கண்ணுக்குத் தெரியாத உடல்கள், கண்ணுக்குத் தெரியாத உழைப்பு

சில நாட்கள் முன்பு பி. சாய்நாத்தின் வலைமனை புகைப்படக் கட்காட்சியைப் பார்த்தேன். இந்தியா கிராமப்புரம் பற்றிய ஆவணப் பகுதியில் கண்ணுக்குத் தெரியும் வேலை, கண்ணுக்குத் தெரியாத பெண்கள் Visible work, Invisible women’) என்று அதற்குத் தலைப்பிடப்பட்டிருந்தது. சாய்நாத்தின் படங்கள் கருப்பு வெள்ளையில் ஆனவை. கிராமப்புர இந்தியாவின் நெடுக்கிலும், பெண்கள்இளம் பெண்கள், வயதானப் பெண்கள்என பெண்கள் செய்யும் எண்ணற்ற வேலைகளை அப்படங்கள் காட்டின. சுட்டெரிக்கும் சூரியனின் கீழே வளைந்த முதுகு வலிக்க வலிக்கபண்ணையார் (எப்போதும் அது ஆண்தான்) பார்த்துக்கொண்டிருக்கநாற்று நடுவதாக இருக்கலாம், தெண்டு இலைகளை வனத்திற்குச் சென்று சேகரிப்பதாக இருக்கலாம், அல்லது சுமக்க முடியாத விறகுச் சுமையைத் தலைச் சுமையாகச் சுமப்பதாக இருக்கலாம், அல்லது கொதிக்கும் கரும்புச் சாற்றை கிளறிவிடுவதாக இருக்கலாம், அல்லது, வீட்டிற்குத் திரும்பும் எருமையின் பின்னே நடந்துவருவதாக இருக்கலாம்ஒவ்வொரு படமும் இந்திய கிராமப்புர பெண்கள் மேற்கொள்ளும் வேலையின் பன்முகத் தன்மையையும், அவர்களின் பெரும் எண்ணிக்கையையும் காட்டுகின்றன. சாய்நாத் தன் புகைப்படத் தொகுப்புக்குக் கண்ணுக்குத் தெரியும்வேலை, ‘கண்ணுக்குத்தெரியாத பெண் என்று தலைப்பிட்டிருந்தாலும் அந்தத் தலைப்பு பற்றி அவர் ஒரு படத்தைத் தவிர மற்ற எதிலும் விளக்கவில்லை. அந்தப் படத்தில் மிகப் பெரும் வைக்கோல் கட்டு ஒன்றை ஒரு பெண் தலையில் சுமந்தபடி நெட்டுக்குத்தலான ஒரு குன்றின் மேல் நோக்கி நடந்துகொண்டிருக்கிறாள். அவள் செய்யும் வேலை கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால், ஒரு நபர் என்ற வகையில் அவளின் அடையாளம் தெரியவில்லை. இருந்தபோதும், பெண்ணின் வேலை கண்ணுக்குத் தெரியாமல் போவது பற்றி சாய்நாத்தின் அதியற்புதமான புகைப்படக் கட்டுரை பேசவில்லை. ஒவ்வொரு நாளும் பெண் செய்யும் வேலை எவ்வாறு உணரப்படுகிறது, அதன்பின் இல்லாது போகிறது, அதன் காரணமாக, பெண்களின் உடல், அவர்களின் உழைப்பு, அவர்கள் செய்யும் வேலை கண்ணுக்குத் தெரியாமல் போகிறது, மதிப்பிழக்கிறது, கூலி இல்லாததாக ஆகிப் போகிறது என்பது பற்றி அது பேசவில்லை.

கடந்த மாதம் உலக வங்கி இந்திய பெண் உழைப்பாளர்கள் எண்ணிக்கையில் ஆபத்தான சரிவுப் போக்கு பற்றிய மறு மதிப்பீடுPrecarious Drop Reassessing Patterns of Female Labor Force Participation in India) என்ற கொள்கை அறிக்கையை வெளியிட்டது. 2004-05 முதல் 2011-12 காலத்தில் உழைப்பவர்கள் மத்தியில் பெண்களின் எண்ணிக்கை 19.6 மில்லியன் குறைந்ததுஎன்றும், “அந்தக் குறைவில் 53 சதம் கிராமப்புர இந்தியாவில் 15 முதல் 24 வயதுள்ள பெண்கள் மத்தியில் ஏற்பட்டதுஎன்றும் அந்தக் கொள்கை அறிக்கை குறிப்பிடுகிறது. தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு (National Sample Survey Organization -NSSO) அளித்த 1993-94 to 2011-12 காலத்திய புள்ளிவிவரங்களையும், மக்கள் தொகை கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்களையும் பயன்படுத்தி 2004-05 முதல் 2009-10 என்ற குறுகிய காலகட்டத்தில் 19.13 மில்லியன் பெண் தொழிலாளர்கள் உழைப்பாளர் படையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர், என்று அந்த அறிக்கை சொல்கிறது. ஒரு நபர் குறிப்பிட்ட காலகட்டத்தில் பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுகிறாரா அல்லது பொருளாதாரமற்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறாரா என்பதை NSSO புள்ளிவிவரத்தில் செயல்பாட்டின் நிலை(‘activity status’) இனம் காட்டுகிறது என்பதைக் கட்டுரையின் ஆசிரியர் குறிப்பிடுகிறார். செயல்பாட்டின் நிலை மூன்று வகைகளில் பிரித்துக் காட்டப்படுகிறது. (1) வேலை செய்தல் அல்லது பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுவது (வேலை) ; (2) பொருளாதார செயல்பாட்டில் ஈடுபடாத நிலை, ஆனால், வேலை கிடைக்குமா என்று தேடுவது அல்லது வேலைக் கிடைக்குமென்றால் அதைச் செய்ய தயாராக இருப்பது; (3) பொருளாதார நடவடிக்கையில் அல்லது வேலையில் ஈடுபடுவதில்லை, வேலை செய்ய கிடைக்கும் நிலையில் இல்லை. இந்த மூன்று வகையினங்களின் உள்ளே மேலும் மூன்று தட்டுகள் இருக்கின்றன. ஒருவர் வேலை செய்பவராக அல்லது வேலை செய்யாதவராகக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் அவர் குறைந்தது எத்தனை நாள் வேலை செய்திருக்க என்ற அடிப்படையில் அந்தத் தட்டுகள் அமைகின்றன. இந்த வகையினங்கள் அல்லது, ‘வேலை’ அல்லது ‘வேலையல்லாதது’ என்று எவை கருதப்படுகின்றன என்பது மிகுந்த பிரச்சனைக்குரிய ஒன்று. சாய்நாத்தின் புகைப்படங்கள் காட்டுவது போல, பெண்கள் வேலை செய்யவில்லை அல்லது உழைக்கும் படையிலிருந்து, குறிப்பாக, கிராமப்புர இந்தியாவின் உழைக்கும் படையிலிருந்து விலகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கற்பனை செய்வது சிரமமாக இருக்கிறது. மேலும், மிகப் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் குடும்பத்தினால் நடத்தப்படும் தொழில்கள் கூலியில்லாமல்உழைத்துக்கொண்டுள்ளனர். இதனை வேலை என்று NSSO ஒப்புக்கொண்டாலும், கூலி அளிக்கப்படாத வேலை என்று வகையினப்படுத்துகிறது.

2014ல் NSSO பெரும் எண்ணிக்கையிலான மாதிரி சர்வே புள்ளிவிவரம் வெளியிடப்பட்டபோது, பத்திரிகை ஒன்றின் வெளியான கட்டுரையில் பொருளாதார அறிஞர்கள் C.P. சந்திரசேகரும் ஜெயாதி கோஷும் தொந்தரவு தரும் கேள்வி ஒன்றை எழுப்பினர். அவர்கள் கேட்டார்கள்: இந்தியாவில் பெண்கள் குறைவாக வேலை செய்கிறார்களா?“ (“Are women really working less in India?”). இந்த இடரார்ந்த கேள்வியைக் கேட்டதன் மூலம் வேலைஎன்பது பற்றிய வரையறையை அவர்கள் கேள்விக்குட்படுத்தினார்கள். குறிப்பாக, இந்திய (நகர்புரகிராமப்புர) வறிய குடும்பத்துப் பெண்கள் உழைக்கிறார்களா? இல்லையா? பொருட்களை (காய்கறிகள், கிழங்குகள், விறகு, கால்நடை தீவனம் இன்ன பிற) சேகரிப்பது, தையல், நெய்தல், இன்ன பிற போன்ற வீட்டு வேலைகள் 92 மற்றும் 93 வகையினங்களின் கீழ் வேலையல்லாதவைஎன்று குறிக்கப்படுகின்றன. குடும்பத்தின் நுகர்வு, குடும்பம்சமூகத்தின் மறு உற்பத்தி, உழைப்புச் சக்தியை உற்பத்தி செய்வது என்ற நடவடிக்கைகள் பெரும்பாலும் பெண்களால் செய்யப்படுகின்றன. அவற்றுக்குக் கூலி வழங்கப்படுவதில்லை என்பதால் அவை வேலை அல்லாதவைஎன்றும், பொருளாதாரமற்ற நடவடிக்கை என்றும் NSSO குறிப்பிடுகிறது. எனவே, சாய்நாத்தின் புகைப்படத்தில் காணப்படும் பல வேலைகள் கண்ணுக்குத் தெரியாதவைஆகிவிடும், NSSOவைப் பொறுத்தவரை வேலையல்லாதவைஆகிவிடும்.

வேலை என்பதன் வரையறையை விரிவாக்கவேண்டும் என்று பெண்ணியவாதிகள் வெகுகாலமாக கோரி வருகின்றனர். மறுவுற்பத்தி வேலை, அரசியல் மற்றும் சமூகச் செயல்பாட்டு வேலைகளை வேலைஎன்பதற்குள் இணைக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். வேலையிடங்கள் பலப்படித்தான தன்மைகொண்டிருப்பதைப் பெண்ணிய ஆய்வுப் பார்வை வெளிப்படுத்தியது… ‘ஒழுங்குபடுத்தப்பட்டவேலையிடம், வீட்டு வேலையும் ஒழுங்குபடுத்தப்படாதபணியிடங்களும், தனியார்பொதுத்துறை என்று இரண்டாக மட்டும் எல்லாவற்றையும் பிரிக்கும் பார்வை; உள்ளேவெளியே; வேலைவேலையல்லாதது என்று ஒப்பிட்டு இப்படியான இரண்டாக மட்டும் எல்லாவற்றையும் பிரிப்பதுபெண்களின் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்று விளக்கினார்கள். சில உழைப்பு நடவடிக்கைகள் மதிப்புக் குறைவானவை என்று கருதப்படுவதற்கும், அந்த செயல்பாடுகளைச் செய்யும் உடல்கள் கண்ணுக்குத் தெரியாதவை ஆகிப் போவதற்கும் பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். செல்வியா பிடரிசி (Silvia Federici) பின்வருமாறு எழுதினார்:

மனித உயிர்களை மறு உற்பத்தி செய்வதற்கான செயல்பாடுகள் துவங்கி, கூலி உறவுக்கு வெளியே இருப்பதாகத் தோன்றும் மிகப் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களிடமிருந்து கூலியைப் பயன்படுத்தி உழைப்பைப் பிழிந்தெடுக்கும் திறன் வரையான இவை அனைத்தும், மனித உழைப்பின் அனைத்துப் பிரிவுகளையும் மதிப்புக் குறைக்கச் செய்கின்றன. அடிமைகளாக்குகின்றன, காலனி நாட்டு குடிமக்கள் ஆக்குகின்றன, சிறைக்கைதிகளாகமனைவிகளாகமாணவர்களாக ஆக்குகின்றன..

(பிடரிசி, 2012:8)

1972ல் (வடக்கு இத்தாலியில் உள்ள) படூவா இத்தாலியில், மரியாரோசா அல்ல கோஸ்டா (Mariarosa Dalla Costa), செல்மா ஜேம்ஸ் (Selma James), செல்வியா பிடரிசி (Silvia Federici) உள்ளிட்ட பெண்கள் கொண்ட குழு வீட்டு வேலைக்குக் கூலிஎன்ற பிரச்சார இயக்கத்தைத் துவங்கியது. வீட்டு வேலையை வேலைஎன்று அரசு ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும், அது உழைப்புச் சக்தியை உற்பத்தி செய்து மற்ற அனைத்து வகையான உற்பத்தியையும் நிகழ்த்தக் காரணமாவதால், அச்செயல்பாட்டுக்கான கூலியை வழங்க வேண்டும் என்றும் அந்தப் பிரச்சார இயக்கம் கூறியது. (Federici, 2012:8). அப்பிரச்சாரம் வாதத்திற்கு வைத்த விஷயம் வீட்டு வேலைக்கான கூலியை ஒரு பெருந்தொகையை ஒருமுறை பெறுவதல்ல. மாறாக, அது ஒரு அரசியல் போராட்டம்.. பெண்களின் வாழ்க்கையில் புரட்சிகர மாறுதல் கொண்டுவருவதற்கான போராட்டம். சமூக மறுவுற்பத்தியில் அதனை நிறுவுவதற்கான போராட்டம். அதனை துவக்கப் புள்ளியில் புரட்சி‘ (“Revolution at Point Zero”) என்று பிடரிசி குறிப்பிடுகிறார். மேலும் பிடரிசி விளக்குகிறார்: முதலாளித்துவ உற்பத்தியின் சுழற்சியும், அது உற்பத்தி செய்த சமூகத் தொழிற்சாலையும் சமையலறையில், படுக்கையறையில், வீட்டில்.. துவங்குகிறது. அவற்றை மையப்படுத்தியதாக இருக்கிறது”. பெண்ணியவாதிகளின் இதுபோன்ற அரசியல் போராட்டங்கள் வீட்டு வேலை என்பது பெண்களின் வேலையாக இருப்பதைக் கேள்விக்கு உள்ளாக்கினார்கள். அவர்கள் பெண்களுக்குக் கூடுதல் வேலை வேண்டும் என்று கோரவில்லை. மாறாக, அவர்கள் முன்னமேயே செய்துவரும் வேலைகளுக்குக் கூலி கொடுக்க வேண்டும் என்றார்கள்.

எண்கள் நமக்குச் சொல்லாது மறைப்பதென்ன?

அதே NSSO தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, உழைப்பாளர் பட்டாளத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு, அதிலும் குறிப்பாக இளம் பெண்களின் எண்ணிக்கை குறைந்தது சாத்தியம் ஆனதற்கான காரணங்கள் என்னவென்று உலக வங்கியின் ஆய்வுத்தாள் தேடியது. கல்விச் சேர்க்கை, திருமண நிலை, சமூகப் பிரிவு, குடும்ப வருமானம் என்பனவற்றின் அடிப்படையில் விளக்கம் கொடுக்க அந்த ஆய்வுத்தாள் முயற்சித்தது. NSSO தரவுகளின் அடிப்படையிலும் முன்னமேயே செய்யப்பட்ட பல ஆய்வுகளின் அடிப்படையிலும் ஆய்வுத்தாள் ஒரு முடிவுக்கு வந்தது. உழைப்பாளர் பட்டாளத்தில் பெண்கள் பங்கெடுப்பது குறைவதற்கு பாரம்பரியமாகச் சொல்லப்படும் காரணங்களாகிய சமூக நெறிமுறைகள், கல்வி பெறுதல், வயது போன்றவை அல்ல குடும்பத்தின் பொருளாதார நிலையின் உறுதித் தன்மைதான் பெருமளவுக்கான காரணம்என்று அறிக்கை முடிவு செய்தது. குடும்பத்தின் வருமானத்தை அதிகமாக்கக் கூலி வேலைக்குத் தற்காகலிகமாகச் செல்லும் துணை தொழிலாளர்களேபெண்கள் என்றும், குடும்ப வருமானம் நிலையானவுடன், அல்லது ஒழுங்கானவுடன் கூலி பெறுகின்ற தொழிலாளர் சந்தையிலிருந்து அவர்கள் விலகிக்கொண்டு வீட்டில் உள்ள உயர்ந்த நிலை உற்பத்தி வேலையில்கவனம் செலுத்துகின்றனர் என்பது பொதுவாக முன்வைக்கப்படும் வாதமாக இருக்கிறது.

குறிப்பிட்டதொரு காலகட்டத்தில் குடும்ப வருமானத்தில் மாற்றம் ஏற்படும்போது பெண்கள் கூலி வேலையில் சேர்கிறார்கள், பின் விலகுகிறார்கள் என்பதுதான் பழமைவாத, பிரதான நீரோட்டத்தைச் சேர்ந்த பொருளாதாவாதிகளின் வாதமாக இருந்து வருகிறது. தரவுகளை ஆய்வு செய்வதும் அவசியமானதுதான். அது என்ன போக்கு நிலவுகிறது என்பதைக் காட்டும். ஆனால், குடும்பத்திலும், சமூகத்திலும் முடிவெடுப்பதில் பெண்களின் நிலையின் மீது செல்வாக்குச் செலுத்தும் பல்வேறு சிக்கலான நிகழ்வுப் போக்குகளை நுணுக்கமாகவும், பண்புசார்ந்தும் ஆய்வு செய்யாமல் முடிவுகளை எடுப்பது மிகுந்த பிரச்சனைக்கு வழிவகுக்கும். மேலும், எது வேலை? எது வேலையல்லாதது? –எது பொருளாதார செயல்பாடு? எது பொருளாதாரமற்ற செயல்பாடு? என்ற வகையினங்கள் குறித்த NSSOவின் வரையறைகள் பிரச்சனைக்குரியவை. கூலி உழைப்பு உறவுகளில் நுழைவதற்கும், விலகுவதற்குமான முடிவெடுப்பதில் பெண்கள் பேரம் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற சிக்கலானபாலின பாரபட்சத்தால் உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்பைத் தரவுகள் வெளிப்படுத்துவதில்லை.

புலம்பெயர்தல், கிராமப்புரத்திலிருந்து / நகர்புரத்திலிருந்து வெளியேற்றப்படுதல், இடப்பெயர்ச்சி, சொத்துரிமை/ சொத்தை அனுபவிக்கும் உரிமை, பல்வகைப்பட்ட தொழிலாளர் உறவுகள், வேலையின் தன்மை அரசு மற்றும் சர்வதேச முகமைகளின் நவ தாராளவாத கொள்கைகள், சர்வ தேச அளவில் நடக்கும் அபகரிப்பு, இயற்கை பொது வளங்களைத் தனியார்மயப்படுத்துதல் இன்ன பிற உள்ளிட்ட பன்முகப்பட்ட நிகழ்வுப் போக்கினை முழுமையாக ஆய்வு செய்யாமல், பெண்கள் ஏன் கூலிவேலையிலிருந்து விலகுகிறார்கள் அல்லது அந்த வேலைகளுக்குப் போகிறார்கள் என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.

ஆனால், பெண்களின் கூலி அளிக்கப்படாத உழைப்பும், நாம் வேலை என்று எதனைக் கருதுகிறோமோ அதற்கும் இடையிலான உறவு பற்றிய மிகவும் முற்போக்கான இன்னும்பெரிய கேள்வி நின்று கொண்டிருக்கிறது. வேலை பற்றிய நமது கருத்தாக்கம் புரட்சிகரமாக மாற்றம் அடைய வேண்டியிருக்கிறது. பல்வேறு வேலைகளைச் செய்யும் பல்வேறு உடல்கள் மதிப்புப் பெறுகின்றன அல்லது மதிப்பை இழக்கின்றன என்பது பற்றிய நமது கருத்தாக்கமும் புரட்சிகரமான மாற்றம் பெற வேண்டியிருக்கிறது. பிடரிசி சுட்டிக்காட்டுவது போல, வீட்டு வேலை செய்யும் பெண்களுக்குக்கு ஏதோ ஒரு கூலி கொடுப்பதாக அதைச் சுருக்கிவிடக் கூடாது. மாறாக, ஒரு முதலாளித்துவ சமூகத்தில் பெண்களின் உழைப்பும் உடலும் குறைவாக மதிப்பீடு செய்யப்படும் மாயையை அகற்றுவதற்கான முற்போக்கு அரசியல் போராட்டம் ஆகும். எனவே, பெண்கள் செய்யும் வேலைக்கு என்ன கூலியோ அதனைக் கொடு என்று கேட்பதைத் தவிர வேறெது புரட்சிகரமானதாக இருக்க முடியும்?

Reference:

Federici, Silvia. 2012. Revolution at Point Zero: Housework, Reproduction, and Feminist Struggle. Oakland, CA: PM Press.

 

This entry was posted in Analysis & Opinions, Women Workers, தமிழ் and tagged , , . Bookmark the permalink.