மேதினம் குறித்து ரோசா லக்சம்பர்க்

Translated from the  English version of Rosa Luxemburg’s article What are the orgins of May Day?

ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலை நேரம் என்ற கொள்கையை அடைவதற்கு தொழிலாளர் வர்க்க விடுமுறை என்ற னைநய ஆஸ்திரேலியாவில் முதலில் துவங்கியது. 1856ல் தங்களுடைய வேலைகளை முழுவதுமாக நிறுத்தி கூட்டம் மற்றும் கேளிக்கைகளை நடத்த தொழிலாளர்கள் தீர்மானித்தனர். 21 ஏப்ரலில் முதல் முறையாக நடத்திய இந்த விடுமுறையை ஆஸ்திரேய தொழிலாளர் வர்க்கம் உடனடியாக ஏற்று கொண்டதால் ஒவ்வொரு வருடமும் செயல்படுத்த முடிவு செய்யபட்டது.

உண்மையில், தாங்களே முடிவு செய்து நடத்திய முழு வேலை நிறுத்தத்தை விட எந்த நிகழ்வு தொழிலாளர்களுக்கு, தங்கள் பலத்தில் நம்பிக்கையூட்டக் குடியதாக இருக்கும்? தங்களுடைய படையை திரட்டுவதை தவிர தொழிற்சாலைகளின் அடிமைகளாக உள்ளபவர்களுக்கு வேறு என்ன ஊக்கமளிக்க முடியும்? அவ்வாறு ஆஸ்திரேலியாவில் ஆரம்பிக்கபட்ட தொழிலாளர் தினம் மற்ற நாடுகளுக்கும் பரவியது.

இதில் ஆஸ்திரேலியர்களுக்கு பின்னர் தொடர்ந்தது அமெரிக்கர்கள. 1886 ஆம் ஆண்டு உலகளாவிய வேலை நிறுத்தத்தை மே 1 அன்று அனுசரிக்க முடிவு செய்தனர். அன்று 200,000 தொழிவலாளர்கள் வேலையை நிறுத்தி நாளைக்கு 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை எழுப்பினர். அதன் பின்னர் சட்டரீதியாகவும் காவல்துறையின் துன்புறுத்தல்களினால் தொழிலாளர் தினத்தை அனுசரிக்க முடியாமல் போனது. ஆனால் 1888ல் மீண்டும் 1890 மே 1அன்று தொழிலாளர் தினத்தை அனுசரிக்க முடிவு செய்யபட்டது.

ஐரோப்பாவில் தொழிலாளர் இயக்கம் வலுப்பெற்று வந்து, 1889ல் சர்வதேச தொழிலாளர் காங்கிரஸில் தஙக்ளுடைய சக்தியை வெளிப்படுத்தினர். 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் 8 மண நேர வேலை முதல் கோரிக்கையாக வைக்கப்பட்டது. பிரஞ்ச் பிரதிநிதி இந்த கோரிக்கையை வலுப்படுத்து சர்வதேச வேலை நிறுத்தத்தை முன்மொழிந்தார். ஏற்கனவே அமெரிக்கத் தொழிலாளர்கள் முடிவு செய்திருந்த மே 1 1890 அன்று வேலை நிறுத்தம் என மாநாட்டில் தீர்மானம் செய்யப்பட்டது.

30 வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் முடிவு செய்யபட்டதை போல முதலில் தொழிலாளர்கள் ஒரு முறை செய்யக்கூடிய போராட்டம் என்றே நினைத்தார்கள். யாரும் இதை ஒவ்வொரு வருடமும் செயல்படுத்த நினைக்கவில்லை. ஆனால் தொழிலாளர்கள் உடனடியாக பெருமளவில் இதை ஏற்று கொண்டதால், ஒவ்வொரு வருடமும் உழைப்பாளர் தினம் கொண்டாட முடிவு செய்யபட்டது.

மேதின கோரிக்கையான 8 மணி நேர வேலை கோரிக்கை அடைந்த பின்னரும், மேதினம் கைவிடப்படவில்லை. ஆளும் மற்றும் மத்திய வர்க்கத்திற்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டம் நடக்கும் வரை மேதினம் அவர்களுடைய ஒவ்வொரு கோரிக்கைகளை பிரதிபலிக்கக் கூடியதாக இருக்கும். தொழிலாளர் வர்க்கம் தன்னுடைய போராட்டத்தில் வெற்றி கொள்ளும் போது, மனிதர்களின் கடந்த போராடங்களை நினைவு கூறும் தினமாக மாறும்.

 

This entry was posted in Resources, Working Class Vision, தமிழ் and tagged , . Bookmark the permalink.