தடுமாறும் பொருளாதாரமும் தவறான அரசு கொள்கைகளும்: வெங்கடேஷ் ஆத்திரேயாவுடன் ஒரு நேர்காணல்

பிப்ரவரி 20, 21 அன்று 11 மத்திய தொழிற்சங்கங்களும் பல பிராந்திய தொழிற்சங்கங்களும் இணைந்து நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் பல பகுதிகளில் இந்த போராட்டம் வெற்றி யடைந்தும் இந்திய அரசாங்கமும் ஊடகங்களும் தொழிலாளர் போராட்டங்கள் குறித்த செய்திகளை வெளியிடவில்லை. இந்திய பொருளாதார வளர்ச்சி குறையும் நிலையில் இந்திய அரசாங்கம் பட்ஜெட் பற்றாக்குறையை நீக்குவதற்கு தொழிலாளர் வர்க்கத்தின் பொதுநலன்களுக்கு உபயோகப்படுத்தும் செலவுகளை குறைத்து வருகின்றது. பல துறைகளில் அன்னிய நேரடி முதலீடு, பொதுத்துறைகள் தனியார்மயமாக்குதல், போதியமில்லாத ஊதிய உயர்வு போன்ற காங்கிரஸ் அரசின் பொது மக்களுக்கு எதிரான கொள்கைகளை தொழிலாளர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். மேலும் அனைத்து தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ10000, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை கோருகின்றனர்.

இந்திய அரசின் பொருளாதார கொள்கைகள் குறித்தும் இதனால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை குறித்தும் பொருளாதார வல்லுனர் வெங்கடேஷ் ஆத்ரேயா விளக்குகிறார்.

கேள்வி 1:

2013 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 5 சதமாக குறையும் என இந்திய அரசாங்கம் கூறியுள்ளது.

1. இந்த பொருளாதார வளர்ச்சி குறைவினால், இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் நிலை உள்ளதா?

2. இந்திய பொருளாதார வளர்ச்சி ஏன் குறைந்து வருகிறது? உலகப் பொருளாதார நெருக்கடி மட்டும் காரணமா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா?

3. பத்திரி;க்கைகளில் வங்கிகளும், இந்திய நிறுவனங்கள் முக்கியமாக ஐ.டி சேவை நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளன. மேலும் லாபத்தில் வளர்ச்சியும் கண்டுள்ளன. பொருளாதார நெருக்கடியின் மத்தியில் லாபம் அதிகரிப்பதை நாம் எவ்வாறு கணிக்க வேண்டியுள்ளது?

4. தொழிலாளர்கள், விவசாயிகள், மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு இதனால் என்ன பாதிப்புகள்?

கேள்வி 2:

பா. சிதம்பரம் மீண்டு;ம் நிதி அமைச்சராக்கப்பட்ட பின்னர், இந்திய அரசாங்கம் தாராளமயமாக்கப் பணிகளை துரிதமாக செயல்படுத்தி வருகின்றது. பல துறைகளில் அன்னிய நேரடி முதலீடு, எரிவாயு விலைகளில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துதல், பணவீக்கம் அதிகமாக இருந்தும் வட்டி விகிதத்தை குறைத்தல் போன்ற கொள்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகி;ன்றன.

1. இந்த கொள்கைகளை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்?

2. பொருளாதார மந்த நிலையை நீக்குவதற்கு இந்த கொள்கைகள் உதவுமா?

3. இந்த கொள்கைகளினால் என்ன பாதிப்புகள் உள்ளன?

4. பொருளாதார வளர்ச்சிக்கு மாற்று கொள்கைகள் என்னவாக இருக்கலாம்?

கேள்வி 3:

இந்த கட்டத்தில் இந்திய தொழிற்சங்கங்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1. குறைந்த பட்ச ஊதிய உயர்வு, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, பொதுத்துறை தனியாரமயமாக்குதலை கைவிடுதல் போன்ற தொழிற்சங்க கோரிக்கைகள் எதற்காக?

2. இந்த கோரிக்கைகளினால் அரசாங்கத்திற்கு பட்ஜெட் இடையூறுகள் ஏற்பட்ட பணவீக்கம் அதிகரிக்கும் நிலை ஏற்படுமா?

3. இந்திய பொருளாதார வளர்ச்சியை இந்த கோரிக்கைகளும் வேலை நிறுத்தமும் எவ்வாறு பாதிக்கும்?

This entry was posted in Analysis & Opinions, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , , . Bookmark the permalink.