தேசிய அவமானம்

(இந்த கட்டுரை முதலில் இளைஞர் முழக்கத்தில் வெளியிடப்பட்டு சிறு திருத்தங்களுடன் மறுவெளியிடப்படுகிறது.)

தீபா

ஆகஸ்ட் 23, நடு இரவில தர்மபுரி மாவட்டம் தோப்பூர் அருகில் பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை அகற்ற சென்ற மூன்று  conservency தொழிலாளர்கள் விசவாயு தாக்கி மரணம் அடைத்தனர். இந்த செய்தியை படித்த பலர் (நாமும் இதில் அடங்கும்) உச்சுகொட்டிவிட்டு ஒரு சில நாட்களில் இந்த நிகழ்வை மறந்து விடுவோம். இதைப்போல் எப்போதாவது ஒரு சம்பவம் நடந்தால் நினைவில் இருக்குமோ என்னவோ? வாரம் ஒன்றுக்கும் மேல் பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய சென்ற தொழிலாளி மரணம்என்ற செய்தி நாம் வாழும் சமுகத்தில் தினசரி நிகழ்வுகளில் ஒன்று என்று என்னும் போது மனிதனாய் பிறந்திடவே நல்ல மாதவம் செய்திடவேண்டும்மம்மாஎன்ற தமிழ்பாடலை எண்ணி நகைப்புதான் வருகின்றது.

Manual Scavenging என்றதோர் தேசிய அவமானம்:

Manual Scavenging (துப்புரவு / கையால் மலம் அல்லும் தொழில்) என்பது பலவகையான வேலையைகுறிக்கும். உலர்வு கழிவறையை சுத்தம் செய்வது (தண்ணீர் பயன்படுத்தாத வகையில் மேடை கட்டபட்டிருக்கும்), பாதாள சாக்கடை சுத்தம் செய்வது, திறந்த வெளி கழிவறைகள், ரயில்வே தண்டவாளம் சுத்தம் செய்வது, போன்ற இன்னும் பலவகைகள் உள்ளது. இது அனைத்துமே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனித மலத்தை மனிதர்களே சுத்தம் செய்யும் வேலையாகும். B R அம்பேத்கர் Manual Scavenging பற்றி கூரும்போது இந்தியாவில் ஒருவர் தான் செய்யும் வேலை காரணமாக துப்புரவு தொழிலாளி ஆவது இல்லை, மாறாக அவர்கள் பிறந்த ஜாதியின் காரணமாகவே துப்புரவு தொழிலாளி ஆகிறாள்என்று கூறினார். ஆம், இந்தியாவில் துப்புரவு தொழிலாளிஎன்றால் அதற்கு மறு அர்த்தம் தலித்‘ (ஒடுக்கபட்ட ஜாதியினர்) என்பதுதான்.

ஜாதிய சமூக கட்டமைப்பின் காரணமாகவே இவர்கள் இந்த இழிவு தொழிலை செய்கிறார்கள். இதனை வெறும் மனித உரிமை மீறலாக மட்டுமே பார்க்க முடியாது. இது ஒரு சாமுகம் மனிதத்தன்மையற்று இருப்பதற்கான எடுத்துகாட்டு. இது ஒரு சாமுக வெக்கக்கேடு! துப்புரவுதொழில் தெய்வீகமானதுஎன்ற காந்திய பார்வையோடு எந்த ஒரு தொழிலாளியும் இந்த வேலையை செய்வதில்லை. சமூகம் குறிப்பிட்ட ஜாதியினரை கட்டாயபடுத்தியத்தின் வரலாற்று காரணங்களும், இதன் விளைவாக மாற்று தொழில் தெரியாத காரணத்தினாலேயே இவர்கள் இந்த வேலையை தேர்தெடுக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

புள்ளி விவரங்களில் நாம் அறிவது என்ன?

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி (census 2011) இந்தியாவில் 8 லட்சம் உளர் கழிவறைகள் உள்ளது என்றும் இது மனிதர்களால் (தலித் மக்கள் குறிப்பகாக தலித் பெண்கள்) மலங்கள் சுத்தம் செய்யப்பட்டுவருகிறது என்று கூறுகிறது. இதில் 73 % கிராமபுரங்களிலும் 27 % நகர்ப்புறங்களிலும் உள்ளது. இதுமட்டும் இல்லாமல் 13 லட்சம் கழிவறைகளில் மனித மலத்தை திறந்த வெளிசாக்கடையில் flush செய்யப்படுகிறது. இதையும் சுத்தம் செய்வது மனிதர்களே (தலித்மக்கள்). இதை தவிர மேலும் 5 லட்சம் கழிப்பறைகள் விலங்குகளால் (தின்பதன் மூலமாக) சுத்தம் செய்வதாக தகவல் உள்ளது. ஆனால் நம் இந்திய சமுகத்தின் ஜாதிய அழுத்தத்தின் எதிரொலி இந்த தகவலை பலகோணங்களில் கேள்விக்குள்ளாக செய்கிறது.

அதுமட்டும் அல்லது மத்தியபிரதேசம், குஜராத், ஆந்திர, சத்திஸ்கர் போன்ற இன்னும் பல மாநிலங்களில் குறித்த அளவிலேயே உலர்ந்த கழிப்பறைகள் உள்ளதாக எண்ணிகைகள் கூருகின்றது. இது நம்பும் படியாக இல்லை என்றும், இங்கு Manual Scavenging சாதாரணமாக நிகழ்வுகளில் ஒன்று என்றும் பல அமைப்புகள் தங்கள் அறிக்கையில் கூருகின்றனர் (குறிப்பாக கரிம அபியான் இயக்கம்).

 

டெல்லியில் மட்டும் 583 கழிவறைகளை மனிதர்கள் (தலித்மக்கள்) சுத்தம்செய்கிறார்கள். ஆம் நம் இந்தியா மிளிர்கிறது

 

தமிழ்நாட்டில் என்ன நிலை?

இந்தியாவில் பல மாநிலங்களில் உலர் கழிவறைகள் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இருக்க வாய்ப்பு இருக்காது என்று எண்ணலாம். ஆனால் அப்படி ஒரு பெருமையை பீற்றிக் கொள்ள நாம் இன்னும் தகுதி அடையவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் 2.03 லட்சம் கழிவறைகள் மனிதர்காளால் சுத்தம் செய்யபடுகிற அவலம் நீடித்து கொண்டிருக்கிறது. இதில் 1.49 லட்சம் கழிவறைகள் திறந்த வெளிசாக்கடையில் flush செய்யபடுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் 27,659 உலர்கழிவறைகளில் மனிதமலத்தை மனிதர்கள் எடுத்து சுத்தம் செய்யும் முறை உள்ளது. தமிழகத்திலேயே அதிகபடியாக திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் தான் அதிகபடியாக உலர்கழிவறைகள் உள்ளது.

திருவள்ளூர் -3144 கழிவறைகள் (மனித மலம் மனிதர்களே அல்லும் முறை)

-2687 கழிவறைகள் (விலங்குகளால்)

காஞ்சிபுரம் – 2108 கழிவறைகள் (மனித மலம் மனிதர்களே அல்லும் முறை)

-1882 கழிவறைகள் (விலங்குகளால்)

சென்னை -463 கழிவறைகள் (மனித மலம் மனிதர்களே அல்லும் முறை)

-573 கழிவறைகள் (விலங்குகளால்).

சென்னையில் குறிப்பாக ஆவடி, அம்பத்தூர் எஸ்டேட் மற்றும் பூவிருதமல்லி போன்ற இடங்களில் உலர் கழிவறைகள் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பயன்படுத்தி வருகின்றனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தாம்பரம், செங்கல்பட்டு, Chrompet மற்றும் பல்லாவரம் போன்ற இடங்களில் இன்றளவும் மனித மலத்தை மனிதர்களே (தலித்மக்கள்) அகற்றும் வழக்கம் இருந்து வருகிறது என்று பல பத்திரிகைகளின் விசாரணை அறிக்கை (investigative report) கூறுகின்றது.

இதனை எதிர்க்க சட்டம் இல்லையா?

தலித் மக்களின் மேன்பாட்டுக்காக உள்ள சில சட்டங்களின் உட்பிரிவுகளில் Manual Scavenging பற்றி குறைபாடு உள்ளது. விடுதலை அடைந்து 46 வருடங்களிற்கு பிறகே 1993 ஆம் ஆண்டு துப்புரவு தொழிலாளர்களை வேலைகளில் ஈடுபடுத்துவது மற்றும் உலர் கழிவறைகள் கட்டுவதற்கான தடை சட்டம்இயற்றபட்டது. ஆனாலும் இந்த சட்டம் இன்று வரையிலும் பல மாநிலங்களில் அமல்படுத்தபடவில்லை.

குறிப்பு: முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த சட்டத்தின் கீழ் இன்று வரையிலும் ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. மேலே உள்ள புள்ளி விவரங்களை நினைவுபடுத்திகொள்ளவும். இதுதான் இந்த சட்டத்தின் தனித்தன்மை

ஆகவே இந்த ஒரே சட்டம்இருந்தும் என்ன பயம் என்பதை இந்த தகவல்களில் இருந்து புரியம். இதைவிட ஒரு சட்டம் கேலிகூடாவதை பார்த்ததுண்டா? இதுதான் இந்த சட்டத்தின் வெற்றி.

உலகின் மிக பெரிய திறந்த வெளிகழிப்பறை:

இந்த பொது அறிவு வினாவிற்கான விடையை தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த பெருமைக்கு சொந்தகாரர்கள் இந்தியர்களே. இதனை பெற்று தந்த பெருமை நம் ரயில்வே துறையையே சாரும். நாம் நம்மை போல் உள்ள சகமனிதர்களை எப்படி மதிக்கிறோம்என்பதை அவரவர் வசிக்கும் மாவட்டங்களில் உள்ள ரயில்வே நிலையத்திற்கு ஒரு முறையாவது அதிகாலை 6 மணிக்கு சென்று பார்த்தால் தெரியும். நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் மக்களிற்கு மேல் ரயில்களில் பயணிக்கிறார்கள். இதற்கு மேல் நம் லட்சணத்தை விளக்கவேண்டுமா?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டும் 150 பேர்களுக்கும் அதிகமாக Scavenger வேலை செய்கிறார்கள். இதில் வேலை செய்யும் அனைவரும் பெண்களே (ஆண்கள் இரண்டு மூன்று பேருக்கு மேல் இல்லை). இதை போலத்தான் நம் நாட்டில் எல்லா ரயில் நிலையங்களிலும் உள்ள எதார்த்தம். இவர்களிற்கு நாள் ஒன்றுக்கு 130 ருபாய் கூலி (8 மணி நேரம்).ஓவர் டைம் செய்தால் இரட்டை சம்பளம் கிடையாது. வருடத்தில் ஒரு நாள் கூட விடுமுறை இல்லை. ஆகஸ்ட் 15 மற்றும் மே 1 ஆம் தேதிகளிலும் இவர்கள் வேலை செய்தனர் என்பதை யார் அறிவார்?

இந்தியாவில் 96% Manual Scavengers தலித்பெண்களே. இவர்கள் அதிகபடியாக உலர் கழிவறைகளை சுத்தம் செய்பவர்களாக உள்ளனர்.!

இரவு முழுவதும் வேலை செய்து விட்டு குழந்தையின் படிப்பு செலவிற்கு பணம் வேண்டுமே என்ற எண்ணம் வந்தவுடன், அடுத்த shift டையும் செய்ய ஒத்துக்கொண்டுசிவந்த கண்களுடன் நடைபிணமாக சோர்ந்த ஒரு பெண் உருவம் நம்மை தாண்டி மெதுவாக நகர்வதை நாம் இதுவரை உணர்ந்திருக்க மாட்டோம்!”

எது Manual Scavenging என்று அறியாத இந்திய அரசு?????

பலவகையான Manual Scavenging வேலைகள் இருந்தாலும் 1993 ஆம் சட்டம் உட்பிரிவு 2 (j )வின்படி மனிதமலத்தை நேரடியாக தூக்கி அகற்றும் வேலையை மட்டுமே Manual Scavenging என்கிறது இந்திய அரசு. இது மிகவும் குறுகிய பார்வையுடைய வரையறையாகும். பாதாள சாக்கடை, திறந்த வெளி சாக்கடை, செப்டிக் டேங்க், திறந்த வெளி கழிப்பறை, ரயில்வே தண்டவாளம் சுத்தம் செய்வது போன்ற இன்னும் பல மனித தன்மையற்ற (மனித மலம் சார்த்து சுத்தம் செய்யும் வேலைகள்) வேலைகள் செய்பவர்களை 1993 ஆம் சட்டம் Manual Scavengers என்று ஏற்று கொள்ளப்படவில்லை. இவ்வேலைகளால் ஏற்படும் மரணங்கள், பல கொடிய நோய்களின் பின் விளைவிர்க்கு எந்த ஒரு அரசு நிவாரணமும் இவர்களுக்கு இதனால் கிடைக்காது.

பல நாட்கள் இழிவையில் இருக்ககூடிய The Prohibition of Employment as Manual Sacvenger and the Rehabilitation Bill 2012 தில் இவர்களையும் இணைக்க பல அமைப்புகள் போராடிவருகின்றனர் (சபாய்கரம்சாரி அந்தோலன் (SKA), TNUEF, அருந்ததியர் மற்றும் பல தலித் அமைப்புகள் இணைத்து). இதனால் மறுவாழ்வு சார்ந்த விசயங்களிற்கு இவர்கள் பயன் அடைவார்கள்.

குறிப்பு: ரயில்வே துறையில் Manual Scavenging வேலையை தடை செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் அமைப்பு மனு தாக்கல் செய்தபோது, உச்சநீதிமன்றம் Manual Scavenging என்றால் என்ன என்று விளக்கம் கேட்டுள்ளது. அது மட்டும் அல்ல ரயில்வே சார்பில் எதிர்மனு தாக்கல் செய்த ரயில்வே துறை இவ்வகையான வேலைகளில் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தபடுவது கிடையாது என்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உயர் நீதி மன்ற தீர்ப்பு: கண்ணாம்பூச்சி விளையாட்டு:

2008 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதி மன்றம் தனி நபர் (பாடம் நாராயணன் அவர்கள்) தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் பாதாள சாக்கடை வேலையை தடை செய்து உத்தரவிட்டது. ஆனால் அதன் பின்னர் இன்றுவரை நூற்றுகணக்கான மரணங்கள் நிகழ்ந்துவிட்டது என்பதுதான் உண்மை. இதை நாடே அறியும் (அரசுக்கு மட்டும் தெரியாது!!!). ஆகஸ்ட் 23 தோப்பூரில் மூன்று தொழிலாளர்கள் மரணம் அடைந்தது இதன் தொடர்ச்சியே. தனியார் ஒப்பந்த ஊழியர்கள் மட்டும் அல்லாது அரசு மாநகராட்சி, Municipality மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களே இன்று வரையில் இவ்வேலையில் இவர்களை அமர்த்தியுள்ளது.

அப்படியென்றால் இதற்கு என்னதான் தீர்வு?

Manual Scavenging என்ற ஒரு தொழிலே இருக்ககூடாது. இதைதடை செய்யவேண்டும் என்பதுதான் பல முற்போக்கு அமைப்புகளின் கோரிக்கை.ஆனால் தடை சட்டம் என்பது இவர்களின் மறுவாழ்விற்கானதோடு இணைத்ததாக இருக்கவேண்டும்.

# மாற்று வேலை, அதற்கான தொழிற்பயிற்சி, கூடவே நஷ்ட ஈடும் அரசு வழங்க வேண்டும்.

# நூற்றாண்டு காலமாக இந்த சமுகம் ஒரு தரப்பு மக்களை (தலித் மக்களை குறிப்பாக பெண்களை) இக்கொடுமைக்கு உள்ளாகியுள்ளது. இந்திய அரசு இந்த மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

Manual Scavenging என்ற இந்த தேச அவமானத்தில் இருந்து இந்தியா மீளுமா? தலித் மக்களின் மனித உரிமை நிலை நாட்ட பெறுமா? ஆம், நம்மை போல் உள்ள அமைப்புகள் போராடினால்! எல்லோருக்கும் வேலை வேண்டும் என்று கோரும் நாம் “Manual Scavenging “என்ற வேலை வேண்டாம், தடை செய் என்று கோர வேண்டும்.

This entry was posted in Analysis & Opinions, Manual Scavenging, Unorganised sector, Women Workers, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.