Making Of the Madras Working Class: புத்தக வெளியீடு

 

The Making of the Madras Working Class
D. Veeraragahavan
ISBN 978-93-80118-16-1
©2013 Veeraraghavan Memorial Trust
First Published: 2013 by Left Word Books
Pages 358
Price Rs 750

 

சென்னை பெருநகர தொழிற்சங்க வரலாறு என்ற தலைப்பில் மறைந்த மார்க்சியவாதியும், ஐஐடி பேராசிரியருமான திலீப் வீரராகவனுடைய புத்தகம் ஆங்கிலத்தில் “Making of the Madras Working Class” என்ற தலைப்பில் சென்னை மைலாப்பூர் ராஜசுதா மண்டபத்தில் பிப்ரவரி 23 அன்று வெளியிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ் காரத் புத்தகத்தை வெளியிட்டார்.

சுதந்திரத்திற்கு முன்னர் சென்னையில் துவங்கிய மெட்ராஸ் லேபர் யூனியனுடைய ஆரம்பம் மற்றும் வளர்ச்சி குறித்தும், மெட்ராஸ் தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களை குறித்தும் அந்நேரத்தில் வழிநடத்திய தொழிற்சங்க தலைவர்கள் குறித்தி தோழர் திலீப் நடத்திய ஆய்வை மையமாகக் கொண்டு இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் தொழிலாளர் வர்க்கத்தின் வரலாற்றை மிகவும் துல்லியமாகவும் விரிவாகவும் பதிகிறது.

புத்தக ஆய்விற்காகவும் அதன் பதிப்பினை கொண்டு வருவதற்காகவும் கண்பார்வையற்ற பேராசிரியர் திலீபின் பெரும் முயற்சிகளைப் பற்றி புத்தகத்தை அறிமுகம் செய்த பேராசிரியர் வெங்கடாசலபதி கூறினார். கார்ல் மார்க்ஸ் நூலகத்தை நடத்தி வரும் தோழர் எஸ்.எஸ் கண்ணன், ஆய்வின் போது பல குறிப்புகளை வாசித்து காட்டியதையும், படிப்பதற்கும், கேட்பதற்கும் தோழர் திலீபின் படிப்பு தாகத்தையும், படித்து காட்டியபின் அதை மறக்காமல் தக்க வைக்கும் திலிபீன் ஆற்றலையும் பற்றி நினைவு கூர்ந்தார்.

புத்தகத்தை வெளியிட்ட தோழர் பிரகாஷ் கராத் ‘இந்தியாவின் முதல் அமைப்புரீதியாக அமைக்கப்பட்ட தொழிலாளர் வர்க்க போராட்டத்தை பற்றிய இந்த விரிவான ஆய்வை’ லெஃப்ட் புக்ஸ் பதிப்பகம் வெளியிடுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். புத்தகத்திற்கு பல தகவல்களை பகிர்ந்து கொண்ட தொழிற்சங்கத் தலைவர்களுடன் தான் சென்னையில் படிக்கும் போது மேற்கொண்ட தொடர்புகளை காரத் நினைவு கூர்ந்தார். ‘இன்றும் கூட தொழிலாளர் வர்க்கத்திற்கு சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. முதலாளிகள் அனுமதிக்கும் சங்கங்களே அங்கீகரிக்கும் நிலையில், கடந்த தலைவர்களின் போராட்டங்கள் நமக்கு படிப்பினையாக உள்ளன’ என கராத் கூறினார். ‘தொடர்ந்து சுரண்டப்படும் நிலையிலும் தொழிலாளர் வர்க்கம் தங்களுடைய போராட்டங்களை முன்னிறுத்து கொண்டு வருகிறது. கடந்த 3 வருடங்களாக கட்சிக்கு அப்பாற்பட்டு அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து தொழிலாளர் பிரச்சனைகளை முன்னிறுத்தி வருகின்றன’ என காரத் கூறினார்.

லெஃப்ட் புக்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த புத்தகம் தேனாம்பேட்டையில் உள்ள பாரதி புத்தகாலயத்தில் ரூ750க்கு விற்கப்படுகிறது.

This entry was posted in Art & Life, Working Class Vision and tagged , . Bookmark the permalink.