , . Bookmark the permalink.