இந்தியாவின் முதல் உழைப்பாளர் தினக் கொண்டாட்டம்

(தோழர் திலீப் வீரராகவனின் ‘மெட்ராஸ் தொழிற்சங்க வரலாற்றிலிருந்து (Making of the Madras Working Class)சுருக்கப்பட்டுள்ள தமிழாக்கம்)


1922-1923களில் வெளிப்பட்ட இடதுசாரி கோட்பாடுகளில் குறிப்பாக 1921 வேலைநிறுத்தப் போராட்டங்களில் தொழிலாளர்களை ஆதரித்து சிங்காரவேலு (செட்டியார்) பெரிய பங்கு வகித்தார். ஆனால் அவர் எந்த சங்கத்திலும் பொறுப்பு எடுக்கவில்லை. அவருடைய முயற்சியினாலேயே இந்தியாவின் முதல் மே தினக் கொண்டாட்டம் 1923 மே 1 அன்று மெட்ராஸில் அனுசரிக்கப்பட்டது. அதே தினத்தில் அவர் இந்திய தொழிலாளர்-விவசாயி கட்சியையும் ஆரம்பித்தார். சீர்திருத்தம் மற்றும் சந்தர்ப்பவாதம் ஆகியவற்றை கொள்கைகளாக கொண்டிருந்த கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அவருடைய கட்சி தொழிலாளர்களுக்கான அரசியல்-பொருளாதார கொள்கைகளை அடிப்படையாக கொண்டிருந்தது. சக்கரை செட்டியார், திரு வி.க, ஸ்ரீராமுலு நாயுடு போன்ற தொழிலாளர் தலைவர்கள் சிங்காரவேலு புதுகட்சி ஆராமபிப்பதை எதிர்த்தனர். சுவதர்மா பத்திரிக்கை அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் மட்டுமே தொழிலாளர்களின் பிரதிநிதிக்கான உரிமை கொண்டுள்ளது என எழுதியது. புதுகட்சிக்கு எதிராக தொழிலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. தேசிய தொழிற்சங்கத் தலைவர்களும் புதுகட்சி தொழிலாளர்களை பிளவுபடுத்தும் எனக் கருதினர். கடைசியில் ஆங்கிலேய அரசு சிங்காரவேலுவை கான்பூர் கம்யூனிஸ்ட் சதிக் கேசில் கைது செய்தபின் சிங்காரவேலுவின் கட்சி முயற்சி தோல்வியடைந்தது. தொழிற்சங்கம் அமைக்காமல் கட்சி அமைப்பதில் உள்ள சிக்கல்களையும், உழைக்கும் வர்க்கம் உண்மையான அரசியல் முதிர்வு பெறுவது குறித்து தொழிற்சங்கத் தலைவர்களின் ஐயத்தையும் சிங்காரவேலுவின் முயற்சி எடுத்து காட்டுகின்றது.

…ஆனாலும் சிங்காரவேலுவின் முயற்சிகள் மெட்ராஸ் பட்டினத்தில் ஒருங்கிணைந்த சோசலிச, கம்யூனிச அமைப்பை உருவாக்கவில்லை அது கதார் கட்சியை சார்நத முன்னாள் கடலோடி ஆமீர் ஹைதர் கானை சாரும். கதார் கட்சி மற்றும் ஐரோப்பிய கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு கொண்டிருந்த கான் மீரத் சதித் திட்டத்தில் குற்றம் சுமத்தப்பட்டு ரஷ்யாவிற்கு தப்பி ஓடினார். 1931ல் திரும்பிய அவர் கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனலைச் சாரந்த தோழர் லன்ட் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டு அங்கு அவர் வீ.கே. நரசிம்மன், கே. பாஷ்யம்,கே. சத்யநாராயணா, பி.சுந்தரராம ரெட்டி(தெலுங்கானா புரட்சியில் பெரும் பங்கு வகித்தார்), ராஜவடிவேலு, ‘ரஷ்யா’ மாணிக்கம் ஆகிய தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை ஒருங்கணைத்து தொழிலாளர் இளைஞர் லீக் எனும் அமைப்பை உருவாக்கினார். 1932 மேதினத்தை லீக் மெட்ராஸில் கொண்டாடியது. மே 1932ல் கானும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். 1934ல் கம்யூனிஸ்ட் கட்சுயும் லீகும் தடைசெய்யபட்டன. கான் கைது செய்யபட்ட பின்னர் புரட்சி வேலைகளை சுந்தரய்யா மற்றும் அவரது கூட்டாளிகள் தொடர்ந்தனர்.

சைமன் கமிஷனை புறக்கணித்தல, ஒத்துழையாமை இயக்கம் போன்ற காங்கிரஸ் போராட்டங்களில் சுந்தரய்யா மற்றும் சத்யநாராயணா கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர். இரண்டாவது ரவுண்ட் டேபிள் கருத்தரங்கம் தோல்வியடைந்தவுடன், ஒத்துழையாமை இயக்கத்தில் கைது செய்யபட்ட பல காங்கரஸ் இளைஞர் போராளிகள் புரட்சகர இளைஞர்களின் தொடர்பினால் சோசலிச iகாள்கைகளால் கவரப்பட்டனர். மேலும் உலகம் முழுவதும் முதலாளித்துவம் பொருளாதார நெருக்கடியில் வீழ்ச்சியடைந்த போது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் சோசலிச ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சி சோசலிச கொள்கையை மேலும் பரப்பியது. 1934ல் பாட்னாவில் காங்கிரஸ் சோசலிச கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

காங்கிரஸிலிருந்து வெளியேறிய பிரதிநிதிகள் சோசலிச கட்சியை துவக்க முயற்சித்து வந்த போது, சோவியத் யூனியன் சென்று வந்த இ.வி.ராமசாமி நாயக்கர் (பெரியார்) 1933ல் சமூக நீதிக்காக பாடுபடவும், ஜாதியை எதிர்த்தும் சுயமரியாதை இயக்கத்தை துவக்கினார். சிங்காரவேலுவுடன் சேர்ந்து சமூக-அரசியல் திட்டம் கொண்ட இயக்கத்தை அவர் முன்வைத்தார். இத்திட்டத்தின் படி, சுயமரியாதை இயக்கம் இரண்டு பாதைகளில் கொண்டு செல்வதாக இருந்தது: சமூக சீர்திருத்தத்தை உள்ளடக்கிய சுயமரியாதை இயக்கம் ஒன்றாகும். இரண்டாவாதக ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கோட்பாடுகளை உள்ளடக்கிய சமதர்ம கட்சி(சுயமரியாதை லீக்)யில் சிங்காரவேலுவும், ஜீவானந்தமும் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர். சோசலிசம், மாரக்ஸ், லெனின் கருத்துகளை கொண்ட பல கட்டுரைகள், புத்தகங்களை வெளியிட்ட அவர்கள், தொழிலாளர்களையும், ஒடுக்கப்பட்ட சமூகங்களையும் இணைத்து சோசலிச பாதையில் கொண்டு செல்ல உறுதி பூண்டனர்.

மெட்ராஸ் அரசாங்கம் இந்த முயற்சிகளை கண்டு கலங்கி, பெரியாரை கைது செய்தது. 1934ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும், தொழிலாளர் இளைஞர் லீகையும் தடை செய்யபட்ட பின்னர், சுயமரியாதை இயக்கமும் தடைசெய்யப்படக்கூடும் என்ற சூழ்நிலையில் பெரியார் அரசுடன் நேரடியான மோதலை கைவிட்டார். ஆங்கிலேய அரசின் கீழ் சுயமரியாதை இயக்க கொள்கைகள் அமல்படுத்துவது மேன்மையானது எனக் கருதப்பட்டது. சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் திட்டம் கைவிடப்பட்டவுடன் ஜீவானந்தம் மற்றும் தோழர்கள் சுயமரியாதை இயக்கத்திலிருந்து வெளியேறி தமிழ்நாடு சுயமரியாதை சமதர்ம கட்சியை ஆரம்பித்தனர். 1936ல் திருச்சி மாநாட்டில் தோழர் டாங்கே கலந்து கொண்ட பின்னர் காங்கிரஸ் சோசலிச கட்சியில் இணைந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும், தொழிலாளர் இளைஞர் லீகையும் தடை செய்தவுடன், சுந்தரய்யா மற்றும் கம்யூனிஸ்டுகள் தொழிலாளர் பாதுகாப்பு லீகை ஆரம்பித்தனர். இதில் ஏ.எஸ்.கே ஐயங்காரும் இணைந்தார். தொழிலாளர் பாதுகாப்பு லீக் கார்ப்பரேஷன் துப்புரவு தொழிலாளர்கள், பிரஸ் தொழிலாளர்கள், மற்றும் மூக்குப்பொடித் தொழிலாளர்களை ஒருங்கிணைத்தனர்.

This entry was posted in Art & Life, Working Class Vision, Worksite Accidents/Deaths, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.