நலவாரியங்களா? விலை போன வாரியங்களா? – அமைப்புசாரா தொழிலாளர்கள் ஓயாமல் குரல் கொடுக்கின்றனர்!

பொது விசாரணை பரிந்துரைகளை உடனே அமல்படுத்தி தொழிற்சங்க பங்கேற்புடன் நலவாரியங்களை சீர்படுத்த அமைப்புசாரா தொழிலாளர்கள் சென்னையில் கடந்த 17 – ஆம் தேதி மெமோரியல் ஹால் அருகே ஆர்பாட்டம் நடத்தினர். அரசு தரப்பில் குறை தீர்ப்பாயம் அமைத்து அதில் கட்டாயம் பதிவு செய்து பணப்பயங்கள் மற்றும் வீட்டு வசதிகளை முழுமையான பாதுகாப்புடன் சீர் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. செப் 3 முதல் 17 வரை நாகர்கோவிலில் இருந்து சென்னை வரை தொடர் ஆர்ப்பாட்டங்கள் மாதம் முழுதும் பெரும் ஆதரவுடன் நடத்தப்பட்டன. 45 சங்கங்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பால் ஒருங்கிணைக்க பட்டுள்ளன. 

தமிழ்நாட்டில் 34 நலவாரியங்கள் அமைக்கப்பட்டும் நிதி ஆதாரங்கள் மற்றும் சுதந்திரமான தொழிற்சங்கங்களின் பங்களிப்பு தடுக்கப்பட்டு வருகிறது. பாரம்பரிய தொழில்கள் நசிந்தும் தனியார் மயமாக்குதலுக்கு பலி ஆகியும் கிராமத்து உழைப்பாளர்களும், துப்புரவு தொழிலாளர்களும், இடம் பெயரும் கட்டுமான வேலை செய்பவர்களும் பணி இட பாதுகாப்பு இன்றி விபத்து -இறப்புகள் அதிகரித்தும், நலவாரிய பதிவு மறுக்க படிகின்றது! வருவாய்த்துறை குறுக்கீட்டால் பல்லாண்டுகளாக பணப்பயங்கள் பலருக்கு கிடைக்காமல் இ.எஸ். ஐ மற்றும் பணி ஊதிய முறைப்படுத்தல் அமல்படுத்தப்படாமலே இருக்கின்றன. இக்கோரிக்கைகளை வைத்து 2008 ஆம் அண்டு முதல் போராடிவருகின்றனர் ஏறும் விலை வாசியினால் தத்தளிக்கும் ஏழை அமைப்புசாரா தொழிலாளர்கள். பொது விசாரணையின் பரிந்துரைகளின் படி நலவாரியங்களை சீர்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக கேட்கப்பட்டு வருகிறது. 

கட்டட, விவசாய, மன, வீட்டு வேலை, தையல், கை எம்ப்ரொஇடெர்ய, தெரு வியாபாரம், கூடை முடைதல், சுமை தூக்குதல், நெசவு, அரிசி ஆளை, மாவு மில், வனம், கைவினை, ஆட்டோ, ரிக்க்ஷா, உப்பளம், செயற்கை வைரம், சலவை, முடி திருத்துதல்ம் மணி மாலை, சமையல், மரம் ஏறுதல், நாட்டுப்புறக்கலை, நகை, மண்பாண்டம், கல் உடைத்தல், மின் சாதனை பொருட்கள் பழுது பார்த்தல், காலணி தைத்தல், ஓவியம், பீடி உருட்டுவது, துப்புரவு, குப்பையில் இருந்து பொருள் சேகரித்தல் மற்றும் இப்படி பல தொழில்களை செய்பவர்கள் சார்பாக வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் இவ்வாறு : 

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசு பட்ஜெட்டில் 3 சதம் ஒதுக்கீடு செய்து, உற்பத்தி விற்பனை செயல்பாடுகளில் லேவி முறை மூலம் தொழிலாளியின் சிறுபங்களிப்பை உறுதி செய்ய வேண்டும். கட்டாய பதிவு, புதுப்பித்தல், பணப்பயன் விண்ணப்பங்கள் தந்த ஒரு மாதத்திற்குள் அதன் பயன்களை தொழிற்சங்கங்கள் மூலம் அளிக்க வேண்டும். தேங்கி இருக்கும் பதிவு விண்ணப்பங்களை பதிவு செய்து, 2005 முதல் சிக்கி கொண்டிருக்கும் பணப்பயங்களை விண்ணப்பதாரர்களுக்கு சேர்க்க வேண்டும். இ. எஸ். ஐ மருத்துவ வசதி அமல்படுத்த வேண்டும் 

 மாநிலத்தின் உடல் உழைப்பு தொழிலாளர் சட்டம் 1982 இன் கீழ் உருவான நல்வாரியங்களிலும் ஆலோசனை குழுவிலும் 2 /3 தொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட பெண்களுக்கு 1 /3 பிரதிநிதித்துவம் தர வேண்டும். சுமை தூக்கும் மற்றும் உப்பள தொழிளார்களுக்கு தனி நலவாரியங்கள் அமைக்க வேண்டும். விவசாய தொழிலாளர் நலவாரியம், மீனவர் வாரியம், தூய்மை தொழிலாளர் வாரியங்களை தொழிலாளர் துறை மூலம் செயல் படுத்த வேண்டும். பழங்குடியினர் மற்றும் நரிக்குறவ வாரிய செயல்பாடுகளை மீண்டும் தொடங்கி ஊக்கப்படுத்த வேண்டும். நரிக்குறவர்களை பழங்குடியினராக அறிவிக்க வேண்டும்.  

புதிரைவண்ணார் நலவாரியத்தில் வாரிய பதிவு, சாதி சான்று உடனே தர வேண்டும். பதிவு புதிப்பித்தலுக்கு வங்கி கணக்கு, ச

This entry was posted in News, Uncategorized, தமிழ். Bookmark the permalink.