இருங்காட்டுக்கோட்டையில் Hyundai -கு ஒரு இரும்புக்கோட்டை

HMIEU கு இம்முறை வேலை நிறுத்த போராட்டத்தின் வாபஸ் பேச்சுவார்த்தையில் கிடைத்த அங்கீகாரம் ஹ்யூண்டாய் நிர்வாகத்தின் சூக்ஷமமான ஏமாற்று வேளைகளில் இருந்து மிகவும் மாறுபட்டது அல்ல. பெரும்பான்மை வாக்களிப்பு அடிப்படையில் சங்கம் அமைப்பதற்கான உரிமைகள் கூட மறுக்கப்பட்டு வரும் நிலையில், ஊதிய உயர்வின் சிறு வெற்றி மேலும் எழுச்சியை தூண்டக்கூடியதே. 18 நபர்கள் suspend செய்யப்பட்டு 20 ஊழியர்கள் மீது கண்டன நடவடிக்கை எடுக்கப்படும், மற்றும் வேலை நிறுத்தம் செய்யப்பட்ட நாட்களுக்கு ஊதியம் கழிக்கப்படும் என்ற வருத்தங்களுடன் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பி ஒரு மாதம் கடந்து விட்டது. “காவல்துறையை நமக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்ள வேண்டும்” என்று HMIEU கூறி, அனைத்து தொழிற்சங்கங்களின் ஆதரவும் (Detroit -இல் இருந்து கூட) உள்ளது என்று நினைவுறுத்தினாலும், “கைது செய்யப்பட்டு நொறுக்கபபடுவோம்” என்ற அச்சத்திலேயே உண்ணாவிரத போராட்டங்கள் நடக்கின்றன. இம்முறை மாற்றம் அல்ல, எம்முறையும் அமைதியாக போராடுவதை காவல் துறை உதவியுடன் நிர்வாகம் கடுமையாக தடுத்துள்ளது.

1998 இல் இருந்து, இருங்காட்டுக்கோட்டை தொழிற்சாலையில் மேல்பார்வையாலர்களின் எண்ணிக்கை மற்றும் விலைவாசி உயர்ந்துள்ள அளவிற்கு பொருத்தமாக நிரந்தர பணியாளர்களின் (H1 , H2 ) எண்ணிக்கையோ அவர்களின் மாத சம்பளம், போனஸ் அல்லது குடியிருப்பு நிதி சலுகை போன்ற எந்த தேவைகளோ நிரவேற்றப்படுவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. நிர்வாக லாபத்தில் இருந்து ௦.25 % ஆவது தொழிலாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட நிர்வாக சார்பில் இருந்து எதிர்ப்பு குறையவில்லை. மின்சாரம் , தண்ணீர் என உற்பத்தி வசதிகளை பொதுமக்கள் கனவு மற்றுமே காணக்கூடிய அடிமட்ட விலைகளில் அரசாங்கம் அள்ளிக்குடுத்தும், வாழ்க்கைத்தர உயர்வு என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும் நிலையில் இல்லை. நிர்வாகத்திற்கு தங்கள் நிலத்தை விற்ற விவசாயிகள் கழிப்பறை சுத்தம் செய்யும் வேலை கிடைத்தது தவிர வேறு எந்த பயனும் பெறாமல் இருப்பதே நல்ல உதாரணம்.

வருடத்திற்கு i10 , i20 , santro, accent என வகை வகையாக 6,30000 கார்கள் தயாராகின்றன. இதில் starting  trouble உள்ள டொக்கு கார்கள் தாராளமனதுடன் “இலவசமாக” பணியாளர்கள் மேல் திணிக்கப்பட்டு விளம்பரம் செய்யப்படுகிறது. 30000 கார்களுக்கு 1500  நிரந்தர பணியாளர்கள் என்ற கணக்கு இருந்தாலும், தற்போது ஒரு மேல்பார்வையாளருக்கு கீழ் 15 – 20 தொழிலாளர்கள் என்று மொத்தம் 1200 பெயரே நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர். 600,000 கார்கள் apprentice களின் கிட்டத்தட்ட இலவச உழைப்பிலேயே  உருவாகின்றன. மேல் தர ஊழியர்களை மற்றும் வேலை உயர்வு செய்து, மற்றவர்கள் செய்யும் வேலையே ஒரே compound குள்ளேயே  Mobis , Vaatz என outsource செய்து, யாரையுமே நிரந்தரமாக்காதது தான் ஹ்யுண்டாய் -இன் லாப அடக்குமுறை தந்திரமாக கூறப்படுகிறது. 2008 இல் 2000 பேர் ஒரு இரவில் வேலை நீக்கம் செய்யப்பட்டது இல்லாமல், பல வருடங்களாக புதிதாய் H3 – H5 கிரேடுகளில் எவருமே பனி அமர்த்தப்படாமல் இருப்பது உள்-வேலை-மாற்றம் தொடர்ந்து நடப்பதற்கு ஆதாரமாய் தெரிகிறது. RTI கோப்பைகள் இது சம்பந்தமாக ஏராளமான தகவல்கள் அளித்துள்ளன. கடந்த 2008 போராட்டத்தன்று 35 பேர் புழலில் சிறை அடைக்கப்பட்டு, 14 பணியாளர்கள் மீண்டும் வேலையில் சேர்க்கப்பட்டனர். பயிற்சி காலம் விதிமுறைகள் அற்று நீடிக்கப்பட்டு, நிரந்தரமாக்கப்பட வேண்டிய தருணத்தில் தொழிலாளர்கள் (450 கும் மேல் ) நிராகரிக்கப்படுகிறார்கள். அதிகாரிகளுக்கு சாதகமாக இயங்கி வரும் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சங்கத்திற்கு ஆதரவாக இல்லாத பணியாளர்கள் நிராகரிக்கப்படுவது கிட்டத்தட்ட நிச்சயம். முன்கூடியே ஊதிய ஒப்பந்தத்திற்கு சம்மதம் தர வற்புறுத்தி எந்த சங்கத்திலும் பங்கேற்காத பணியாளர்களுக்கும் தங்கள் வீட்டிற்கே சென்று உணர்வுபூர்வமான மிரட்டல்கள் விடுவதில் கைதேர்ந்து வருகிறதாம் நிர்வாகம்.

“முதலாளி எலும்பை இகழ்ச்சியாய் நீட்ட, அதை நாய் ஒன்று பசியுடனும் கீழ்ப்படிவுடனும் ஆவேசமாய் பாய்ந்து கவ்வப்பார்க்கிறது ” – இந்த இனவெறி மிக்க அடிமைத்தனத்தை சித்தரிக்கும் படமே hyundai workshop இன் வழிநடத்தும் தத்துவம். HR அதிகாரிகள் workshop ஊழியர்களோடு அலுவலக பேருந்தில் பயணிக்க கூடாது. ஒரு குட்டி south korea -வை இருக்குமதி செய்து காலாச்சார உரிமைகளையும் பறித்து வருகிறார்கள் என்று தொழிலாளர்கள் அஞ்சுகிறார்கள். உள்ளே இருக்கும் 100 கொரியர்கள் ” இந்திய அரசின் சட்டங்கள் எங்களுக்கு ஒத்து வராது, அவை இங்கு செல்லாது ” என தெளிவாக இருக்கிறார்களாம். 30 ஆண்டு “விசவாச” வேர்வை (ரத்தம்?) சிந்திய சேவைக்குப்பின் கைய்யில் மிஞ்சுவது ரூ. 28000. ஒரு station இல் 20 வினாடிகள் என்று இருந்தது போய் இப்போது 80 வினாடிகளுக்கான வேலை ஆகிவிட்டது. apprentice களுக்கான வேலை இன்னும் 40 வினாடிகள் அதிகம். எந்த மாற்றத்திற்கும் இந்த கிரேடு ஊழியர்கள் தயாராக இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் precision-உம் உணர்ச்சியற்ற இயக்கு திறனும் கட்டாயங்கள். 4 பேர் ஒரு station -இல் நிற்க கூட இடம் இல்லாமல் இருந்தாலும், எவரும் நகரக்கூடாது; அது பொம்மலாட்ட ரோபோட்-களுக்கான நடன வடிவமைப்பு.  6 நாட்கள் விடுமுறை எடுத்தால் ஆண்டுக்கான போனஸ் (ரூ. 6000) காலி. collar -ஆல் இழுக்கப்பட்டு சட்டை கிழிந்தாலோ, காலால் உதைக்கப்பட்டாலோ குரல் எழுப்ப அனுமதி இல்லை. ரூ.8000 கான HDFC உடல்நல காப்பீட்டு தொகையை கூட தெற்கு கொரிய கலாச்சாரத்தின் அடிப்படையில் (?) தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கோ பெற்றோர்களுக்கோ பயன் படுத்தக்கூடாது என நிர்பந்திக்கப்பட்டுள்ளது. லாபத்தில் ௦.64 % தொழிலாளர் நலனுக்காக என்பது காகிதத்தோடு நின்றுவிட்டது. மறைமுகமாய் ஒரு நோட்டீஸ் பலகையில் suspension நோட்டீஸ் ஒட்டப்பட்டு எந்தவித எச்சரிக்கையும் இல்லாமல் வீட்டிற்கு அனுப்பப்படுவதே நடைமுறை. ஒரு சிறிய அளவு காருக்கு நிர்வாகம் ஒரு லட்சம் ரூபாய் லாபம் பார்ப்பதாய் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இது, சேதம் அடைந்த scrap உலோகத்தை விற்று குவிக்கும் லாபத்தை தவிர்த்து. ஆனால், அரசிடம் வெறும் ரூ.12000 கான returns காற்றப்படுகின்றது. PDF = ரூ. 1750 , welfare increment = 10,800 , salary  hike = ரூ. 900 என தேங்கி நிற்கும் சேமிப்புகளின் மீதான முழு குடும்பங்களின் வாழ்வாதாரம் நம்பி இருக்கிறது என்பது பயமுறுத்துகிறது.

சரி, இவ்வளவு “சிக்கனமாக” நடத்தப்படும் factory -இன் விற்பனை பொருட்கள் customer -களுக்கு அளிக்கும் நன்மை தான் என்ன? – AQL எனப்படும் Arbitrary Quality Level , அதாவது, தனிப்பட்ட supervisor -களின் இஷ்டப்படி OK செய்யப்படும் வாகன தரம். எதிர் பார்த்தது தானே?

 

 

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, Uncategorized, தமிழ் and tagged , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.