இந்தியப் பொருளாதாரத்தின் நேர்மையற்ற வளர்ச்சி – அமித் பாதுரி

(இந்த நேர்காணல் கீற்று இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.)
அமித் பாதுரி ஒரு தேர்ந்த பொருளாதார நிபுணர். உலகமயலாக்கலுக்குப் பின்னர் இந்தியாவிலும் பிற வளரும் நாடுகளிலும் உருவாகி நடைமுறைப் படுத்தப்படும் புதிய செவ்வியல் பொருளாதாரக் கொள்கைகளையும் பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் வளர்ச்சித் திட்டங்களையும் தொடர்ச்சியாக அவர் விமர்சித்து வருகிறார். வளர்ச்சிக்கான செயல் திட்டங்களில் பங்கேற்கும் உரிமை மறுக்கப்பட்ட பெரும்பான்மை ஏழை மக்களின் வலியையும் ஆற்றல்களையும் ஒன்று திரட்டி மாற்று வளர்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைக்கும் பணியை செய்து வருகிறார். DEVALOPMENT WITH DIGNITY(2005) மற்றும் THE FACE YOU WERE AFRAID TO SEE(2009)ஆகியவை இவர் எழுதிய பிரபலமான நூல்கள். புதுதில்லியில் உள்ள “COUNCIL FOR SOCIAL DEVALAPMENT” வருகைதரு பேராசிரியராக இருக்கிறார். இத்தாலியில் உள்ள “PAVIA UNIVERSITY”ல் பன்னாட்டு அளவில் தேர்ந்தெடுக்கப் பட்ட பேராசிரியராக இருக்கிறார்.அமித் பாதுரி இந்தியப் பொருளாதாரத்தில் வேலைப் பகிர்வு, வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவை குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். அரை நிலப்பிரபுத்துவத்தின் கீழ் விவசாய பின்னடைவு குறித்து ஆய்வு செய்துள்ளார். பின்வரும் நேர்காணல் அவர் இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி மாதிரியை விமர்சிப்பதோடு, பழைய பொருளாதார திட்டங்களின் குருட்டுத்தனத்தினால் காணத்தவறிய பகுதிகளை வெளிச்சமிட்டு காட்டுகிறார்.

மேலும் படிக்க http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22689%3A2013-01-20-19-40-50&catid=1%3Aarticles&Itemid=264&utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+keetru%2FmAfm+%28Keetru+RSS+Feed%29

This entry was posted in Analysis & Opinions, Political Economy, Working Class Vision, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.