தொழிலாளர்கள் உழைப்பின் காவலனாக நாங்கள் தோழர் கதிரவனை சந்தித்த போது…

Comrade Kathiravan – third from left- at May Day 2016

ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பின் ரெனால்ட் நிசான் கிளை ஒருங்கிணைத்த 2016 மே தினக் கூட்டத்தில் நாங்கள் தோழர் கதிரவனை சந்தித்தோம். தொழிற்சங்கப் பொருளாளரான தோழர் கதிரவன் தொழிலாளர்கள் பொதுக் குழுக் கூட்டத்தில் ஆண்டறிக்கையை சமர்ப்பிக்க முன்வந்தார். ஆண்டறிக்கையை சமர்ப்பிக்கும் முன் தான் தன்னுடைய பொருளாளர் பதவியை ஒரு கணக்காளராக(அக்கவுன்டன்ட்) பார்க்கவில்லை என்றும் தொழிலாளர்களின் உழைப்பின் காவலனாக பார்ப்பதாக அவர் தொழிலாளர்களிடம்  குறிப்பிட்டார். கடினமான சூழ்நிலையிலும் தாங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தை கூட்டு நலனுக்காக தொழிலாளர்கள் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக அவர் கூறினார். தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் மேல் வைத்துள்ள பற்றுக்கு இப்பணம் ஒரு குறியீட்டாக அவர் கருதினார். இந்தப் பற்றே தொழிற்சங்கத்தின் உண்மையான சொத்தாகும் என்றும், ஒரு பொருளாளராக இச்சொத்தை காப்பதற்கு தான் அனைத்தையும் செய்ய கடமைப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Com Kathiravan with his Bike

அன்றாட தொழிற்சங்க வாழ்வில், எதற்காக தொழிற்சங்கப் பொறுப்பில் உள்ளோம் என்பது நாம் மறந்து போகின்றோம். தொழிற்சங்க நடவடிக்கையின் அடித்தளமான தோழமையுணர்ச்சியை நாம் கண்டு கொள்வதில்லை. ஒரு கால போக்கில் தொழிற்சங்கத்தின் கொள்கைகளை விட்டு விட்டு அதிகாரத்துவ நிர்வாகத்தன்மையில் நாம் மூழ்கி விடுகிறோம். தொழிற்சங்க நடவடிக்கை புரட்சிகர பாதையை விட்டு விட்டு நடைமுறை நிர்வாகத்தனத்தில் சென்று விடுகிறது. மீண்டும் புரட்சிகர நடவடிக்கைக்கு நம்மை கொண்டு செல்ல தோழர் கதிரவன் போன்ற தோழர்களின் வார்த்தைகளே நமக்கு வழிகாட்டிகள்.
பணியில் இருந்து திரும்பி கொண்டிருந்த போது சாலை விபத்தில் ஒன்றில் படுகாயமுற்றி 2017 ஆகஸ்ட் 9 அன்று தோழர் கதிரவன் நம்மை விட்டு பிரிந்தார். நிர்வாகம் தொழிற்சங்கம் மீது கடுமையாக தாக்குதல் நடத்திய சமயத்தில் தோழர் கதிரவன் தொழிற்சங்க பொருளாளராக பொறுப்பெடுத்தார். தொழிற்சங்க பணிகளில் ஈடுபடுவோர்களை நிர்வாகம் நிரந்தர மற்றும் தற்காலிக பணிநீக்கம் செய்து வந்த போது தோழர் கதிரவன் தன்னுடைய தோழர் தொழிலாளர்களுக்காக இப்பொறுப்பை முன்வந்து ஏற்றார். தன்னுடைய பதவியை செவ்வனே அவர் செய்தார். அவர் ஒரு பொருள்களுக்கு மட்டும் காவலனாக அல்ல, ரெனால்ட் நிசான் தொழிலாளர்களுக்கு அளப்பரியாத புதையலாக விளங்கினார். ரெனால்ட் நிசான் தொழிலாளர்களின் ஈடுகட்ட முடியாத இழப்பிற்கும், அவருடைய குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
This entry was posted in Uncategorized, Working Class Vision, தமிழ் and tagged , . Bookmark the permalink.