பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக கூறி நோய்டா காவல்துறை 3 பேரை கைது – விடுவிக்கக் கோருகிறது தொழிற்சங்க அமைப்பு

கடந்த பொது வேலைநிறுத்தத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி 3 பேரை நோய்டா காவல்துறை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. 27 பிப்ரவரி மாலை அன்று நோய்டா காவல்துறை 12 பேர் உத்தரபிரதேசத்தின் காசியாபாத் பகுதிக்கு சென்று அங்குள்ள DTP கடை முதலாளி நவீன் பிரகாஷையும் அவரது ஊழியர் ராஜுவையும் கூட்டி சென்றுள்ளனர். மேலும் நவீன் மூலமாக அவரது தோழர் பிகுல் மஜ்தூர் தஸ்தாவின் சமூகப் போராளி தபீஷ் மைன்டோலாவையும் வர செய்து அவரையும் கைது செய்துள்ளனர். கூட்டி சென்ற 3 பேரையும் யாருக்கும் போன் செய்யவிடவில்லை மற்றும் அவர்களது போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டதாகத் தெரிகிறது. இரவு முழுவதும் நோய்டா செக்டர் 58 காவல்துறையில் வைக்கப்பட்டு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்துள்ளப்பட்டுள்ளதாக அவர்களது அமைப்பு தெரிவித்துள்ளது. முதல் தகவல் அறிவிக்கை தாக்கல் செய்யயாமல் தொழிலாளர்களை வன்முறைக்கு தூண்டியதாகவும், அதனால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மேல் பாயும் என காவல்துறை அவர்களை மிரட்டியுள்ளது. பிப்ரவரி 23 முதல் பிகுல் மஜ்தூர் தஸ்தா நோய்டாவில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தி விநியோகித்த துண்டுப்பிரச்சாரத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் பொது வேலை நிறுத்தத்தில் நடந்த வன்முறைகள் தொழிலாளர்களின் கோபத்தை பிரதிபலிப்பதாகவும், ஆனால் இந்த வன்முறைகள் பிரச்சனையை தீர்க்காது எனவும் தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து முதலாளித்துவத்தையும் அதனுடன் கைகோர்க்கும் அரசை மாற்றும் அரசியல் புரட்சியில் ஈடுபடவேண்டும் எனக் கோரியுள்ளது.
இதற்கு முன்னரே நோய்டா முதலாளிகளுடன் சேர்ந்து காவல்துறை பிகுல் மஜ்தூர் தஸ்தாவை குறியிட்டு வந்துள்ளது. முதலாளிகளின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் நோய்டா காவல்துறையின் குறிக்கோள் தபிஷாகும் அவருடன் கைது செய்யபட்டவர்கள் அவருடைய தோழர்கள். அவருக்கு சிம் கார்ட் வாங்கிகொடுத்ததால் அவர்களையும் காவல்துறை சட்டத்திற்கு புறம்பாக கண்காணித்து வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.தபீஷ் மற்றும் அவரது தோழர்களின் சட்டபுறம்பான கைதை கைவிட்டு அவர்களை விடுவிக்கக் கோரி நோய்டா காவல்துறையை வற்புறுத்துமாறு தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சமூகப் போராளிகள் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

This entry was posted in News, Uncategorized, Workers Struggles, தமிழ். Bookmark the permalink.