புரட்சியாளர் தோழர் இன்குலாப் மறைவிற்கு அஞ்சலி – தோழர் சிவக்குமார்

தோழர் இன்குலாப் மறைந்தார். மனுசங்கடா இன்குலாப், புதுக்கல்லூரி நிர்வாக முறைகேட்டை பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொறுப்பாளராக இருந்து எதிர்த்தவர்,1987 கால கட்டம் பொன்னையன் கல்வி அமைசசர்,அரசுகல்லூரி ஆசிரியர்கழக உறுப்பினர்கள் இடமாற்றத்தால் பந்தாடப்பட்டு பழிவாங்கப்பட்டனர், தற்காலிக ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். புதுக்கல்லூரி வளாகத்திலிருந்து கல்லூரி ஆசிரியர்கள் கூட்டுநடவடிக்கைக் குழு ஊர்வலம். அரசு கல்லூரி ஆசிரியர் கழகத் தலைவரான நானும் ஏயுடி பொதுச்செயலர் அனந்தநாராயணனும் ஊர்வலத்தில் செல்கிறோம்.ஆசிரியத் தோழர்களுடன் வாயில் கறுப்புத் துணி கட்டிக கொண்டு நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தச்செல்கின்றோம். தோழர் இன்குலாப் முழக்கமிட்டபடி வருகிறார்.வருமானவரித்துறை அலுவலகம் அருகே வந்தவுடன் உளவுத்துறையினர வீடியோ எடுக்க முனைகின்றனர்.  இன்குலாப் திடீரென முழக்கமிடுகிறார்’படம் எடுக்காதே! படம் எடுக்காதே! போலீஸ் நாகமே ! படம் எடுக்காதே! ‘. ஆயிரக்கணக்கில் கூடியிருந்த ஆசிரியர்களும் முழக்கம் இடுகின்றனர் . உளவுத்துறை காவலர் காமிராவை எடுத்துக்கொண்டு இடத்தைக் காலி செய்தது நினைவுக்கு வருகிறது. மார்க்சியலெனிய விடுதலை அமைப்பில் பேராசிரியர் திருமாவளவன் , கெல்லட் பள்ளி திருமலை, தனராசு ,நானும் இருந்த காலகட்டத்தில் இனகுலாப் இருந்ததும்  எங்களோடு விவாதங்களில் பங்குபெற்றதும் நினைவுக்கு வருகிறது. ரோகித் வெமூலா மறைவையொட்டி காஞசிபுரத்தில் தலித் அமைப்புகள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தில் அவரைச்சந்தித்ததுதான் இறுதி சந்திப்பு.தொலைபேசியில்  ஆசிரியர் போராட்டம் குறித்து தொடர் எழுதுகிறேன் சில விவரங்கள் கேட்டார்,நேரில் வருகிறேன் என்றேன். செல்லாமல் விடடேன்.  இன்று இன்குலாப் இல்லை.  அரசியல் பணி, ஆசிரியர்பணி, ஆசிரியர் இயக்கப்பணி எணறு 80களில் பம்பரம் போல் சுழன்று பணியாற்றிய பேராசிரியர் பட்டாளத்தில் பேராசிரியர் கேசவன் மறைவுக்குப்பின் பேராசிரியர்-கவிஞர் இன்குலாபின் இழப்பு ஈடுசெய்யமுடியா பேரிழப்பு.

This entry was posted in Art & Life, தமிழ் and tagged . Bookmark the permalink.