மாநேசாரில் இருந்து கன்யாகுமரி வரை பரவிய பதற்றமும், போராட்ட கொதிப்பும்! AITUC பேரணியின் கதை.

மாநேசார் மாருதி தொழிற்சாலையின் அதிர்ச்சி மிக்க சம்பவங்களின் பின்விளைவுகள் நாட்டின் ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு ரூபத்தில் அவதாரம் எடுத்து வருகின்றன. இவற்றில் ஒன்றாக நடைபெற்று நிறைவேரியது தான் AITUC-யின் திருச்சி மாநாடு. சென்னையை போன்ற கிழக்கு மாவட்டங்களில் இருந்தும், ஹோசூர் போன்ற மேற்கு மாவட்டங்களில் இருந்தும், கன்யாகுமரி போன்ற தெற்கு மாவட்டங்களில் இருந்தும், 10000  -கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  van-களில் பேரணியாக திருச்சி சென்று அடைந்துள்ளனர். August 5 – ஆம் தேதி நடைப்பெற்ற மாநாடு குறித்து AITUC – யை சேர்ந்த, அந்த அமைப்பில் நீண்ட காலம் பனி புரிந்து வருபவருமான ஸ்ரீனி (இவர் சென்னையில் தொழில் ரீதியாக கட்டிடங்களில் painting செய்பவர்) கூறியதாவது :

நான் : 10000 பேரா? நல்ல கூட்டமாச்சே!
ஸ்ரீனி : உண்மை தான். யாரும் நடக்க அல்ல cycle – இல் பயணிக்க தயாராக இல்லாட்டியும், ஏராளமான தின கூலி பணியாளர்களும், auto ஓட்டுனர்களும், தெரு வியாபாரிகளும், கட்டிட பணியாளர்களும், 10 சதவீதம் பொது போக்குவரத்து தொழிலாளர்களும் கலந்து கொண்டது கவனிக்க தக்கது!

நான் : மாநாட்டில் என்ன கோரிக்கைகள் வைத்தீர்கள் ? உங்கள் குறிக்கோள்கள் பூர்த்தி அடைந்தனவா?
ஸ்ரீனி : உலகயமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கலின் அடிப்படை ஒப்பந்தத்தில் இந்திய அரசு தலையாட்டி கையெழுத்து போட்டுள்ள அபாயகரமான உட் பிரிவினில் ஒன்று நான்காவது பிரிவான ” சங்கம் -இன்மை ” பற்றி விரிவாக பேசும் நிர்பந்தங்கள். இதை வன்மையாக எதிர்த்து நாங்கள் சில முக்கியமான நுணுக்கமான கோரிக்கைகளை வெளிப்படுத்தி உள்ளோம். ஜவுளி ஆலைகளில் வேலை செய்ய 16 வயது இளம் பெண்களை மூன்று வருட ஒப்பந்தத்தோடு மூன்று வேளை சாப்பாடு அளித்து மாதம் ஆயிரம் ருபாய் சம்பளம் கொடுத்து வேலைக்கு அழைத்து செல்கிறார்கள். சுமங்கலி திட்டம் என்ற பெயரில், மூன்று ஆண்டு காலத்திற்கு பின் பெரிய தொகையாக பணம் தந்து அவசர கல்யாணத்திற்கு வழி வகுக்கிறார்கள். இந்த அடக்குமுறையான திட்டத்தை உடனே கைவிட்டு ஒழித்து கட்டுமாறு கேட்டுள்ளோம்.

விலை உயர்வையும் வேலை இல்லா திண்டாட்டத்தையும் முடிவிற்கு கொண்டு வருமாறும் வற்புறுத்தி உள்ளோம்.
Provident Fund ஓய்வூதியம் குறைந்தபட்சம் 3000 ரூபாயாகவாவது இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்து கோரி உள்ளோம். பீடி உருட்டும் தொழிலாளர்கள் 20 ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் பெறுவதில்லை. இதில், ஆண் துணை இருக்க கூடாது, சொந்த வீடு இருக்க வேண்டும் அது இது என்று நிபந்தனைகள் வேற!

கையேடு தோட்டி வேலை செய்பவர்களுக்கு Rs.10000 – ஆவது மாத சம்பளமாக வாங்க உரிமை உண்டு என்றும், நலத்திட்ட குழுக்கள் VAO சான்ழிதழ்கள் மற்றும் பண அனுகூலங்களை கட்டாயமாக்க கூடாது என்றும் தீர்மானித்து குரல் எழுப்பி உள்ளோம். இது தவிர, Walmart போன்ற உலகை ஆக்கிரமிப்பு செய்து வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் ஒரு பொழுதும் வரி மானியங்கள் வழங்க கூடாது என்றும் கூறி உள்ளோம்.

நான் : AITUC இந்த பேரணியை இந்த சமயத்தில் ஏற்பாடு செய்ய ஏதேனும் நோக்கம் இருந்ததா?
ஸ்ரீனி : கண்டிப்பாக! தொழிலாளர் சமுதாயத்தில் சங்கங்களின் மீது பெரும் அவநம்பிக்கை எழுந்துள்ளது.. விவசாய இழப்பால் பெரும்பாலான மக்கள் இணைந்துள்ளனர்.. தொலைநோக்குடன் செயல் படும் திறனை வளர்த்துக்கொள்ள கூட எங்கள் சமுதாயத்திற்கு நடுத்தர வர்க்கத்தை போல வாய்ப்புகள் இல்லை.. குடிசை தீக்களும் பணியாளர் இறப்புகளும் கோர விபத்துகளும் சிங்கார சென்னைக்கான தொழிற்சாலைமயமாக்குதலும் அதிகரித்தே வருகின்றன.. அரசு ஊழியர்களே “எங்களை தவிர எல்லாவற்றையும் தனியார்மயமாக ஆக்குங்கள்” என்று கோஷம் போடுகின்றனர்.. மாநேசாரில் கூட சங்கத்தலைவர்கள் நிர்வாகிகளால் பேரம் பேச பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.. அரசு நல திட்டங்கள் போராட்ட எழிர்சியில் இருந்து திசை திருப்பும் நிலையில், எல்லா இடதுசாரி சங்கங்களும் கட்சிகளும் தங்கள் மதிப்பை இழந்துள்ளனர்.. எங்கள் தலைவர்கள் எல்லாம் கற்றுகொல்வதில் ஆர்வம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.. குறுகிய கூட்டமும் மனப்பான்மையும் நிலவி வருகிறது.. இறப்பு தவிர வேறு ஒன்றும் மக்களை இணைப்பதில்லை போல! .. இந்நிலையில், இப்படி ஒரு பேரணி மிக அவசியமாக எங்களுக்கு பட்டது.

நான் : பேரணியில் ஏதாவது ஏமாற்றங்கள் அல்லது குறைகள்…?
ஸ்ரீனி : தோட்டி வேலை செய்பவர்கள் முன்பெல்லாம் கலந்து கொண்டது போல் இப்போது கலந்துகொல்வதில்லை.. ஒற்றுமை என்பது போக்குவரத்து, காப்புறுதி, ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் வேறு ஊழியர்கள் மத்தியில் சுத்தமாக இல்லை.. நாங்கள் சென்ற ஊர்களில் எல்லாம் 40 வயதிற்கு மேல் பட்ட பெருசகளே எங்களை வரவேற்று கொன்றிருந்தனர்.. ஊர்களில் கைபேசி கடைகளும் ATM மையங்களுமே தலை விரித்து நின்றன.. இவ்விஷயங்கள் மிக வேதனை தருபவையே..

நான் : மேற்கொண்டு என்ன யோசனைகள் உள்ளன…?
ஸ்ரீனி : இயந்திரங்கள் தேசத்திற்கே முரணாக செயல் பட்டுக்கொண்டிருக்கின்றன.. தொழிற் பயிற்சி என்று கூறி ஜாதி ரீதியாக பசியையும் பட்னியையும் அசைக்க முடியாத அமைப்பாகவே மாற்றி விட்டார்கள்.. இதை எல்லாம் கண்டித்து September 4 – 6 – ஆம் தேதிகளில் தேசிய அளவிலான பொது அரை போராட்டம் நடக்க உள்ளது.. புது டெல்லியில் நடைப்பெரவிற்கும் மாநாட்டை ஒட்டி. இந்த முறையாவது எங்கள் சங்கங்களில் இணையதள ஆயுதங்களை தக்க பயன்படுத்திக்கொள்வார்கள் என்று நம்புகின்றோம்..!

This entry was posted in News, Uncategorized, தமிழ். Bookmark the permalink.